அம்மா விழா காம்பியர் விவேக்
Page 1 of 1
அம்மா விழா காம்பியர் விவேக்
யார் முதல்வராக வந்தாலும் எட்டு மணிநேரம் விழா என்ற பெயரில் தமிழ் சினிமா அவர்களுக்கு ஜால்ரா தட்டும். ஒருமுறை ஐயா வாழ்க என்று சொல்லும் அதே வாய்கள் அடுத்தமுறை அம்மாவே சரணம் என புரண்டு கொள்ளும்.
ஐயாவும் இதற்காக கவலைப்படுவதில்லை, அம்மாவும் அசருவதில்லை. இந்த மானங்கெட்டப் பிழைப்பை தமிழ் சினிமாவும் நிறுத்துவதாயில்லை.
இந்தமுறை ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு அம்மா இந்த ஜால்ராக்களை அண்டவிடவில்லை. இதுவரை சினிமா விழாக்கள் எதிலும் அவர் கலந்து கொள்ளவில்லை என்பதே சாதனைதான்.
ஐயாவைப் போல் குப்பையான படங்களைப் பார்த்து போலியாக புல்லரித்து பேட்டிக் கொடுக்காததால் தமிழக ரசனை கொஞ்சம் ஆரோக்கியமாகவே உள்ளது. இந்நிலையில்தான் அம்மா ஒரு சினிமா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார். இதனை ஒட்டு மொத்த தமிழகமும் ஆவலோடு எதிர்பார்க்கிறது.
ஜெயா தொலைக்காட்சி சார்பாக நடத்தப்படும் விழா என்றாலும் இந்த விழா மெல்லிசை மன்னர்களான எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தியை கௌரவிப்பதற்காக நடத்தப்படும் விழா.
தன்னைத்தானே புரமோட் செய்யும் வித்தையறியாத இந்த மேதைகள் இதுவரை அங்கீகாரத்தின் நிழலைக்கூட தரிசித்ததில்லை எனலாம். ஜனங்கள் இவர்களின் பாடலை கேட்கையில் கொள்ளும் பரவசம் மட்டுமே இதுவரை இவர்களின் அங்கீகரமாக இருந்து வந்திருக்கிறது.
இந்நிலையில் முதல்வர் இவர்களை கௌரவிக்கும் விழாவில் கலந்து கொள்கிறார் எனும் போது அதனை வரவேற்க வேண்டியது நமது கடமை. ரஜினி, கமல் போன்ற திரையுலக விஐபி களும் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகஸ்ட் 22 நடப்பதாக இருந்த இந்த விழா முதல்வரின் ஷெட்யூல்ட் காரணமாக சில நாட்கள் தள்ளிப் போயுள்ளது. இதுவரை பொறுத்த ரசிகர்கள் இன்னும் சில நாட்கள் பொறுக்க மாட்டார்களா என்ன.
விழாவின் ஒரேயொரு நெருடலான அம்சம், விவேக். இவர்தான் விழாவை தொகுத்தளிக்கப் போகிறாராம். தொகுத்து அழிக்காமல் இருக்க வேண்டும் என்பதே நம் பிரார்த்தனை.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கமல் விழா.. கடுப்பில் ‘அம்மா’!
» நாகேஷ் வேடத்தில் விவேக் - கலி முத்திடுச்சி
» திரைப்படம் இயக்குகிறார் விவேக்
» விவேக் – மீண்டும் கெட்டப்
» பரிசோதனை முயற்சியில் விவேக்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum