பிப்ரவரி மாத பிரசாதங்கள் : சஞ்சீவினி பணியாரம்
Page 1 of 1

‘என்னோட புது ஹேர் ஸ்டைல் நல்லா இருக்கா? இது எங்க வீட்ல புதுசா வாங்கினது, எப்படி இருக்கு? இந்த டிரெஸ், என் பர்த்டேக்கு என் கணவர் கொடுத்த கிஃப்ட்; சூப்பரா இல்லே? இந்த டிஷ் நானே செஞ்சது, டேஸ்ட் எப்படி இருக்கு?’’ என்று தம்மிடம் இருக்கும் பொருளைப் பற்றியோ, தாம் தயாரிக்கும் உணவு வகையைப் பற்றியோ பிறர் அபிப்ராயம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள விழைவது மனித இயல்பு. முக்கியமாக புதிதாக முயற்சி செய்த ஒரு உணவுப் பொருளை பிறர் பாராட்டிவிட்டால் அதைப் போல சந்தோஷம் வேறில்லை.
காரணம், எவ்வளவுதான் அந்தத் தயாரிப்பைப் பிறர் சொல்லிக் கேட்டிருந்தாலும் ஏதேனும் புத்தகத்தில் படித்திருந்தாலும் அதைத் தயாரிப்பதில் நம் கைப்பக்குவம் -ஒரிஜினாலிடி - இருக்கிறதே, அது பாராட்டுப் பெறும்போதுதான் பெருமை மனதை நிறைவிக்கிறது. இப்படி பெருமை கொள்வது மனித உறவுக்குள்ளோ, நட்புக்குள்ளோ மட்டுமல்லாமல், இறைவனிடமிருந்தும் கிடைக்கும்போது அதற்கு மதிப்பே நிர்ணயிக்க முடியாது.
அப்படித்தான் நாம் தினசரி சமையலில் கொஞ்சமோ அல்லது புது உணவுப் பொருளில் கொஞ்சமோ நிவேதனம் என்ற பெயரில் கடவுளுக்கு சமர்ப்பித்துவிட்டு அவர் அரூபமாகப் பாராட்டுவதை உணர்ந்து பெருமை கொள்கிறோம்; அதற்காக நன்றியும் தெரிவித்துக் கொள்கிறோம்.
-சந்திரலேகா ராமமூர்த்தி
என்னென்ன தேவை?
சஞ்சீவினி மாவு (காதி கிராமோத் பவனில் கிடைக்கும்) - 1 கப், தோசை மாவு - 1 கப், கேரட் துருவல் - கால் கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிது, பொடியாக நறுக்கிய தேங்காய் - கால் கப், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - அரை டீஸ்பூன், உடைத்த மிளகு, சீரகம் - 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
மாவில், எண்ணெய் தவிர மற்ற எல்லாவற்றையும் சேர்த்து, தண்ணீர் விட்டு, இட்லி மாவு பதத்துக்குக் கரைக்கவும். பின் பணியாரக் கல்லில் ஊற்றி, சிறிது எண்ணெய் விட்டு, வேக வைத்துத் திருப்பிப் போட்டு, நன்கு வேகவிட்டு எடுக்கவும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பிப்ரவரி மாத எண் ஜோதிடம் : 1, 10, 19, 28
» பிப்ரவரி மாத எண் ஜோதிடம் : 2, 11, 20, 29
» பிப்ரவரி மாத எண் ஜோதிடம் : 3, 12, 21, 30
» கருப்பட்டிப் பணியாரம்
» பிப்ரவரி மாத எண் ஜோதிடம் : 4, 13, 22, 31

Permissions in this forum:
You cannot reply to topics in this forum