ஐயப்ப தத்துவங்கள்
Page 1 of 1
ஐயப்ப தத்துவங்கள்
ஐயப்பனின் சபரிமலை வழிபாட்டின் ஒவ்வொரு கட்டமும் தத்துவங்களை உள்ளடக்கியவை.
பதினெட்டு படிகள்:
புராணங்கள் பதினெட்டு, தேவர்அசுரர் போர் நடந்த நாட்கள் 18, தர்மத்தை நிலை நாட்ட பாரதப்போர் நிகழ்ந்த நாட்கள் 18, கீதையின் அத்தியாயங்கள் 18. இதைப்போல் மனித வாழ்வை இயக்கும் 18 அம்சங்களின் அடிப்படையாக அமைக்கப்பட்டவை, ஐயப்பனின் ஆலயப் படிகள். அவற்றை அறிந்தும் கடந்தும் மெய்ஞான நிலை பெறலாம்; ஐயப்பனின் அருட்கடாட்சம் கிட்டும் என்பது அந்த 18 படிகளின் தத்துவம். காமம், குரோதம், கோபம், போன்ற எட்டு மனவெழுச்சிகள்; மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய பஞ்ஜேந்திரியங்கள். சத்வ, ராஜஸ, தாமஸ ஆகிய மூன்று குணங்கள் வித்யை, அவித்யை ஆகிய இரண்டு சக்திகள் தாம் 18 படிகளின் அம்சங்கள்.
நான்கு வேதங்கள், ஆறு ரகஸ்யங்கள், நான்கு உபாயங்கள், நான்கு வர்ணங்கள் இவற்றை அந்தப் பதினெட்டுப் படிகளும் குறிப்பிடுவதாக சிலர் கூறுவார்கள்.
நெய் தேங்காய்:
முக்கண் கொண்ட தேங்காய் சிவனையும் பசுநெய் கோபாலனாகிய மகாவிஷ்ணுவையும் உருவகப்படுத்தும். சிவன்விஷ்ணு இருவருடைய அருள் கதிரொளியின் கூட்டு சக்தியே சாஸ்தாவாகிய ஐயப்பனான் ஆதலால் நெய்யும் தேங்காயும் சேர்ந்து அவருக்கு நிவேதனப் பொருளாகின்றன.
இருமுடி:
விரதமிருந்து சபரி மலைக்குச் செல்பவர்கள் இருமுடி கட்டி புறப்படுவார்கள். அவற்றுள் ஒரு முடியுள் சுவாமிக்குரிய அபிஷேக நிவேதனப் பொருட்கள் இருக்கும். இன்னொன்றில் தன் தேவைக்குரிய உணவுப் பொருட்கள் இருக்கும். நாம் போகப் போக நம் உணவுப் பொருட்கள் குறைந்துகொண்டேபோய் இறைவனின் சந்நதியருகே செல்லும்போது நம் உணவுப் பொருட்கள் அடங்கிய முடி குறைந்திருக்கும். சுவாமி முடி மட்டும் அப்படி மிஞ்சியிருக்கும். இது ஒவ்வோர் ஆத்மாவும் இறைவனை அடையும் நிலையை உணர்த்துவது.
மானுடராய் பிறந்த நாம் இறைவனைத் தேட ஆரம்பிக்கும்போது, இறைவன் மீதுள்ள பக்தி ஒரு முடியாகவும், நம் உலகத்தேவைகள் ஆகிய லௌகீகம் ஒரு முடியாகவும் இருக்கிறது. இரண்டு அம்சங்களுடனேயேதான் நாம் இறைவனை தேடுகிறோம். அந்தத் தேடலில் மெய்ஞானம் கிட்டக்கிட்ட நம் லௌகீகப் பற்று குறைந்து மறைந்து போகிறது. இறைபக்தி ஒன்றுதான் மிஞ்சுகிறது. அப் பொழுதுதான் இறைவனடியும் தரிசனமாகிறது.
திருமணி:
ஐயப்பன் அமர்ந்திருக்கும் கோலத்தை யோக நிலை என்பர். அந்தக் கோலத்தின் உட்புறம் சின்முத்திரையுடன் அமைந்திருக்கிறது. இடதுபுறத்தைக் கவனித்தால் ஒரு பெண் தனிமையாக கையை வைத்திருப்பது போலிருக்கும். அது நாராயணனும் அம்பாளும் வேறில்லாத கருணையான தாய்மை அம்சம், சிவனின் சின்முத்திரையும் நாராயணனின் மோகினித் திருவுருவும் இணைந்ததே ஐயப்பன் தோற்றம் என்று குரு ஹரிதாஸ்கிரி சுவாமிகள் விளக்கம் கூறியுள்ளார்.
இன்னொரு விளக்கமும் கூறப்படுகிறது. அந்தர்யாமியாய் (மறைவாக) சபரிமலை என்னும் பிந்து ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் அம்பாளின் மடியில் ஐயப்பன் அமர்ந்திருக்கும் காட்சியே அது. ஐயப்பன் மாத்திரம் காட்சியாக இருக்கிறார். அம்பாள் அரூபமாய் தன் குழந்தையை மடியில் வைத்திருக்கிறாள். அம்பாள் இல்லாத இறை பக்தி ஏது? ஐயப்பனில் இவ்வாறு அம்பாள் சம்பந்தப்பட்டிருக்கிறாள் என்றும் கூறுகிறார்கள்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஐயப்ப வழிபாடு
» ஐயப்ப பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய விரத முறை
» ஐயப்ப புராணமும் பாடல்களும்
» ஸ்ரீ ஐயப்ப புராணம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum