மனதில் தெளிவு தரும் மகாதேவன்
Page 1 of 1
மனதில் தெளிவு தரும் மகாதேவன்
மனதில் தெளிவு தரும் மகாதேவன்
கருத்துகள்
12:31:56
Monday
2012-02-13
Luxury market to touch 15BN USD
You need to upgrade your Adobe Flash Player to watch this video.
Get Adobe Flash player
MORE VIDEOS
உடலால் பிறருக¢குத் தீமை செய்ய, அதற்கு சாட்சி இருக்குமானால் தண்டனை கிடைத்துவிடும். பேச்சால் தீங்கிழைப்பதற்கு சாட்சி இருக்குமானால் அதற்கும் தண்டனை உண்டு. ஆனால், மனம் தீமையை நினைக்குமானால் அதற்கு சாட்சி யார்? தண்டனையும் உண்டா என்ன? அதனால், மனதின் தீய எண்ணங்களை அறவே நீக¢குவதற்கு வழியுண்டா என்று பெரியோர்கள் யோசித்தனர். எங்கும் நிறைந்திருப்பவனை, பரம்பொருளை மனதில் சாட¢சியாக வைத்தால் மனம் எப்படி தீயவைகளை சிந்திக்கும்? கடவுளே மனிதராக வந்தாலும் அவருக்கும் அது பொருந்தும் என்பதற்கு பாபநாசம் கோயில் ஓர் உதாரணம்.
சீதையை மீட்க ராவணனுடன் போரிட்டு பல எதிரி வீரர்களை கொன்று குவித்தார் ராமன். பிறகு, அயோத்தி நோக்கி புறப்பட்டார். சீதை, லட்சுமணன், அனுமன் ஆகியோருடன் ராமேஸ்வரத்திலிருந்து அயோத்தி நோக்கி வந்து கொண்டிருந்த போது, காவிரிக்கரையில் அழகிய தென்னஞ் சோலையும், நீர் வளமும் நிறைந்த பகுதிய¤ல் சற்று இளப்பாறினார். தங்களைத் தவிர வேறு யாரோ ஒருவரும் தம்மைப் பின் தொடருகிறார்களோ என்று சந்தேகித்தான் ராமன். அது யாரோ அல்ல, தன் சம்ஹார நினைவுகள்தான் என்பதையும் உணர்ந்தான். சீதையிடம், தன்னை ஏதோ ஒன்று பின் தொடர்கிறதே என்று சொல்லி மனம் வருந்தினார்.
ராவணனின் தங்கை சூர்ப்பணகையை அவமானப்படுத்தித் துரத்தியதையும் அவளது பாதுகாவலர்களான கரன், தூஷன் ஆகியோரை வதம் செய்ததை நினைவு கூர்ந்து, அந்தச் செயல் தன் மனதை வருத்துகிறது என்றார். ‘அந்த வருத்தமே என்னைத் தொடர்கிறது. பிரம்மனின் படைப்பை வதம் செய்த தோஷம் அது. உலக நன்மைக்காக என்று சொல்லி நான் செய்தது உயிர்க்கொலை அல்லவா? அதனால் அவர்கள் எவ்வளவு வேதனைபட்டிருப்பார்கள்!’ என்று கருணை ததும்ப சொன்னார். அந்த எண்ணங்கள், மனதில் இறுகக் கவ்வியிருப்பதை உணர்ந்தார். சிவனை பூஜித்த மனதில் சிவசாந்நித்யத்தைக் கொண்டு வந்தால், அதனால் அரக்கர்களின் ஆன்மா சமனப்படும் என்றார்.
ஒரு வில¢வ மரத்தடியில் நின்ற போது அந்த தோஷத்தை நிவர்த்தி செய்ய சிவலிங்க பூஜை செய்வதே உத்தமம் என தீர்மானித்தனர். உடனே, சீதை அனுமனை காசிக்கு சென்று விரைவாக சிவலிங்கம் ஒன்றை கொண்டு வரப் பணித்தார். காசி சென்ற அனுமன¢ திரும்பும் வரை காவிரி ஆற்றின் துணை ஆறான குடமுருட்டி ஆற்றிலிருந்து ஈர மணலை எடுத்து ராமன், லட்சுமணன் உதவியுடன் சீதாபிராட்டி தமது கரங்களாலேயே குழைத்துக் குழைத்து 106 மணல் லிங்கங்களை உருவாக்கினார். நேரம் தப்பிவிடக்கூடாதே என்று, அனுமன் காசியிலிருந்து திரும்பும் முன்னரே வில்வ மரத்தினடியில் சிவபூசையை தொடங்கினர்.
சற்றே தாமதமாக சிவலிங்கம் கொண்டு வந்த அனுமன், இனி அது உதவாதோ என்று யோசித்து அதனை வெளிபிராகாரத்தில் வைத்துவிட்டான். ஆனாலும், தான் வருவதற்குள் சிவலிங்க பூஜையை தொடங்கி அது பூர்த்தியடைய இருப்பதைக் கண்ட அனுமன் ராமபிரான் பிரதிஷ்டை செய்த ராமலிங்கத்தை எடுத்துவிட்டு, காசிலிங்கத்தை மூலவராக பிரதிஷ்டை செய்ய வேண்டுமென்ற நோக்குடன் ராமலிங்கத்தினை தன் வாலால் கட்டி இழுத்தார். தான் கொண்டு வந்த லிங்கத்தைதான் ராமர் பூசிக்க வேண்டும் என்று அனுமன் விரும்பினாலும், ராமரே பூசித்தபிறகு அதை அகற்ற முயல்வது தவறுதானே? அதனால், வாலறுந்து லிங்கத்தின் வடக்கே சென்று விழுந்தார். ஒரு கணம் சினம் கொண்டதற்குத் தக்க தண்டனை பெற்ற அனுமன், ராமபிரானிடம் சரணடைந்தார்.
அனுமன் கொண்ட கோபத்திலும் நியாயம் இருப்பதை உணர்ந்த ராமபிரான் அனுமனிடம், ‘இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள 107 சிவலிங்கங்களை வழிபட்டாலும், நிறைவாக 108வது சிவலிங்கமான ஹனுமந்த லிங்கத்தையும் வழிபட்டு அதன் பிறகு அம்பாளை வழிபட்டால்தான் முழு பலன் கிட்டும்; தோஷம் நீங்கப்பெறும்’ என்றார். ராமபிரான் தான் பிரதிஷ்டை செய்த சிவலிங்கங்களையும், மூலவரான ராமலிங்கத்தையும், ஹனுமந்த லிங்கத்தையும் மனமுருக வேண்டிய பின்னர்தான் அவருக்கு மனம் லேசானது. பாவ உறுத்தல்கள் பறந்தோடிப் போக மனம் அமைதியடைந்தது.
ராமருக்கே பாவம் போக்கிய அற்புதத்தலம் இது. அதனால்தான் இத்தலம் பாபவிநாசம் எனப் பெயர்பெற்றது. மனம் என்றிருந்தால் அது நல்லதையும் நினைக்கும்; தீயவற்றையும் நினைக்கும். தீய எண்ணத்தால் ஏற்படும் பாவம்போக்க பாபநாசமே அற்புதத்தலம் என ராமரே உணர்த்திய தலமிது.
மனிதன், தனது பாவங்களை போக்கிக் கொள்ளவும், முக்தி அடைவதற்கும் 108 சிவால யத்தை வழிபட வேண்டும். இக்கோயிலை வெளிப்பிராகாரத்தோடு 108 முறை வலம் வந்தால் நினைத்த காரியம் கைகூடும்; பாவங்கள் அனைத்தும் மறைந்து நன்மைகள் பல கிட்டும். ராமேஸ்வரத்தி¢ற்கு இணையான தலம் இது. மேற்கு நோக்கி ராமலிங்க சுவாமி எனும் திருநாமத்தோடு இறைவன் எழுந்தருளியுள்ளார். ராமபிரானே முன்னின்று பிரதிஷ்டை செய்த இந்த மூலவர் முன் மனமுருக வேண்டும்போது ராமபிரானே நேரில் தோன்றி பக்தர்களுடைய குறைகளை போக்குவது போன்ற ஒரு மெய்சிலிர்ப்பு ஏற்படுகிறது. மூலவரை வழிபட்ட பின் வலது புறத்தில் சித்தி விநாயகர் பக்தர¢களின் குறைகளை கேட்டறிந்து நீக்குகிறார். இடது புறத்தில், சீதாப்பிராட்டி ஆற்று ஈரமணலை கொண்டு பிரதிஷ்டை செய்த 106 சிவலிங்கங்கள் மூன்று வரிசையில் அமைந்துள்ளன. அந்த இடத்தில் ராமபிரான் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்ததை குறிப்பிடும் வரலாற்று சின்னமாக, ராமர், சீதை, அனுமன் ஆகியோர் பூஜிக்கும் புடைப்புச் சிற்பம் ஒன்று 106 சிவலிங்கத்திற்கு முன்னே உள்ளது. 108 சிவலிங்கங்கள் பாணம், ஆவுடையார், கோபுரம் என்று பூரண உருவிலும், ஒரே இடத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவ அம்சங்களாக மூன்று பிரிவாக எழுந்தருளியிருப்பதும் தனிச் சிறப்புடையவை.
வள்ளி-தெய்வானையுடன் சுப்பிர மணியர் இத்தலத்தில் எழுந்தருளியிருக்கிறார். வில்வ மரத்தின் அடியில் 106 சிவலிங்கங்களின் திருவுருவையும் பார்த்தபடி முருகன் அருள்பாலிக்கிறார். சுவாமி சந்நதிக்கும், அம்பாள் சந்நதிக்கும் நடுவே முருகன் எழுந்தருளியிருப்பது விசேஷமானது. 6 அடி உயரத்தில் சூரிய பகவான் இரு கைகளிலும் தாமரை மலர்களுடன் காட்சி தருகிறார். ராமபிரான் ஆதித்ய ஹ்ருதயம் பாடி, அந்த சக்தி மூலம்தான் ராவணனை வெற்றி கொண்டார். அந்த ஆதித்ய மந்திரங்களின் மகிமையோடு இங்குள்ள சூரிய பகவான் எழுந்தருளியுள்ளார். இவருக்கு அருகில் பைரவரும், சனி பகவானும் தரிசனம் தருகிறார்கள்.
அன்னபூரணி, காசிவிஸ்வநாதர், விசாலாட்சி ஆகியோர் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்கள். பிராகாரத்தில், தென்முக கடவுள் தட்சிணாமூர்த்தி மூலவருக்கும் லிங்க கோயிலுக்கும் இடையில் எழுந்தருளி யுள்ளார். ஹனுமந்த லிங்கம் சந்நதிக்கு நேர்க் கோட்டில், குரு கோணத்தில் எழுந்தருளி யிருப்பதால் குருவின் கிருபை ரத்னமாக ஒளிவிடுகிறது. மூலவருக்கு தென்புறத்தில் ஆஞ்சநேயரும், சுக்ரீவனும் தனித்தனியாக அமர்ந்து ராமேஸ்வரத்தில் உள்ளது போலவே காட்சி தருகின்றனர்.
ராமபிரான் சொன்னதுபோல் கோயிலின் உள்ளே உள்ள அனைத்து தெய்வங்களையும் மூலவரையும் வழிபட்டாலும் தெற்கு பக்கத்தில் உள்ள, காசியிலிருந்து அனுமன் கொண்டுவந்த ஹனுமந்த லிங்கத்தை வணங்குவதுதான் வழிபாட்டின் முழுமையாகும்; காசிக்கு சென்று வணங்கிய பலன் கிட் டும். பர்வதவர்த் தினி அம்பாள் தெற்கு நோக்கி அமைந்து வேண்டுவோருக்கு வேண்டுவன எல்லாமும் தரும் கருணைத் தாயாக திருவருள் பொங்கக் கோலம் காட்டுகிறாள். கோயிலின் சிறப்புக்கு மெருகூட்டுகிறது சூரிய தீர்த்தம். கோயிலின் அன்றாட அபிஷேக, ஆராதனைகளுக்கு இங்கிருந்து தீர்த்தம் எடுத்துக் கொள்வது பழமை மாறாமல் இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
எல்லாம் வல்ல இறைவன் சிவபெருமானுக்கு பலவித விசேஷ வழிபாடுகள் இருப்பினும், உத்தமமானதாகவும், ஈடு இணையற்றதும், திருவருளை வாரி வழங்குவ தும்,¢வரங்களை அள்ளித் தருவதாகவும் கருதப்படுவது சிவப்பிரதோஷ வழிபாடு. ஆன்மிகப் பெரியோர்களின் கருத்துப்படி பிரதோஷ தினத்தன்று ஏதேனும் ஒரு சிவாலயம் சென்று வழிபடுவது பற்பல பலன் களை வழங்கும்.
அப்படியிருக்க ஒரே சிவா லயத்தில் 108 சிவலிங்கங்களையும் வழி படும்போது, கிடைக்கும் பலன்களுக்கு கணக்கு தான் உண்டா? 108 சிவாலயங்களுக்கு சென்று வந்த பலனை இந்த ஒரே ஆலயத்தில் பெறலாம்.
மகாசிவராத்திரி விழா வெகு சிறப்பாக ஆண்டாண்டு காலமாகக்¢ கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய இரவு முழுவதும் 108 சிவலிங்கங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும், பக்தர்கள் 108 முறை வெளிப்பிராகாரங்களை வலம் வரும்போது சிவபெருமானே நேரில் தோன்றி பக்தர்களின் குறைகளை போக்கியருளுவார் என்பது இன்றும் பெரிதும் நம்பப்பட்டு வருகிறது. நமக்கே தெரியாமல¢ மனம், வாக்கு, உடலால் நாம் செய்திருக்கக்கூடிய பாவங்களை போக்கிக் கொள்வதற்கு ஒரு முறையாவது பாபநாசம் சென்று 108 சிவாலயத்தை தரிசனம் செய்வது சிறந்த பரிகாரமாகக் கருதப்படுகிறது.
இக்கோயில் கும்பகோணம்-தஞ்சாவூர் சாலையில் பாபநாசத்தில் அமைந்துள்ளது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மகிழ்ச்சியான தாம்பத்ய வாழ்வளிக்கும் மகாதேவன்
» மாணவர்கள் திருப்பணி மேற்கொண்ட மகாதேவன் ஆலயம்
» அகப்பொருள் தெளிவு
» மனம் தெளிவு பெற கீதையின்கதைகள்
» மகிழ்ச்சியான தாம்பத்ய வாழ்வளிக்கும் மகாதேவன்
» மாணவர்கள் திருப்பணி மேற்கொண்ட மகாதேவன் ஆலயம்
» அகப்பொருள் தெளிவு
» மனம் தெளிவு பெற கீதையின்கதைகள்
» மகிழ்ச்சியான தாம்பத்ய வாழ்வளிக்கும் மகாதேவன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum