18 வயசுக்கு யு/ஏ
Page 1 of 1
18 வயசுக்கு யு/ஏ
ரேனிகுண்டா படத்தை இயக்கியிருக்கும் ஆர்.பன்னீர்செல்வத்தின் அடுத்தப் படம் 18 வயசு என்றுதான் விளம்பரம் செய்கிறார்கள். கலெக்சனில் ரேனிகுண்டா பின்தங்கியிருந்தாலும் மேக்கிங்கில் இன்றும் அது நினைக்கப்படுகிறது. தெலுங்கில் இப்படம் டப் செய்யப்பட்டு நல்ல கலெக்சனைப் பெற்றது.
18 வயசிலும் நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தியின் மகன் ஜானியே ஹீரோவாக நடித்துள்ளார். கொஞ்சம் சைக்கோத்தனமான கதாபாத்திரம். முக்கியமாக கோபம் வந்தால் மிருகங்களைப் போல் சண்டையிடக் கூடியவர். தலையால் முட்டி மாடு மாதிரி சண்டையிட்டு இவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
ரேனிகுண்டாவில் ஆக்சன் காட்சிகள் எப்படி உறைய வைத்ததோ அதைவிட பலமடங்கு ஆக்ரோஷத்துடன் 18 வயசு சண்டைக் காட்சிகளை உருவாக்கியுள்ளனர். இதனால் படத்துக்கு சென்சார் என்ன மாதிரி சான்றிதழ் தரும் என்பதில் குழப்பம் இருந்தது. ஏ தந்தால் 18 வயசுக்கு கீழ் உள்ளவர்கள் பார்க்க முடியாது, கலெக்சன் பாதிக்கும்.
நல்லவேளையாக சென்சார் யு/ஏ சான்றிதழ் தந்துள்ளனர். 18 வயசுக்கு கீழ் உள்ளவர்கள் பெற்றோர் துணையுடன் பார்க்கலாம். இது விதி. ஆனால் அதனை யாரும் கண்டுகொள்வதில்லை. யு சான்றிதழ் போலவே யு/ஏ-யும் இங்கு மதிக்கப்படுகிறது.
ரேனிகுண்டா, 18 வயசு, பன்னீர்செல்வம்
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஸ்ரீதேவி வயசுக்கு இது சரியல்ல... - பெண்கள் அமைப்பு எச்சரிக்கை!
» அதிகநாள் வாழ ஆசையா? 40 வயசுக்கு முன் சிகரெட்டை விடுங்க..
» அதிகநாள் வாழ ஆசையா? 40 வயசுக்கு முன் சிகரெட்டை விடுங்க..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum