நினைத்ததெல்லாம் நிறைவேற்றும் அம்மசார் அம்பிகை
Page 1 of 1

ஜமதக்னி முனிவர், தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்பதாய் தன் அன்னையின் தலையையே கொய்து விட்டு வந்த தன் மகனான பரசுராமரை ஆரத் தழுவிக் கொண்டார். தந்தை சொல் மீறாத அந்தத் தனயனுக்கு மேலும் பெருமை சேர்க்க, ‘‘என்ன வரம் வேண்டும், கேள்’’ என்று மகிழ்ந்து கேட்டார். அவர்கள் இருவருமாக சேர்ந்து மாபெரும் சக்தியை பூவுலகத்திற்கு கொண்டுவர முடிவு செய்திருந்தனர். அதற்கான அச்சாரமாய் பரசுராமர் தன் தந்தையின் முன்பு கைகூப்பி கேட்டுக்கொண்டார்: ‘‘தாங்கள் கட்டளையிட்டபடி என் தாயின் சிரம் கொய்து விட்டு வந்திருக்கிறேன். இப்போது என் தாய் எனக்கு வேண்டும். வெட்டுண்ட தலை அவரது உடலோடு இணைய வேண்டும்.’’ பரசுராமர் போன்ற மகத்தான ரிஷிகளால்தான் பூவுலகில் தான் பரவவேண்டும் என மகாசக்தி காத்திருப்பதை உணர்ந்து ஜமதக்னி மகிழ்ந்தார். ‘‘போ...உன் தாயின் சிரசையும் உடலையும் ஒன்று சேர். அவள் உயி ரோடு எழுவாள்’’ என்றார்.
பரசுராமர் அந்த இருட்டில் தன் தாயின் சிரசை கையில் தாங்கினார். கைகளால் துழாவி உடலை எடுத்து இணைத்தார். அப்போது நிலவை மறைத்தி ருந்த மேகம் விலக, அந்த ஒளியில் தன் தாயைப் பார்த்த அவர் அதிர்ந்தார். தன் தாயின் சிரசும், வேறொரு பெண்ணின் உடலும் இணைந்து உயிர் பெற்றிருந்தது! இப்படி உயிர்பெற்ற உடல் மகாசக்தியாகவே மிளிர்ந்தது. அதுமுதல் அன்னை சக்தி, இதே வடிவத்தோடு கிராம எல்லை, நகரத்தின் மையம், ஆற்றங்கரையோரம் என்று எல்லாவிடத்திலும் வேரூன்றி நின்றாள். தாயின் தலை வெட்டுண்ட தலமே கீழ்மாம்பட்டு ஆகும். அம்மசார் அம்மன் எனும் பெயரோடு இத்தலத்தில் அன்னை அருள்மழை பொழிகிறாள்.
கடந்த 2000ம் ஆண்டு கும்பாபிஷேகத்திற்குப் பிறகு, ஆண்டுதோறும் மஹோத்ஸவங்களும் திருவிளக்கு பூஜைகளுடன் கூடிய திருவிழாக்களும் வெகுசி றப்பாக நடைபெற்று வருகின்றன. பௌர்ணமி அன்று சிறப்பு ஊஞ்சல் உற்சவமும், வெள்ளிக்கிழமை சிறப்பு அபிஷேகமும் புஷ்பாஞ்சலியும் அன்னதா னமும் நடைபெற்று வருகின்றன. புதுப்பிக்கப்பட்ட இந்த ஆலயம் கார்த்திகை மாதம் 24ம் நாள் (9.12.2012) மீண்டும் கும்பாபிஷேகம் காண திருவருள் கூடியுள்ளது.
அம்மசார் அம்மனுக்குரிய அபிஷேகங்கள் செய்வதன் மூலம் பல நன்மைகள் வாய்க்கப்பெறும்.
தண்ணீர் அபிஷேகித்தால், காரிய வெற்றி, நல்லெண்ணெய் -மன அமைதி, அரிசிமாப்பொடி -கடன் தீருதல், மஞ்சள் பொடி -வசீகரம், திரவிய பொடி - நோய்கள் நீக்கம், பசும் பால் - ஆயுள் விருத்தி, தயிர் -புத்திர சந்தானம், பஞ்சாமிர்தம் - உடல் நலம், தேன் - இனிய குரல், இளநீர் - குடும்ப நலன், பழச்சாறு - பயிர் வளர்தல், எலுமிச்சை சாறு எதிரி பயம் நீக்கம், விபூதி முக்தி, ஸ்வர்ணாபிஷேகம் - தங்கம் முதலிய ஆபரண சேர்க்கை, சந்தனம் - அஷ்ட செல்வம் கிட்டுதல், கலசாபிஷே கம் - ராஜபோக வாழ்வு கிட்டும்.
அம்மசார் அம்பிகையை தொடர்ந்து 11 பௌர்ணமி நாட்களில் எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபாடு செய்து வணங்கினால் நினைத்த காரியம் கைகூடும்.
செஞ்சி-விழுப்புரம் சாலையிலுள்ள ஜெயம்கொண்டானிலிருந்து 10 கி.மீ. தொலைவிலும், திண்டிவனம்-திருவண்ணாமலை வழியே, நாட்டார்மங்களத்திலி ருந்து 10 கி.மீ. தொலைவிலும் அம்மசார் அம்மன் கோயில் அமைந்துள்ளது. ஆலயத் தொடர்புக்கு: 9443445466.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நினைத்ததெல்லாம் நிறைவேற்றும் அம்மசார் அம்பிகை
» ஆசைகளை நிறைவேற்றும் ஆம்ரவனேஸ்வரர்
» ஆசைகளை நிறைவேற்றும் ஆம்ரவனேஸ்வரர்
» எண்ணங்களை நிறைவேற்றும் சின்னங்கள்
» நினைத்ததை நிறைவேற்றும் மந்திரங்கள்
» ஆசைகளை நிறைவேற்றும் ஆம்ரவனேஸ்வரர்
» ஆசைகளை நிறைவேற்றும் ஆம்ரவனேஸ்வரர்
» எண்ணங்களை நிறைவேற்றும் சின்னங்கள்
» நினைத்ததை நிறைவேற்றும் மந்திரங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum