ஃபிலிம் வாங்கறேன் - கருணாஸின் தத்துவம்
Page 1 of 1
ஃபிலிம் வாங்கறேன் - கருணாஸின் தத்துவம்
கருணாநிதிக்கே பல சமயங்களில் அலர்ஜியாகிப் போன சன் தொலைக்காட்சி கருணாஸுக்கு மட்டும் விசுவாசமாக இருப்பது ஆச்சரியம்தான். ரமலான் திருநாளான இன்றுகூட கருணாஸின் ரகளைபுரம் சன் தொலைக்காட்சியில் ரவுண்ட் கட்டுகிறது.
அம்பாசமுத்திரம் அம்பானிக்குப் பிறகு கருணாஸ் கதையின் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைந்து திரைக்கு வரவிருக்கிறது. கருணாஸின் மகனும் இந்தப் படத்தில் காமெடி செய்திருக்கிறாராம். பள்ளிப் பருவத்தை தாண்டாதவர் கருணாஸின் மகன் கென். இவரது பெயரில்தான் ரகளைபுரத்தை கருணாஸ் தயாரித்து வருகிறார். இதையடுத்து மேலும் இரு படங்களை தயாரிக்கிறார் கருணாஸ். இரண்டிலும் இவர்தான் ஹீரோ.
ஒரு படத்தை அம்பாசமுத்திரம் அம்பானியை இயக்கிய ராம்நாத் இயக்குகிறார். இன்னொரு படத்தை ரகளைபுரம் மனோ இயக்குகிறார். இப்படி போட்டுத் தாக்குகிறீர்களே என்றதற்கு கருணாஸின் தத்துவ பதில் பின் வருமாறு:
சினிமாவில் சம்பாதித்த காசை வைத்து வீடு நிலம் எதுவும் வாங்கலே, ஃபிலிம்தான் வாங்கறேன். சிலர் சம்பாதித்து வட்டிக்கு விடுவாங்க. நான் வட்டிக்கு வாங்கி சினிமா எடுக்கிறேன். ஒரு செகண்டுக்கு 24 ஃபிரேம் என்ற கணக்கில் ஃபிலிம் ஓடும். 24 மணி நேரத்தில் ஒரு செகண்ட் கூட சினிமாவைத் தவிர வேறு எதையும் நான் நினைக்கிறது இல்லை.
கமல்ஹாசனை மிஞ்சிட்டார்னு சொல்லலாமா?
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» என்றென்றும் - டெலி ஃபிலிம் ஃபிலிமான கதை
» கஞ்சா கருப்பின் கே.கே.ஃபிலிம் இன்டர்நேஷனல்
» காமெடியில் கலக்கும் கருணாஸின் வாரிசு
» இனத் துரோகி கருணாஸின் செயலை தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள் – நாம் தமிழர்
» தத்துவம் தத்துவம்
» கஞ்சா கருப்பின் கே.கே.ஃபிலிம் இன்டர்நேஷனல்
» காமெடியில் கலக்கும் கருணாஸின் வாரிசு
» இனத் துரோகி கருணாஸின் செயலை தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள் – நாம் தமிழர்
» தத்துவம் தத்துவம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum