தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

புற்றுநோயை குணமாக்கும் திருப்பரைநாதர்

Go down

புற்றுநோயை குணமாக்கும் திருப்பரைநாதர்  Empty புற்றுநோயை குணமாக்கும் திருப்பரைநாதர்

Post  meenu Fri Mar 08, 2013 2:15 pm

இந்த உலகில் வாழும் மனித குலம், ஏதோ ஒரு குறிக்கோளுடன் தோற்றுவிக்கப்பட்டுள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. குறிக்கோளை எட் டுவதற்கு, லட்சியங்கள் ஈடேறுவதற்கு, எத்தனையோ முயற்சிகள். வெற்றி இலக்கை அடையுமுன் எத்தனையோ தடைகள், போராட்டங்கள்... இவற்றை எதிர்கொள்ளத் தேவையான மனோபலத்தை தருவது இறை அருள். அப்படி இறை அருளைப் பெற்று சாதித்தவர்கள் சித்தர்கள், முனிவர்கள், கணக் கில் அடங்கா பெரியோர்கள். அவர்களை ஒவ்வொரு தலத்திலும் கோயில் கொண்டுள்ள இறைவன் ஆட்கொண்டு மகிமைகளும் திருவிளையாடல் களும் புரிந்திருக்கிறான். அவற்றில் மிகவும் வல்லமை உடைய கோயில், பசும்பொன் நாயகி சமேத திருப்பராய்த்துறை நாதர் ஆலயம். காவிரிக் கரை யில், சுயம்புவாய் தோன்றி, தாருகா வனத்தில் அமைதியுடன் பக்தர்களின் லட்சியங்களை நிறைவேற்றித் தரும் சத்யமூர்த்தி இவர்.

‘‘சிவத்துளாதி பிச்சாடனன் - இவனை
சரணஞ் செய்வார் வினையறுப்
பார் சத்தியமிது: குறிக்கோளை கூட்டி
டுவனெளிமையிலே’’

-என்கிறார், அழுகணிச் சித்தர். முருகன் என்றால் அழகு. அந்த அழகிற்கு ஈடு செய்பவர் விஷ்ணு. அவரே தன்னை அழகுபடுத்தி நிற்கும் அவதாரம் மோகினி அவதாரம்: இங்குள்ள மகாவிஷ்ணு, மோகினி அவதாரம்.

‘‘பேயோடு ஏவலுஞ் சூன்ய வைப்பும்
கருக நிற்கும் மாதவன் மோகினி
உரு கொள்ள கண்டின்பமெய்தினமே’’

-என்கிறார், அகத்தியர். புரட்டாசி சனிக்கிழமை இவரை ஆராதித்து நிற்போர் பிரார்த்தனை சித்திக்கும். புரட்டாசி பதினெட்டாம் நாள் சூரியனின் கதிர் கள் திருப்பரை நாதனை ஆராதிக்கும். உற்சவ மூர்த்திக்கு பிச்சாடனர் எனப் பெயர். சிவபெருமான் சாந்தமூர்த்தி. பிச்சாடனர் என்ற அம்சம் கொண்டு கருணையே வடிவாக யாவருக்கும் அ ருள்பாலிக்கின்றார். கூரையின் மேல் நவகிரகங்கள் குடிகொண்டிருப்பதனால், பிச்சாடனரை சரணடைந்தோர் நவகோள்கள் அருள் பெற்று உய்வர்.

‘‘ஐயிரண்டு சிரத்தானுமீண்டு தொழுது
நவ கோள் ஆசி கொண்டனனே
நாடோறும் இவரையண்டி நிற்பாருக்கு
ஆகாதேது இம்மண்ணுலகிலியம்பு’’

-என்கிறார், குதம்பை சித்தர். ராவணன் என்ற இலங்கை வேந்தன் குபேரனைவிட செல்வந்தன். நவகிரக அனுக்கிரகத்தால் செல்வ வளமை மிகக் கொண்டவன். அவன் தொழுத கோயில் இது. பசும்பொன் மயிலாம்பிகை என்று நாமம் கொண்டு அம்பிகை வீற்றிருக்கின்றாள். அன்னைக்கு வஸ்திரம் படைத்து, நெய் பொங்கலிட்டு வைகாசி விசா கம் விரதம் இருந்து வருபவருக்கு இல்வாழ்வு சிறப்படையும். நடராஜர் எந்தக் கோயிலிலும் அம்பிகையுடன்தான் அருள்பாலிப்பார். ஆனால் இங்கே நட ராஜர் தனித்து அருள்புரிகிறார். ஏன்? அம்பிகை இங்கு படிதாண்டா பத்தினியாய் இருந்து அருள்வதால்தான். இங்கு பிரார்த்தித்துக் கொள்பவருக்கு நீண்டகால சுமங்கலி பாக்யம் கிடைக்கும். சுமங்கலியாய் கடைக்காலம் வரை வாழ ஏதுவாகும்.

‘‘மஞ்சளும் மலரும் சாக்காலமீராய்
பெறலாகுமே - கை வளையலது
குலுங்குமிதுதன்னோடே வண்ணப்
பட்டுடுத்தி மங்கலமாய் பதியோடு
கூடி களிக்க வரமளிப்பாளிப்
பசுப்பொன்னாள் மயிலாமன்னையே’’

-இது பாம்பாட்டி சித்தர் வாக்கு. சித்தருள் சீரியவர் வரிசையில் முதலாமவர். அருணகிரி நாதர் திருமுருகனை நேரில் கண்ட தலம் இது. காவிரி நதி அகலமாகி ஓடுவது இங்குதான். பூரிப்பினால் இப்படி காவிரி விரிகின்றாள் என்கிறார் அகத்தியர்: ‘‘பொன்னிநதி சிவதரிசனஞ் செய்த பூரிப்பால் விரிந் தோடக் கண்டோமே.’’ அகலமாக இங்கு காவிரி பிரிவடைவதனால் நக்கீரர் என்ற சித்தர், இதனை அகண்ட காவிரி என்பார். காவிரி நதியில் மூழ்கி நீராடுவது பெரும் புண்ணி யம் என்கிறது சித்தர் தம் வாக்கு. அதுவும் ஐப்பசி மாதம் நீராடுவது என்பது மிகவும் போற்றுதற்குரியது. வரப்பிரசாதிகளுக்கே இது சாத்தியம். ஐப்பசி யின் கடைசி நாளன்று காவிரியில் நீராடுவதை ‘குட முழுக்கு’ என்பர், சித்தர் பெருமக்கள்.

ஆனால் ஐப்பசி முதல் நாள் காவிரியில், இந்த இடத்தில், இந்த திருப்பரைநாதர் க்ஷேத்திர காவிரியில் நீராடுவது, பதினாறு புண்ணிய நதிகளில் நீராடியமைக்கு சமம் என அறியலாம். மேலும் புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் வராமல் இந்த புண்ணிய நீராடல் காக்கும். குற்றாலநாதரை தொழுதால், தீராத தலைவலி நீங்கும். குற்றம் பொறுத்த நாதரை தொழுதால் சுகப்பிரசவம் உண்டாகும். அதுபோல திருப்பரைநாதர் தமை தொழுவாருக்கு புற்று போன்ற பீடை அகன்று, வியாபார விருத்தி, செல்வ வளம் சேரும் என்பது சத்தியமான சித்தர் வாக்கு.

‘‘சத்யஞ் சொன்னோம் - கொண்ட
மா பீடையும் அகலுமே -
புற்றொரு ராச பிளவையுஞ் சுட்டெரிப்
பானே. செல்வச் செழிப்போடு
வாணிபந் தழைக்க கருவாவான்
திருப்பரை நாதனே’’

-என்கின்றார், கொங்கண சித்தர். இந்த கோயிலின் புண்ணிய தீர்த்தமே இந்த காவிரி நதிதான். மோகினி உருவத்தில் சிவனைத் தொழுத பின்தான், மகாவிஷ்ணு தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் அமிர்தத்தை பங்கிடச் சென்றார். அது இங்குதான். பெண் வடிவத்தில் பெருமாள் மிகவும் அழகாக தேவர்கள் கொண்டாடும் வண்ணம் விளங்கிய தலம் இது. இங்கு தொழும் பெண்டிர் குறைவில்லா அழகைப் பெறுவர் என்கிறார், போகர் என்னும் சித்தர்.

‘‘குன்றா இளமையுயவ்வனமும்
பெற யண்டுவீர் பிச்சாடனரையே
மோகினி வடிவெடுக்க வந்தனன்
மாதவன் ஈண்டே. மெலிவிலா
கூந்தலும் வண்ணமும் குறையிலா
செல்வமோடு வடிவழங்குங் கூடும்
மங்கையர் தமக்கொன்றும் பொய்யிலையே’’.

தாருகாவன மோகினி என்றும் பெருமாளுக்கு பெயர் உண்டு. வனவிலங்குகளால் தொல்லைபடுபவர்களும் யானை போன்ற விலங்குகளால் விவசாயம் பாதிக்கப்பட்டவர்களும் தொழுது பயன் அடைந்ததை பாராட்டாதவர்களே இல்லை எனலாம். நோயுடன் போராடி சோர்ந்தோர், இறைவனை அண்டி சுகம் பெறலாம் என்பது பெரியோர்கள் கூற்று. வாணிபம் மந்தமானதே, கடன் உபாதைகளில் தத்தளிக்கின்றோமே என வருந்தத் தேவை இல்லை. ஐப்பசி மாதம் முதல் நாள் இங்குள்ள அகண்ட காவிரியில் நீராடி, திருப்பரை நாதனைத் தொழுது அம்மனுக்கு வஸ்திரம் உடுத்தி சஹஸ்ரநாம ஆராதனை செய்து வந்தால் பலன் நிச்சயம் கிட்டும்.

‘‘துயரனைத்துந் துடைக்கு மன்னை
மணத் தடை தன்னை யறுக்குமன்னை
கிரக தோஷ மெல்லாங் கலையுமன்னை’’

-என புலம்புகின்றார், போகர். மந்திரவாதியாம், சம்பந்தாண்டான், மந்திர சித்தி பெற்றதும் இங்குதான். வாராகிக்கு அபிஷேகமும், தீபமும் ஏற்றி தொழுதால் வெற்றி நிச்சயம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum