என்றென்றும் உண்மையாயிருப்போம்
Page 1 of 1
என்றென்றும் உண்மையாயிருப்போம்
தின்பண்டங்கள், குளிர்பானங்கள்,
டீ விற்பனை செய்யும் ஒரு சிற்றுண்டிச் சாலைக்கு வாடிக்கையாக ஒருவர் செல்வதுண்டு. அங்கு எப்பொழுதும் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். கடைக்காரர் வாடிக்கையாளருக்கு மீதி சில்லறை தரும்போது ஒரு ரூபாய் பாக்கி தர வேண்டுமென்றால் ஒரு சாக்லெட்டை எடுத்து நீட்டுவார். சாக்லெட்டை பார்த்து முகம் மாறுகிறவர்களிடம், ‘‘சில்லறை இருந்தா தரமாட்டேனா? அதான் சாக்லெட் தருகிறேன்’’ என்று சொல்லி சமாளிப்பார். ஒருநாள் வாடிக்கையாக வரும் ஒருவர் டீ குடித்துவிட்டு நான்கு ரூபாய் கொடுப்பதற்கு பதில் நான்கு சாக்லெட்டுகளை கடைக்காரரிடம் கொடுத்தார். உடனே கடைக்காரர் கோபடைந்து, ‘‘என்னையா இது, இப்படி நான் காசுக்கு பதிலா சாக்லெட்டை வாங்கினால் கடை நடத்திய மாதிரிதான்’’ என்றார். அதற்கு வாடிக்கையாளர், ‘‘எல்லாம் நீங்க ஒரு ரூபாய் சில்லறைக்கு பதிலாக கொடுத்த சாக்லெட்டுகள்தான். வீட்டிலே பத்திரமாய் வைத்திருந்தேன். உங்களுக்கு ஒரு சட்டம், எங்களுக்கு ஒரு சட்டமா?’’ என படபடவென பொரிந்தபோது கடைக்காரர் தன் நிலையை அறிந்து தலைகுனிந்து கொண்டார். இதில் ஆச்சரியம் என்னவெனில் அந்த டீ கடைக்காரர் ஐம்பது காசு பெறுமான சாக்லெட்டைத்தான் ஒரு ரூபாய் கொடுக்க வேண்டியவர்களுக்கு கொடுத்து டபுள் லாபம் பார்த்திருக்கிறார்!
இதுதான் இன்றைய மக்களின் நிலை! தன் வருமானத்தை அரசாங்கத்திற்குத் தெரிவிக்காமல் மறைத்து, கருப்பு பணமாக வைத்திருக்கும் ஜனங்களை பற்றி நாம் கேள்விப்படுகிறோம். கலப்படப் பொருட்களை விற்பனை செய்பவர்களைப் பார்க்கிறோம். பல வியாபாரிகள் தராசு எடைக்கல்லின் அளவுகளையே மாற்றுகின்றனர். மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் சாதாரண மக்களிடமும் வாய் கூசாமல் கையூட்டு கேட்கின்றனர். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அரசாங்கம் எத்தனையோ சட்டங்களை இயற்றியும் இப்படிப்பட்ட அநாகரிகமான நிலையை மாற்ற முடியவில்லை. இன்னும் ஆழ்ந்து பார்ப்போமானால், சட்டமியற்றுகிற அரசாங்கமே சில காரியங்களில் உண்மை நிலையிலிருந்து தவறி விடுகிறது. வேத வசனம் இப்படியாக கூறுகிறது: ‘உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்’ (நீதி 28: 20) என்று. இன்று அநேகருடைய வாழ்க்கையில் ஆசீர்வாதத்திற்கு தடையாக நிற்கும் காரியம், உண்மையில்லாத நிலைதான்.
தானியேல் என்னும் தேவ பக்தியுள்ள ஒரு வாலிபன் எருசலேம் நாட்டிலிருந்து பாபிலோனுக்கு சிறைபிடிக்கப்பட்டு சென்றான். கர்த்தர் தானியேலோடு இருந்தார். தானியேலின் காரியம் அந்த அந்நிய தேசத்திலும் ஜெயமாய் இருந்தது. (தானி 6: 28) இதற்கு காரணம் என்னவென்றால் அவன் தேவனுடைய காரியங்களிலும் இவ்வுலகத்திற்குண்டான காரியங்களிலும் உண்மையுள்ளவனாய் இருந்தான். அவனிடத்தில் குற்றம் கண்டுபிடிக்க பலர் முயன்றார்கள். ஆனால் அவர்களால் ஒரு குற்றம்கூட கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டது. (தானி 6: 4). அப்படியானால் தானியேல் எப்படிப்பட்டவனாக இருந்திருப்பான்! ஆம், உண்மையுள்ள மனுஷனை கர்த்தரும் நேசிக்கிறார். இந்த உலகமும் நேசிக்கும். உண்மையுள்ள மனுஷன் பணத்தை தேடி அலைய வேண்டியதில்லை. பணம்தான்
உண்மையுள்ள மனுஷனை தேடி அலையும். உண்மை நிலையிலிருந்து வழுவி பணியாற்றுபவர்களுக்கும் சாதாரண கூலி வேலை செய்யும் உண்மையுள்ள பணியாட்களுக்கும் தேவன் கூறும் நல்ல வார்த்தைகள் ‘‘நீ மரணபரியந்தம் உண்மையாயிரு’’ (வெளி 2: 10) என்பதே. உங்கள் பொறுப்பில் நீங்கள் உண்மையாய் இருந்தால் உங்கள் எஜமானனாகிய இயேசு கிறிஸ்து உங்களை பார்த்து, ‘‘உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தால், அநேகத்தின் மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்’’ (மத் 25: 21, லூக் 19: 17) என்று சொல்லுவார். ஆகவே நம் உண்மையை தேவன் காணட்டும். இந்த உலகம் அறியட்டும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» என்றென்றும் மார்க்ஸ்
» பாரதி என்றென்றும்...
» என்றென்றும் உன்னோடுதான்....
» ‘என்றென்றும் நன்றியுடன்..’ – கே.எஸ்.ரவிக்குமார்
» என்றென்றும் புன்னகையிலிருந்து லிசா நீக்கம் ஏன்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum