அதிகநாள் வாழ ஆசையா? 40 வயசுக்கு முன் சிகரெட்டை விடுங்க..
Page 1 of 1

புகைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் நாற்பது வயதிற்கு முன்பாக அதனை கைவிட்டு விட்டால் நீண்டநாள் வாழலாம் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இதனை ஆதாரப்பூர்வமாக ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர்.
இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சர் ரிச்சர்ட் பெட்டோ தலைமையில் இது தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பிரிட்டனைச் சேர்ந்த புகைப் பழக்கத்திற்கு அடிமையான பத்து லட்சம் பெண்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர். அதில் நாற்பது வயதுக்கு முன்பாக புகைப் பழக்கத்தை கைவிட்டவர்கள், தொடர்ந்து புகைப்பவர்களை விட சராசரியாக ஒன்பது ஆண்டுகள் அதிகமாக வாழ்கிறார்கள் என்று தெரியவந்தது.
இந்த ஆய்வு பெண்களிடையேசெய்யப்பட்டிருந்தாலும், ஆண்களுக்கும் இந்த முடிவு அதே அளவில் பொருந்தும் என்று ஆய்வுக்கு தலைமையேற்றிருந்த சர் ரிச்சர்ட் பெட்டோ கூறியுள்ளார். புகைப் பழக்கத்திற்கு அடிமையாகி பின்னர் அதை கைவிடுவதை விட எப்போதுமே புகை பிடிக்காமல் இருப்பதுதான் ஆரோக்கிய வாழ்க்கைக்கு ஏற்றது என்றும் ஆய்வாளர் வலியுறுத்தியுள்ளார். இந்த ஆய்வு முடிவு பிரபல மருத்து இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அலர்ஜியா கவலைய விடுங்க!
» சிகரெட்டை நிறுத்திட்டீங்களா? உடனே இத படிங்கப்பா…
» மன அழுத்தத்தை விடுங்க பிரசவம் சுலபமாகும்
» சிறுநீரகக்கல் இருக்கா? கவலையை விடுங்க...
» என்னை ஜெயிக்க விடுங்க!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum