தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அனைத்துக் கடவுள்களையும் ஒருங்கே தரிசிக்கலாம்!

Go down

அனைத்துக் கடவுள்களையும் ஒருங்கே தரிசிக்கலாம்! Empty அனைத்துக் கடவுள்களையும் ஒருங்கே தரிசிக்கலாம்!

Post  meenu Sat Mar 09, 2013 1:25 pm

தமிழ் கடவுள் முருகப் பெருமானின் மூன்றாம் படைவீடாக திகழ்வது திருவாவினன்குடி. ஞானப் பழத்திற்காக கோபித்துக் கொண்டு முருகன் வ ந்தமர்ந்ததால், பழம்+நீ=பழநீ எனப் பெயர் பெற்றது என்பதை அறிவோம். ஆனால், முருகன் அவ்வாறு மயில் வாகனத்துடன் மலைமேல் அமரவில்லை என்பது வியக்கத்தக்க புராணச் சான்று. அப்படியானால் நவபாஷாண சிலை வடிவில் முருகன், கையில் தண்டாயுதம் ஏந்தி, கே £வணாண்டியாக இருப்பது எப்படி?

அது போகர் என்னும் சித்தர் உருவாக்கிய சிலை. அதன் மூலம் முருகன் அருள்பாலித்து வருகிறான். சிவகிரி, சக்திகிரி ஆகிய இரு மலைகளை இடும்பாசூரன் தோளில் காவடியாக சுமந்து வந்து, பழனியில் ஓய்வெடுத்தபோது முருகன் செய்த திருவிளையாடல்தான் இம்மலையின் வரலாறு.

புராணகால நிகழ்வுகளின்படி, சினம் கொண்டு மயில் வாகனனாய் வந்த முருகன், பழநியில் குன்றின் மீதுதான் நின்றான் என்பதுதான் உண்மை. ஆனால், அடிவாரத்திலுள்ள சரவணப்பொய்கைக்கு அருகேயுள்ள திருவாவினம்குடி எனும் இத்தலத்தில் சிறுபாலகனாய் கையில் வேல் தரித்து, மயில்மேல் அமர்ந்து குழந்தை வேலாயுத சுவாமியாகவும் முருகன் காட்சி தருகிறார்.

முருகனை சமாதானப்படுத்த வந்த பார்வதியும் சிவனும் கருவறையின் உள்ளே நிற்கின்றனர். சிவனின் வாகனமாம் நந்தியும் எதிரில் நிற்கிறார். தம்பியை தன்னுடன் அழைத்துச் செல்ல விநாயகரும் அருகில் இருக்கிறார். கயிலாயத்தின் பிரதான சுவாமிகள் இங்கே வந்துவிட்டதால், அவர்களை தினமும் வணங்கிய பிறகே தம் பணிகள் துவங்கும் லட்சுமி, காமதேனு, சூரியன், பூமாதேவி, அக்கினி, பிரம்மா முதலானோரும் அர்த்த மண்டபத்தின் முன்னால் வணங்கியபடி வரிசையாய் காட்சி தருகின்றனர். முருகனின் மெய்காப்பாளரான வீரபாகுவும் துவார பாலகர்கள் சகிதம் ச ந்நதி முன் இருக்கிறார். பைரவர், சண்டிகேஸ்வரர், ஆஞ்சநேயர், தட்சிணாமூர்த்தி, நாகதேவதைகள், பிரம்மா, காசி விஸ்வநாதர், விசாலாட்சி, மீன £ட்சியம்மன், சொக்கநாதர், சனீஸ்வரன், துர்க்கை, அண்ணாமலையார், அருணகிரிநாதர் என ஒட்டுமொத்த கடவுள்களும் முகாமிட்டிருக்கும் விநே £தம் பழநியில் மட்டுமே காணமுடியும். சிவபெருமானின் குடும்பம் முழுவதும் குடிகொண்டிருப்பதை இங்கே தரிசித்து மகிழலாம்.

தல விருட்சங்களாக நெல்லியும் பல்லாயிரம் வருடங்களை கடந்த நாகலிங்க மரமும் உள்ளன. நக்கீரர், அகத்தியர், ஔவையார், தொல்காப்பியர் மட்டுமல்லாது, திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி, மாணிக்கவாசகரின் தேவாரம், திருப்புகழ் பாடல்களில் பாடப்பெற்றது திரு ஆவினன்குடி கோயில் மட்டும்தான்! நக்கீரரின் திருமுருகாற்றுப்படையில் முருகனின் மூன்றாம் படைவீடு என திருஆவினன் குடியை குறிப்பிடுகிற £ர். திரு (லட்சுமி) ஆ(காமதேனு) இனன் (சூரியன்) கு (பூமாதேவி) டி (அக்கினி) என இவர்கள் ஐவரும் வணங்கி இங்கே நின்றதாலே திருஆவினன்குடி எனப் பெயர் பெற்றுள்ளது.

முருகனின் ஆறுபடை வீடுகளில் இத்தலம் இன்னுமொரு அதிசயம் கொண்டது. மேற்குதிசை நோக்கி அமர்ந்த மயில் வாகனன், இந்த குழந்தை வேலாயுத சாமி மட்டுந்தான். குழந்தை முருகனின் கருவறைக்குள்ளேயே சந்திர மௌலீஸ்வரரும் சாரதாம்மாளும், வீற்றிருக்கின்றனர். உள்ளே சிறிய நந்தி இருக்க கருவறையின் வடக்குப் பக்கமாக ஒரு நந்தி வெளியில் சிவனை நோக்கி வணங்கி நிற்பது சிறப்பு.

கருவறையின் வெளிப் படிக்கட்டுகளின் ஓரமாக விநாயகப் பெருமான் உட்கார்ந்த நிலையில் தன் சகோதரனுக்காக காத்திருக்கிறார். அவர் அருகிலேயே முருகனின் போர்படைத் தளபதி வீரபாகு பவ்யமாய் இருக்கிறார். சந்நதியின் இடப்புறம் லட்சுமி, காமதேனு, சூரியன், பூமாதேவி, அ க்கினி சிலைகளும் எதிரில் பைரவர், பிரம்மா, காசி விஸ்வநாதன், விசாலாட்சி, மீனாட்சி, சொக்கலிங்கர் சிலைகளும் உள்ளன.

கோயிலின் தெற்கு வாயிலை, நோக்கியவாறு உற்சவ மூர்த்திகளான வள்ளிதெய்வானை சமேதராக காட்சி தருகிறார். உள்பிரகாரத்தின் கிழக்கே சண்டிகேஸ்வரர் சந்நதியும் தெற்கே தட்சிணாமூர்த்தி சந்நதியும் உள்ளன. இவை தவிர, ஆஞ்சநேயரும் நர்த்தன விநாயகரும் அருள்பாலி க்கின்றனர்.

வெளிப் பிராகாரத்தின் மேற்கு வாயிலில் துவார பாலகர்கள் பாதுகாப்பாக இருபுறம் நிற்க, எதிரில் பிரமாண்டமான தங்கக் கொடிமரம் பிரமிக்க வைக்கிறது. கிழக்கு நோக்கிய சனீஸ்வரன் சந்நதியும் இடப்பக்கம் தனித்தனியாக மீனாட்சியம்மன், சொக்கநாதர், ஆலயங்களும், வடக்கு நோக்கி துர்க்கையம்மன் சந்நதியும் வலப்பக்கம் அண்ணாமலையார், உண்ணாமுலையாருக்குத் தனித்தனி சந்நதிகளும் உள்ளன. மேற்கு வாயிலை த £ண்டி உள்ளே நுழைந்ததும் கிழக்கு நோக்கி மூஷிக வாகனப் பிள்ளையார் காணப்படுகிறார். முற்றிலும் கருங்கல்லினால் ஆன திருக்கோயிலின் வெளிப் பிராகாரத்தின் வடக்கு பகுதியில் ஆலய விருட்சமான நெல்லிமரம் உள்ளது.

திருஆவினன்குடி கோயிலுக்கு தெற்கு பக்கமும், மேற்கு பக்கமும், வாசல்கள் இருந்தபோதும் மேற்குப்பகுதி நுழைவாயிலின் மேல்புறம்தான் ர £ஜகோபுரம், ஐந்து நிலைகள் கொண்டதாக காட்சி தருகிறது. கருவறையின் மேல்புறம் சிறிய விமானம் மட்டும் உள்ளது. வெளிப்பிராகாரத்தின் கிழக்குப் பகுதியில் நுழைவாயில் இருந்தாலும் அது உபயோகத்தில் இல்லாமல் பூட்டப்பட்டிருக்கிறது. கோயிலின் வெளியில் வடகிழக்கு மூலையில் என்றும் வற்றாற குளமாக இன்றும் சரவணப் பொய்கை உள்ளது. தினசரி லட்சக் கணக்கான பக்தர்கள் புனித தீர்த்தத்தை எடுத்துக் கெ £ள்கின்றனர்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஆதியான முன்றாம் படை வீட்டு தலமாய் திரு ஆவினன் குடி கோயில் இருந்துள்ளது. தரை தளத்திலிருந்து சற்றே உயரமான இந்தக் கோயிலின் வெளியே வடமேற்கில் வையாபுரி குளம் உள்ளது.

கோயிலின் வெளியில் வடமேற்கில் முற்றிலும் கருங்கல் கட்டிடமாய் ஒரு தெப்பக்குளம், சிதைந்த நிலையில் காணப்படுகிறது. நாற்புறமும் கல்படி க்கட்டுகள், மாடங்கள் மதில் சுவர்கள் என அழகிய வேலைப்பாடோடு அமைந்த தெப்பக்குளம் உருத்தெரியாமல் பொலிவிழந்து காணப்படுகிறது. இ ந்த தெப்பக்குளத்திற்கான கல்வெட்டு குறிப்பு எதுவும் காணப்படவில்லை. இதுதான் இக்கோயில் தலத்தின் பூர்வாங்க தெப்பக் குளமாக இருக்க வேண்டுமென தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பதினெட்டு சித்தர்களில் ஒருவரான போகரின் நவபாஷாண முருகன் சிலை பழநிமலை மேல் இருந்தாலும் தொன்மையான மூன்றாம் படை வீடென புகழப்பட்டிருப்பது திருஆவினங்குடி கோயில் மட்டுந்தான்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum