தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தவறுகளிலிருந்து பாடம் கற்போம்

Go down

தவறுகளிலிருந்து பாடம் கற்போம் Empty தவறுகளிலிருந்து பாடம் கற்போம்

Post  meenu Sat Mar 09, 2013 2:51 pm

இயேசு தம்மை நம்பிய யூதர்களை நோக்கி, ‘‘என் வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர் கள். உண்மையை அறிந்தவர்களாயும் இருப்பீர்கள். உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்’’ என்றார். யூதர்கள் அவரைப் பார்த்து, ‘‘எங்களுக்கு விடுதலை கிடைக்கும் என நீர் எப்படிச் சொல்லலாம்? நாங்கள் யாருக்கும் எப்போதும் அடிமைகளாய் இருந்ததில்லை. நாங்கள் ஆபிரகாமின் மரபி னர் ஆயிற்றே!’’ என்றார்கள். அதற்கு இயேசு, ‘‘பாவம் செய்யும் எவரும் பாவத்திற்கு அடிமை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். வீட்டில் அடிமைக்கு நிலையான இடம் இல்லை; மகனுக்கு அங்கு என்றென்றும் இடம் உண்டு. மகன் உங்களுக்கு விடுதலை அளித்தால் நீங்கள் உண்மையிலே விடுதலை பெற்றவர்களாய் இருப்பீர்கள். நீங்கள் ஆபிரகாமின் மரபினர் என்பது எனக்குத் தெரியும்.

ஆனால் என் வார்த்தை உங்கள் உள்ளத் தில் இடம் பெறாததால் நீங்கள் என்னைக் கொல்ல முயலுகிறீர்கள். நான் என் தந்தையிடம் கண்டதைச் சொல்கிறேன். நீங்கள் உங்கள் தந்தையிடமி ருந்து கேட்டதைச் செய்கிறீர்கள்’’ என்றார். அவர்கள் அவரைப் பார்த்து, ‘‘ஆபிரகாமே எங்கள் தந்தை’’ என்றார்கள். இயேசு அவர்களிடம், ‘‘நீங்கள் ஆபிரகாமின் மக்கள் என்றால் அவரைப்போலச் செயல்படுவீர்கள். ஆனால் கடவுளிடமிருந்து கேட்டறிந்த உண்மையை உங்களுக்கு எடுத்துரைத்த எ ன்னை நீங்கள் கொல்ல முயலுகிறீர்கள். ஆபிரகாம் இப்படிச் செய்யவில்லையே! நீங்கள் உங்கள் தந்தையைப் போலச் செயல்படுகிறீர்கள்’’ என்றார். அவர்கள், ‘‘நாங்கள் பரத்தமையால் பிறந்தவர்கள் அல்ல; எங்களுக்கு ஒரே தந்தை உண்டு; கடவுளே அவர்’’ என்றார்கள். இயேசு அவர்களிடம்,
‘‘கடவுள் உங்கள் தந்தையெனில் நீங்கள் என்மேல் அன்பு கொள்வீர்கள். நான் கடவுளிடமிருந்தே இங்கு வந்துள்ளேன்.

நானாக வரவில்லை; அவரே என்னை அனுப்பினார். நான் சொல்வதற்கு செவி சாய்க்க உங்களால் இயலவில்லை. எனவேதான் நான் சொல்வதை நீங்கள் கண்டுணர்வதில்லை. சாத்தானே உங்களுக்குத் தந்தை. உங்கள் தந்தையின் ஆசைப்படி நடப்பதே உங்கள் விருப்பம். தொடக்க முதல் அவன் ஒரு கொலையாளி. அவனிடம் உண்மை இல்லாததால் அவன் உண்மையைச் சார்ந்து நிற்கவில்லை. அவன் பொய் பேசும்போதும் அது அவனுக்கு இயல்பாக இருக்கிறது.
ஏனெனில், அவன் பொய்யன்; பொய்மையின் பிறப்பிடம். நான் உண்மையைக் கூறுவதால் நீங்கள் என்னை நம்புவதில்லை. என்னிடம் பாவம் உண்டு என்று உங்களுள் யாராவது என்மேல் குற்றம் சுமத்த முடியுமா? நான் உங்களிடம் உண்மையைக் கூறியும் நீங்கள் ஏன் என்னை நம்புவதில்லை?

கடவுளைச் சார்ந்தவர் கடவுளின் சொல்லுக்குச் செவி சாய்க்கிறார். நீங்கள் கடவுளைச் சார்ந்தவர்கள் அல்ல. ஆதலால் அவர் சொல்லுக்குச் செவி
சாய்ப்பதில்லை’’ என்றார். யூதர்கள் இயேசுவைப் பார்த்து, ‘‘நீ சமாரியன். பேய் பிடித்தவன் என நாங்கள் சொல்வது சரிதானே?’’ என்றார்கள். அதற்கு இயேசு, ‘‘நான் பேய் பிடித்தவன் அல்ல; என் தந்தைக்கு மதிப்பளிப்பவன். ஆனால் நீங்கள் என்னை அவமதிக்கிறீர்கள். நான் எனக்குப் பெருமை தேடுவதில்லை. அதை எனக்குத் தேடித்தருபவர் ஒருவர் இருக்கிறார். அவரே தீர்ப்பளிப்பவர். என் வார்த்தையைக் கடைப்பிடிப்போர் என்றுமே சாக மாட்டார்கள் என உறுதி யாக உங்களுக்குச் சொல்கிறேன்’’ என்றார். யூதர்கள் அவரிடம், ‘‘நீ பேய் பிடித்தவன்தான் என்பது இப்போது தெரிந்துவிட்டது.

ஆபிரகாம் இறந்தார்; இறைவாக்கினர்களும் இறந்தார்கள். ஆனால், என் வார்த்தையைக் கடைப்பிடிப்போர் என்றுமே சாக மாட்டார்கள் என்கிறாயே! எங்கள் தந்தை ஆபிரகாமைவிட நீ பெரியவனோ? நீ யாரென்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்?’’ என்றார்கள். இயேசு மறுமொழியாக, ‘‘நானே என்னைப் பெருமைப்படுத்தினால், அது எனக்குப் பெருமை இல்லை. என்னைப் பெருமைப்படுத்துபவர் என் தந்தையே. அவரையே நீங்கள் உங்கள் தந் தை என்றும் சொல்கிறீர்கள். ஆனால் அவரை உங்களுக்குத் தெரியாது; எனக்குத் தெரியும். எனக்கு அவரைத் தெரியாது என நான் சொன்னால் உங்களைப்போல நானும் பொய்யனாவேன். அவரை எனக்குத் தெரியும். அவருடைய வார்த்தையையும் நான் கடைப்பிடிக்கிறேன். உங்கள் தந்தை ஆபிரகாம் நான் வரும் காலத்தைக் காண முடியும் என்பதை முன்னிட்டு பேருவகை கொண்டார். அதனைக் கண்டபோது மகிழ்ச்சியும் கொண்டார்’’ என்றார்.

யூதர்கள் அவரை நோக்கி, ‘‘உனக்கு இன்னும் ஐம்பது வயதுகூட ஆகவில்லை, நீ ஆபிரகாமைக் கண்டிருக்கிறாயா?’’ என்று கேட்டார்கள். இயேசு அவர்களிடம், ‘‘ஆபிரகாம் பிறப்பதற்கு முன்பே நான் இ ருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்’’ என்றார். இதைக் கேட்ட அவர்கள் அவர்மேல் எறியக் கற்களை எடுத்தார்கள். ஆனால் இயேசு மறைவாக நழுவி கோயிலிலிருந்து வெளியேறினார் (யோவான் 8: 31-59). எதிலும் எந்த ஒரு சூழலிலும் எப்பொழுதும் ஒரு சிறு பிழைகூட இல்லாத பூரணத்துவத்தை எதிர்பார்க்கும் பலர் இருக்கிறார்கள். அதை அவர்களால் அடைய முடிவதில்லை. இந்த சமயத்தில் ஒன்றை மட்டும் புரிந்துகொள்வோம். முழுமை என்பது, அதாவது பிழையே இல்லாத முழுமை என்பது கடவுளுக்கு மட்டும்தான் சொல்லப்படக்கூடியது. மனிதர்கள் என்ற முறையில் நாம் எல்லோருமே சிறு சிறு பிழைகளோடுதான் எந்த செயலையும் செய்து முடிக்கிறோம்.

எந்த ஒரு சமயத்திலும் முற்றிலும் பிழையே இல்லாத நிலைக்கு நம் செயல்பாடுகளை வளர்த்துக் கொள்ள முடியாது. தளராத முயற்சிகளினாலும் நம்முடைய அறிவைப் பெருக்கிக் கொண்டே போகலாம். செய்முறை பழக்கங்களை மேலும் மேலும் பெருக்கிக் கொள்வதால் நம்முடைய ஆற்றலைப் பெருக்கிக் கொண்டே போகலாம். அப்படிச் செய்துமே முழுக்க முழுக்க பிழையே இல்லாத ஒரு நிலைமையை உரு வாக்க முடியாது. எந்த ஒரு மனிதரும் ‘மோட்சம்’ என்ற நிலையை அடையும்பொழுதுதான் பிழையற்ற முழுமையை அடைகிறார். அதைக் ‘கடவுளைக் காணல்’ என்று சொல்வார்கள். இந்த ஒரு நிலையில் மனிதன் சாதாரண நிலைமையிலிருந்து வேறுபடுகிறான். அவன் கடவுளுடன் ஒன்றி விடுகிறான்.

அவருக்கு பங்காளிபோல ஆகிவிடுகிறான். அவன் மீண்டும் இந்த பூமிக்கு வந்து எதையும் கற்க வேண்டிய நிலைமையில் இல்லை. பிறப்பு, இறப்பு எனும் சூழலில் அவன் இனிமேலும் சிக்க மாட்டான். தவறுகள் செய்வது என்பது மனிதனின் இயற்கை. தவறுகள் நேர்வதில் அசாதாரணம் ஒன்றும் இல்லை. தவறுகளிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்வது ஒன்றுதான் முறை. கற்றபின் படிப்படியாக முன்னேறுவதுதான் அழகு. எந்த ஒரு நிலைமையிலும் வாழ்க்கையில் முடக்கப்பட்டுவிடக் கூடாது. நிரந்தரமாக முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும். வாழ்க்கையில் ஒவ்வொரு நிலையிலும் முன்னேற்றம் இருக்க வேண்டும். தவறுகளிலிருந்து நாம் கற்கவில்லையானால், தவறுகள் கொண்டு வரும் பாடங்களிலிருந்து நாம் எப்பொழுதும் பயன் பெறப் போவதில்லை.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum