மாணவர்கள் திருப்பணி மேற்கொண்ட மகாதேவன் ஆலயம்
Page 1 of 1

தொண்டைமான் நல்லூர் சிதம்பரேஸ்வரர் ஆலயம், எண்ணூறு ஆண்டுகள் பழமை மிக்கது. பல நூற்றாண்டுகளாக தீபம் ஏற்றவும் வழியில்லாமல் இருந்தது. மூலவரான சிதம்பரேஸ்வரர் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். அம்பாள் சிவகாமி தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். இத்திருக்கோயிலில் உற்சவர் விக்ரகம் எதுவும் இல்லை. இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மதில், நுழைவு வாயில், கோபுரம் என்று இக்கோயில் தன் எல்லா அடையாளங்களையும் இழந்து விட்டது. எல்லா சந்நதிகளும் சிதைந்து நிலைகுலைந்து விட்டன. இவ்வூருக்கு அருகேயுள்ள மூகாம்பிகை பொறியியல் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் என்.எஸ்.எஸ் மாணவர்கள் ஒன்று சேர்ந்து இவ்வூருக்கு வந்து இத்திருக்கோயிலைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அவர்களின் ஒட்டுமொத்த முயற்சி, இடிபாடுகளைக் களைந்து, கோயிலை அழிவின் விளிம்பிலிருந்து மீட்டிருக்கிறது.
‘தொன்மைமிகு திருக்கோயில் உயர்வாக்க மன்றம்’ அமைப்பைச் சேர்ந்த கந்தசாமி என்ற சிவனடியார், பூஜைகள் நடவாத பழமையான திருக்கோயில்களுக்கு திரி, எண்ணெய், அபிஷேகப் பொருட்கள், பிரசாதப் பொருட்கள் ஆகியவற்றை மாதந்தோறும் சில அன்பர்கள் தரும் பொருளுதவியுடன் வழங்கி வருகிறார். இந்த அமைப்பு ஊர் மக்களின் ஒத்துழைப்போடு இந்த சிதம்பரேஸ்வரர் கோயிலை முற்றிலுமாகப் புனருத்தாரணம் செய்துள்ளது. ஏற்கனவே இவர் அருகிலுள்ள சில கோயில்களுக்கு திருப்பணி செய்துள்ள கோயில்களில் இப்போது குறைந்தபட்சம் ஒருகால பூஜையாவது நடந்து வருகிறது; ஒரு கோயிலுக்கு கும்பாபிஷேகமும் நடைபெற்றிருக்கிறது.
பிரசித்தி பெற்ற தலங்களான களமாவூர் அக்னீஸ்வரர் திருக்கோயிலுக்கு 5 கி.மீ. தொலைவிலும் நீர்பழனி வளர்மதீஸ்வரர் திருக்கோயிலுக்கு 5 கி.மீ. தொலைவிலும் அமையப்பெற்ற இக்கோயிலில், விநாயகர், தட்சிணாமூர்த்தி, வள்ளி -தெய்வயானை சமேத சுப்பிரமண்யர், பைரவர், சண்டிகேஸ்வரர் சூரியன், சந்திரன் என்று எல்லாச் சந்நதிகளும் நிறைந்துள்ளன. இத்தலத்தில் துவார பாலகர்களுக்குப் பதில் வாயிலில் இரு சிவலிங்கங்கள் காணப்படுகின்றன. இதற்குக் காரணம் தெரியவில்லை. தீர்த்தக்குளம், தலமரம் என்று எல்லா வகையிலும் திருத்தி அமைக்கப்பட்ட இக்கோயிலுக்கு ராஜகோபுரத் திருப்பணியும் நடந்து முடிந்துள்ளது. களமாவூர், சிவத்தலம் சமீபத்தில் கும்பாபிஷேகம் கண்டது. நீர்ப்பழனியில் இனி வேலைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.
இங்குள்ள கல்வெட்டுக்கள் இதனை சத்திர காலத்துக் கோயில் என்றே குறிப்பிடுகின்றன. இக்கோயிலுக்கு அருகில் இன்றும் உள்ள சத்திரத்தில் ஒரே சமயத்தில் நூற்றுக்கணக்கான பயணிகள் தங்கி, இளைப்பாறி, உண்டு செல்ல வசதிகள் இருக்கின்றன. இதனைத் திருத்தி அமைக்கவே பெருந்தொகை தேவைப்படும்.
இத்தலத்திற்கான பணிகள் ஒருவாறு முடிந்து கோயிலுக்குக் கும்பாபிஷேகம், 28.10.2012, ஞாயிற்றுக் கிழமை காலை 9 மணிக்கு மேல் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 9360779163, 9884639799 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். திருச்சி-புதுக்கோட்டை வழியில் கீரனூருக்கு அருகில் இத்தலம் உள்ளது. திருச்சி அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தத்திலிருந்து 5 கி.மீ. தொலைவு.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» இலங்கை பிரச்சினை: வேலூரில் ஐ.டி.ஐ. மாணவர்கள்-வணிகர்கள் ஆர்ப்பாட்டம்இலங்கையில் தனிஈழம் அமைக்க வாக்கெடுப்பு நடத்த கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேலூர் அடுத்த அப்துல்லாபுரம் ஐ.டி.ஐ. மாணவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் இன்று மறியல் செய்தனர். அப்போது
» திருச்செங்கோட்டுத் திருப்பணி மாலை
» விரும்பி மேற்கொண்ட விரதம்
» மகிழ்ச்சியான தாம்பத்ய வாழ்வளிக்கும் மகாதேவன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum