கஞ்சா கருப்பின் கே.கே.ஃபிலிம் இன்டர்நேஷனல்
Page 1 of 1
கஞ்சா கருப்பின் கே.கே.ஃபிலிம் இன்டர்நேஷனல்
கஞ்சா கருப்பும் ரிஸ்க் எடுப்பது என்று தீர்மானித்திருக்கிறார். அதான் அவருக்கு கல்யாணம் ஆயிடுச்சே என்று சந்தேகமாக பார்க்கிறவர்களுக்கு... இது கல்யாண ரிஸ்க் இல்லை, கரன்சி ரிஸ்க்.
நம்ம கருப்பும் படம் தயாரிப்பது என்ற முடிவில் கே.கே.ஃபிலிம் இன்டர்நேஷனல் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார். ஏற்கனவே கருணாஸ் சொந்த படக்கம்பெனி தொடங்கி டப்பாங்குத்து பாட்டுகளைப் போட்டு ரகளபுரம் ரவுசுபுரம் என்றெல்லாம் சகிக்க முடியாத ஃபிலிம்களாக காட்டிக் கொண்டிருக்கிறார். இதில் இவருமா என்று முதலில் அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் கருப்பு திரையில்தான் காமெடி, தொழிலில் படு சீரியஸ்.
சொந்த தயாரிப்பு என்றாலும் ஹீரோ அவர் கிடையாது. அங்காடித்தெரு மகேஷ். படத்தை மலையன் என்ற படத்தை இயக்கிய எம்.பி.கோபி இயக்குகிறார். படத்துக்கு வைத்திருக்கும் தலைப்புதான் தகராறு. வேல்முருகன் போர்வெல்ஸ்.
ஆங்கிலத்தில் பெயர் வைத்தால் வரிச்சலுகை கிடையாது என்பது தினம் பேப்பர் படிக்கும் குப்புசாமிக்கே தெரியும். அப்படியிருக்க சினிமாக்காரர்களுக்கு இந்த விஷயம் எப்படி தெரியாமல் போனது. இல்லை இதில் ஏதும் உள்குத்து உண்டா? வம்படியாக ஆங்கில கலப்பில் பெயர் வைப்பது... அப்புறம் படரிலீஸ் நேரத்தில் குய்யோ முறையோ என்று கூப்பாடு போட்டு தமிழ் பெயருக்குத் தெருத்தெருவாக அலைவது.
வேல்முருகன் போர்வெல்ஸ்... பெயரை மாத்துங்கப்பா.
கஞ்சா கருப்பு, கேகே ஃபிலிம்
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஹரியின் இன்டர்நேஷனல் ஃப்ளேவர்
» ஃபிலிம் வாங்கறேன் - கருணாஸின் தத்துவம்
» என்றென்றும் - டெலி ஃபிலிம் ஃபிலிமான கதை
» மிஸ் இந்தியா இன்டர்நேஷனல் அழகியாக சென்னை பெண் தேர்வு!
» நிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு!
» ஃபிலிம் வாங்கறேன் - கருணாஸின் தத்துவம்
» என்றென்றும் - டெலி ஃபிலிம் ஃபிலிமான கதை
» மிஸ் இந்தியா இன்டர்நேஷனல் அழகியாக சென்னை பெண் தேர்வு!
» நிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum