23-ம் தேதி வைகுண்ட ஏகாதசி : ஏழுமலையான் கோயிலில் சிறப்பு சேவைகள் ரத்து
Page 1 of 1

திருமலை: திருப்பதி திருமலை தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் எல்.வி.சுப்பிரமணியம், நிருபர்களிடம் கூறியதாவது: வைகுண்ட ஏகாதசியன்று வரும் பக்தர்கள் வைகுண்ட வாசல் வழியாக சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். 23-ம் தேதி நள்ளிரவு 1.45 மணி முதல் அதிகாலை 5 மணி வரை விஐபிக்கள் தரிசனம் செய்யலாம். ஒருவருடன் குடும்பத்தினர் 6 பேர் மட்டுமே வரலாம். இதற்கான ஒரு டிக்கெட் விலை ரூ.1000. சிபாரிசு கடிதம் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அலிபிரி வழியாக மலைப்பாதையில் நடந்து வரும் பக்தர்கள் 21-ம் தேதி இரவு 12 மணி முதல் 22-ம் தேதி இரவு 12 மணி வரை சுவாமி தரிசனம் செய்யலாம்.
ஸ்ரீவாரி மெட்டு வழியாக நடந்து வரும் பக்தர்கள் 22-ம் தேதி காலை 6 மணி முதலும், இலவச தரிசனத்தில் வரும் பக்தர்கள் 23-ம் தேதி அதிகாலை 5 மணியில் இருந்தும் தரிசனம் செய்யலாம். ரூ.300க்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் விற்பனை திருமலையில் ரத்து செய்யப்படுகிறது. திருப்பதியில் 8, 9 தேதிகளில் தேவஸ்தான, இ-தர்ஷன் மையத்தில் இந்த டிக்கெட் வழங்கப்படும். சென்னை, கோவை, வேலூர், பெங்களூர், ஐதராபாத், மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள தகவல் மையங்களில் 12, 13-ம் தேதிகளில் டிக்கெட் விற்பனை செய்யப்படும்.
வைகுண்ட ஏகாதசியையொட்டி கல்யாண உற்சவம் உள்ளிட்ட ஆர்ஜித சேவைகள், திருமலையில் வழங்கப்படும் ரூ.300க்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் விற்பனை, ஒரு வயது குழந்தையுடன் பெற்றோர் சிறப்பு நுழைவு வாயில் தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்படுகிறது. மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் தரிசன அனுமதி 3 முறை என்பது குறைக்கப்பட்டு, ஏகாதசி அன்று மட்டும் காலை 10 மணிக்கு ஒரு முறை அனுமதிக்கப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» டிச.23ல் வைகுண்ட ஏகாதசி : ஏழுமலையான் கோயிலில் சிறப்பு தரிசன ஏற்பாடு

» ஏழுமலையான் கோயிலில் 17-ம் தேதி ரத சப்தமி விழா

» ஏகாதசி விரதம் & வைகுண்ட ஏகாதசியின் சிறப்பு ! கிடைப்பதர்க்கரிய சொர்க்கவாசல் திறப்பு!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum