சன்னுக்குப் போட்டியாக சக்சேனா - புதிய யுத்தம் ஆரம்பம்
Page 1 of 1
சன்னுக்குப் போட்டியாக சக்சேனா - புதிய யுத்தம் ஆரம்பம்
சக்சேனா அண்ட் கோ ஜனவரி 15ஆம் தேதி புதிய தொலைக்காட்சி ஒளிபரப்பை தொடங்குகிறார்கள். இதனை இன்று சென்னை சத்யமில் நடந்த சாருலதா இசை, ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சக்சேனா தெரிவித்தார்.
சன் தொலைக்காட்சியின் வளர்ச்சியில் சக்சேனாவின் பங்கு முக்கியமானது என்கிறார்கள். சன் பிக்சர்ஸின் அடாவடியான வளர்ச்சியில் அவருக்கு பங்குண்டு என்பது அனைவருக்கும் தெரியும். சன் பிக்சர்ஸை பகைத்துக் கொண்டால், சன் தொலைக்காட்சி விரும்பியும் அவர்களுக்கு தொலைக்காட்சி உரிமை கொடுக்கவில்லையென்றால் படத்தை வெளியிட முடியாது என்ற நிலை கருணாநிதியின் ஆட்சியில் நிலவியது. அன்று முடிசூடா மன்னன் சக்சேனா.
ஆட்சி மாறியது... காட்சி மாறியது. ரட்சர் என்றவர்களே சக்சேனாவை ராட்சஸன் என்றார்கள். வழக்கு மேல் வழக்கு சக்சேனாவும், அவரது கூட்டாளிகளும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். போலீஸ் அடித்த அடியில் அகஸ்திய குறுமுனி போல் குனிந்தபடியே கோர்ட்டுக்கு வந்தார்கள். ஜாமின் கிடைத்ததும் முதல் வேலையாக சன் நிர்வாகம் இவர்களை கழுத்தைப் பிடித்து வெளியேற்றியது. காயம் ஆற இவ்வளவு நாள் காத்திருந்தவர் தனது கூட்டாளிகளுடன் சக்சேனா பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார். தயாரிப்பு நிறுவனம். முதலில் விநியோகம். சாருலதா முதல் படம்.
இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சத்யம் காம்ப்ளக்கிஸில் நடந்தது. இதில் பேசிய சக்சேனா சன் நிறுவனம் தங்களை வெளியேற்றியதை முதல்முறையாக விமர்சித்துப் பேசினார். மேலும் வருகிற ஜனவரி 15ஆம் தேதி புதிய தமிழ் தொலைக்காட்சி தொடங்கயிருப்பதாகவும் தெரிவித்தார்.
உலக தொலைக்காட்சிகளில் முதல் படம் சாருலதாதானே?
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பிரவீன்காந்தின் புதிய படத்தின் பெயர் 'அடுத்த ஆட்டம் ஆரம்பம்'
» அஜீத் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பம்.
» வருகிறார் சக்சேனா
» ‘சுண்டாட்டம்’ படத்தை வாங்கினார் சக்சேனா!
» சக்சேனா கைது… பட்டாசு வெடித்து கொண்டாடிய சினிமாக்காரர்கள்!
» அஜீத் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பம்.
» வருகிறார் சக்சேனா
» ‘சுண்டாட்டம்’ படத்தை வாங்கினார் சக்சேனா!
» சக்சேனா கைது… பட்டாசு வெடித்து கொண்டாடிய சினிமாக்காரர்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum