ஐயப்ப பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய விரத முறை
Page 1 of 1

ஐயப்பனை வேண்டி மாலை அணியும் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய விரத முறைகள்:
1. மாலை போட்ட நாளிலிருந்து விரதத்தை முடிக்கும் வரை முடிவெட்டுதல், சவரம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
2. மெத்தை, தலையணை உபயோகிக்காமல், தரையில் துணி விரித்துப் படுக்க வேண்டும்.
3. பேச்சைக் குறைத்து மவுனத்தை கடைப்பிடித்தல் வேண்டும்.
4. மற்றவர்களிடம் சாந்தமாக பழக வேண்டும். பிறர் மனம் புண்படும்படி பேசக்கூடாது.
5. விரத நாட்களில் பெண்களை சகோதரியாகவும் தாயாகவும் கருத வேண்டும்.
6. வீட்டிலிருக்கும் பெண்களுக்கு மாதவிலக்கானால் அவர்கள் தனி அறையில் ஒதுக்குப்புறமாக பார்வையில் படாதபடி இருக்க வேண்டும். அப்படி வசதி இல்லையென்றால் மாலை அணிந்தவர்கள் வேறு இடத்தில் தங்கியிருத்தல் நல்லது.
7. அணிந்திருந்த மாலை அறுந்துபோனால் அதை செப்பனிட்டு அணிந்து கொள்ளலாம். இதில் தவறில்லை. மன சஞ்சலம் அடைய வேண்டாம்.
8. மாலை போடும் சமயத்தில் பயமோ, சந்தேகமோ, குற்ற உணர்ச்சியோ இருத்தல் கூடாது. அப்படி மன சஞ்சலம் இருந்தால் மாலை போடுவதை தள்ளிப் போடுதல் நல்லது.
9. ஐயப்ப விரதத்தில் வீட்டிலிருக்கும் மனைவி மற்றும் பிற பெண்களின் தொண்டும் பக்தியும் மிகவும் உயர்வானதும் போற்றத்தக்கதும் ஆகும்.
10. இருமுடி கட்டும் வைபவத்தை தனது வீட்டிலேயே வைத்துக் கொள்ளுதல் நல்லது. வீடு சுபிட்சமாக இருக்கும். மங்கலமாகவும் இருக்கும்.
11. மாலையணிந்து சபரிமலைக்குச் செல்லும் நோக்கங்கள் மூன்று:
1. தன்னையே புனிதப்படுத்தி சத்தியமான பதினெட்டாம் படியில் ஏறி பகவான் ஐயப்பனைத் தரிசித்தல்,
2. தன் புலன்களை எல்லா வகையிலும் கட்டுப்படுத்தி நெறியான வாழ்க்கை வாழ்ந்து மனம், உடல் இவற்றை தூய்மைப்படுத்துதல்,
3. தான் சுத்தமாக இருப்பதோடு அல்லாமல், வீட்டையும் வீட்டில் உள்ளவர்களையும் சுத்தமாக இருக்க வைத்து அவர்களையும் பக்தி நெறிக்கு உட்படுத்துதல்.
12. மாலைக்கு மதிப்பளித்து ஒரு மண்டல காலம் விரத முறைகளை நெறியாகவும் முறையாகவும் கடைப்பிடித்து, தான் என்னும் அகங்காரத்தை விட்டொழித்து, இறைவனிடம் முழு நம்பிக்கை வைத்து, முழு சரணாகதி அடைந்து, ஒருமுகமாக வழிபட்டால், இறைவனின் அருட்கடாட்சம் குறைவில்லாமல் கிடைக்கும். படிகள் ஏறஏற, அவர்கள் தன் வாழ்வில் உயர்ந்துகொண்டே இருப்பார்கள் என்பதும் சத்தியம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விரதம் இருக்கும் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய 21 விதிமுறைகள்
» விரதம் இருக்கும் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய 21 விதிமுறைகள்!

» ஐயப்ப பக்தர்கள் துளசி மாலை அணிவது ஏன்?
» வீட்டில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum