தூய்மையே தவக்காலத்தின் தன்மை
Page 1 of 1
தூய்மையே தவக்காலத்தின் தன்மை
மண்ணுலகில் மனிதர் செய்யும் தீமை பெருகுவதையும் அவர்களின் இதயச் சிந்தனைகளெல்லாம் நாள் முழுவதும் தீமையையே உருவாக்குவதையும் ஆண்டவர் கண்டார். கடவுள் விண்ணகத்தினின்று மானிடரை உற்று நோக்குகின்றார். எல்லோரும் நெறி பிறழ்ந்தனர்; ஒருமிக்கக் கெட்டுப் போயினர். நேர்மையாளரே இல்லை; திருவிவிலியத்தின் சாராம்சமே இறை அன்புதான். அதுவும் நாம் பாவிகளாய் இருந்தும் நம்மீது அன்பு செய்கிறார் இறைவன். பெற்றோர் கெட்டவர்கள் என்றாலும் அவர்கள் தங்கள் பிள்ளைகள் கெட்டுப்போவதை விரும்புவதில்லை அல்லவா? அவ்வாறிருக்க நல்லவரான இறைவன் தம் பிள்ளைகள் கெட்டுப் போவதை விரும்புவாரா? விரும்ப மாட்டார்.
அதனால்தான் தம் ஒரே மகனான இயேசு கிறிஸ்துவை முப்பத்து மூன்று ஆண்டுகள் இம்மண்ணுலகில் சாதாரண மனிதராக வாழ வைத்தார். ‘‘இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர். அவருக்கு இயேசு என்றும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுள் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை, தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது’’ (லூக்கா 1: 31-33). இயேசு கிறிஸ்து நம் வாழ்வில் செயலாற்றினால் நமக்குக் கண்டிப்பாக மகிழ்ச்சி கிடைக்கும். மனிதர் எந்த சாதி மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் இது அவர்களுடைய நிலை வாழ்வைக் குறித்த காரியமாகும். மனிதர் ஒருபோதும் பாவத்தில் இறங்கக் கூடாது.
‘‘இருக்கிறவர் நானே என்பதை நீங்கள் நம்பாவிடில் நீங்கள் பாவிகளாய் சாவீர்கள்’’ என்றுரைத்து நமக்குப் பாவ மன்னிப்பு அளித்து நிலை வாழ்விற்கு அழைத்துச் செல்லும் கடவுள் நம்மோடு இருக்கிறார். இயேசு கிறிஸ்து உண்மையான கடவுள் என்பதால் அவர் உலகிற்கு வந்தபோது, ‘‘நரிகளுக்குப் பதுங்கு குழிகளும் வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை. எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாத நிலை. நிலையான அமைதியை நாடாமல் நிமிட சுகத்திற்காக மனிதர் பல தீய பழக்கங்களுக்கும் அடிமையாகிறார்கள். ஆண்டவர் இயேசு இவ்வுலகில் வாழ்ந்திருந்த போதும் இவ்வகையான தீமைகள் இருந்தன.
உலக சுகங்களில் மூழ்கி மாயையானதைத் தேடுபவர்கள் தங்கள் ஆன்மாவையே அழித்துக் கொள்கின்றனர். இறைவன் நமக்கு அளித்துள்ள மாபெரும் அருட்கொடைதான் சுதந்திரம். நமக்கு முன் நீரையும் நெருப்பையும் அவர் வைத்துள்ளார். நம்முன் வாழ்வும் சாவும் வைக்கப்பட்டுள்ளன. எதை நாம் விரும்புகிறோமோ அதுவே நமக்குக் கொடுக்கப்படும். எனவே வாழ்வளிக்கும் இயேசுவைப் போற்றி வணங்குகிறோமா இல்லையா என்பதுதான் கேள்வி.
பாவம் மன்னிக்கப்படுவதின் அடையாளம்தான் விண்ணக அமைதி. ‘‘என் அமைதியை உங்களுக்கு அளிக்கிறேன், உங்கள் மகிழ்ச்சியை யாரும் உங்களிடமிருந்து நீக்கிவிட முடியாது’’ என்ற இறை வார்த்தையை ஏற்றுக்கொண்ட நமக்கு ஏதாவது பிரச்னை என்றால் நாம் செல்ல வேண்டியது மனிதரிடமல்ல; ஆண்டவரிடம்தான்.
‘‘நம் தந்தை நம்மிடம் எத்துணை அன்பு கொண்டுள்ளார் என்று பாருங்கள். நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம். கடவுள் மக்களாகவே அழைக்கப்படுகிறோம்; கடவுள் மக்களாகவே இருக்கிறோம். உலகம் அவரை அறிந்து கொள்ளாததால்தான், நம்மையும் அறிந்துகொள்ளவில்லை. ‘‘இப்போது நாம் கடவுளின் பிள்ளைகளாய் இருக்கிறோம். இனி எத்தன்மையராய் இருப்போம் என்பது இன்னும் வெளிப்படவில்லை. ஆனால், அவர் தோன்றும்போது நாமும் அவரைப்போல் இருப்போம். ஏனெனில், அவர் இருப்பதுபோல் அவரைக் காண்போம். அவரை எதிர்நோக்கி இருக்கிற அனைவரும் அவர் தூயவராய் இருப்பதுபோல் தம்மையே தூயவராக்க வேண்டும். பாவம் செய்யும் அனைவரும் சட்டத்தை மீறுகின்றனர்.
சட்டத்தை மீறுவதே பாவம்.பாவங்களை நீக்கவே அவர் தோன்றினார் என்பது நமக்குத் தெரியும். அவரிடம் பாவம் இல்லை. அவரோடு இணைந்திருக்கும் எவரும் பாவம் செய்வதில்லை. பாவம் செய்பவர் எவரும் அவரைக் கண்டதுமில்லை, அறிந்ததுமில்லை. பிள்ளைகளே, எவரும் உங்களை நெறி தவறச் செய்து விடாதீர்கள். கிறிஸ்து நேர்மையாளராய் இருப்பதுபோல், நேர்மையாய்ச் செயல்படுபவர் நேர்மையாளராய் இருக்கின்றார். பாவம் செய்து வருகிறவர் அலகையைச் சார்ந்தவர். ஏனெனில், தொடக்கத்திலிருந்தே அலகை பாவம் செய்து வருகிறது. ஆகவே அலகையின் செயல்களை தொலைக்கவே இறைமகன் தோன்றினார்.
கடவுளிடமிருந்து பிறந்தவர் எவரும் பாவம் செய்வதில்லை. ஏனெனில் கடவுளின் இயல்பு அவரிடம் இருக்கிறது.
கடவுளிடமிருந்து பிறந்தவராயிருப்பதால் அவரால் பாவம் செய்ய இயலாது. நேர்மையாய்ச் செயல்படாதவரும் தம் சகோதரர், சகோதரிகளிடம் அன்பு செலுத்தாதவரும் கடவுளிடமிருந்து வந்தவர்களல்ல. இதனால் கடவுளின் பிள்ளைகள் யாரென்றும் அலகையின் பிள்ளைகள் யாரென்றும் புலப்படும்’’ (1 யோவான் 3: 1-10). வானகத் தந்தையாம் இறைவன் தம் பிள்ளைகளைத் தம்மிடம் திரும்பி வருமாறு அன்போடு அழைப்பு விடுவதைத்தான் நாம் திருவிவிலியம் முழுவதும் காண்கிறோம். இறை மக்களுக்கு உரிமைப் பேறான விண்ணகத்தை அவர்கள் அடைவது வரை இவ்வழைப்பு தொடர்ந்துகொண்டே இருக்கும். விண்ணகத்தை நோக்கித் தூய்மையாக வாழ்ந்திட நினைவூட்டுவதுதான் தவக்காலம். தூய்மைதான் தவக்காலத்தின் தன்மையாகும்.
நிலைவாழ்வைக் குறித்த எதிர்நோக்கு நம்மை தூய்மைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். இவ்வுலக வாழ்வில் நாம் தூய்மையாவதற்கான வாய்ப்புகளை இறை வசனங்கள் கற்பிக்கின்றது. இன்றே பூத்து இன்றே மடியும் பூக்கள்கூட தன்னைக் கவனிப்பவரை மகிழ்விக்கின்றன. ஆனால், குறைந்தபட்ச வாழ்வைக் கொண்ட மனிதன் மற்றவர்களை எப்படிக் கவர்கிறான்? மிகப்பெரிய கேள்விக்குறி இது. நாம் குழந்தையாக இருந்தபோது மார்போடு அள்ளி அணைத்தவர்கள் இன்று ஏன் அதனைச் செய்யவில்லை? அதே அன்பையும் பாசத்தையும் நம்மைச் சுற்றியுள்ளவர்களிடமிருந்து ஏன் நம்மால் பெற முடியவில்லை? பிறரை மன்னிக்க எத்தனை பேர் நம்மில் தயாராக இருக்கிறோம்? பிறரின் உதவியின்றி நம்மால் வாழ முடியாது என்பதை நாம் அடிக்கடி நினைத்துப் பார்த்ததுண்டா?
உணவு, உடை, இருப்பிடம், தொழில் என வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும் மற்றவரின் அரிய பணி நமக்கு உதவியிருப்பதை நாம் உணர்ந்திருப்போமா? எனது முயற்சியால், எனது உழைப்பால், எனது ஆட்சியில், எனது பணியில் என்று தன்னை மட்டுமே உயர்த்தும் இவ்வுலகில் இயேசுவின் அரசு வரவேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? நம்மிடமுள்ள தன்னலம், கர்வம், இறுமாப்பு, அகம்பாவம், ஆணவம், ஏமாற்றுதல், மற்றவரைக் குறைத்து மதிப்பிடல் போன்ற இழிவான காரியங்களை அகத்தினின்று அகற்றுவோமேயானால் செல்வாக்கு தானாக வந்து சேரும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» வளையும் தன்மை தரும் பயிற்சிகள்
» பைல்களின் தன்மை தகவல்
» உள்ளங்கைகளின் கடினத் தன்மை மறைய
» உதட்டின் வறட்சித் தன்மை குறைய
» வளையும் தன்மை தரும் உடற்பயிற்சி
» பைல்களின் தன்மை தகவல்
» உள்ளங்கைகளின் கடினத் தன்மை மறைய
» உதட்டின் வறட்சித் தன்மை குறைய
» வளையும் தன்மை தரும் உடற்பயிற்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum