சுக்கு அடை
Page 1 of 1
சுக்கு அடை
தேவையான பொருள்கள்:
சுக்கு = 100 கிராம்
மிளகு = 20 கிராம்
அதிமதுரம் = 20 கிராம்
சிவனார் வேம்பு = 20 கிராம்
வெண்கடுகு = 20 கிராம்
கடுகு ரோகிணி = 20 கிராம்
கிராம்பு = 5 கிராம்
ஏலக்காய் = 5 கிராம்
செய்முறை:
சுக்கை தோல் நீக்கி இடித்து சலித்து கொள்ளவும். மிளகை இளம் வறுவலாக இடித்து சலித்து கொள்ளவும் அதிமதுரத்தை ஒன்றிரண்டாக இடித்து மண் பாத்திரத்தில் போட்டு 200 மி.லி இளநீர் விட்டு 3 மணி நேரம் ஊற வைத்து எடுத்து நிழலில் உலர்த்தி இடித்து சலித்து கொள்ளவும்.
சிவனார் வேம்பை ஒரு மண் பாத்திரத்தில் போட்டு தூய நீர் விட்டு கழுவி நீரை வடித்து விட்டு 200 மி.லி பசும்பாலை ஊற்றி 3 மணி நேரம் ஊற வைத்து பாலை அகற்றி விட்டு சிவனார் வேம்பை நிழலில் உலர்த்தி எடுத்து இடித்து சலித்து கொள்ளவும்.
வெண்கடுகு மற்றும் கடுகு ரோகிணி இரண்டையும் தனித்தனியாக தூய நீரில் கழுவி நிழலில் உலர்த்தி இடித்து சலித்து கொள்ளவும். சலித்து வைத்த அனைத்தையும் ஒன்றாக கலந்து கொள்ளவும்.
ஒரு மண் பானையில் 500 மி.லி தூய நீர் விட்டு கொதி வரும் நேரத்தில் கிராம்பையும், ஏலக்காயையும் ஒன்றாக இடித்து போட்டு மீண்டும் கொதிக்க வைத்து சிறிது நீர் சுண்டியதும் கஷாயத்தை இறக்கி வைக்கவும்.
சலித்து கலந்து வைத்த தூளை ஒரு பானையில் போட்டு கஷாயத்தை மரக்கரண்டியால் சிறிது சிறிதாக ஊற்றி குழம்பு பதம் வரும் வரை ஊற்றி நன்றாக கிண்டி மண் மூடியால் மூடி 1 மணி நேரம் வைத்து எடுத்து மீண்டும் சிறிது சிறிதாக கஷாயத்தை ஊற்றி கரண்டியால் சிறிது மருந்தை எடுத்து கைகளில் சிறிது நெய்யை தடவி கொண்டு 1 ரூபாய் அளவில் அடை தட்டி மண் தட்டிகளில் பரப்பி நிழலில் காய வைத்து பத்திரப்படுத்தவும்.
உபயோகிக்கும் முறை:
உணவுக்கு 1 மணி நேரம் முன்பு பாதி அளவு அடையை சாப்பிட்டு வெந்நீர் குடித்து வர வேண்டும். இவ்வாறு ஒரு நாளைக்கு 2 வேளை வீதம் 8 நாட்கள் சாப்பிட்டு வர வேண்டும்.
தீரும் நோய்கள்:
வயிறு தொடர்பான அனைத்து நோய்களும் குறையும். வாயு சம்பந்தப்பட்ட நோய்களும் குறையும்.
குறிப்பு:
இந்த மருந்தை சாப்பிடும் போது பேதி ஏற்பட்டால் மருந்தின் அளவை குறைத்து அதிலும் பாதியாக சாப்பிட வேண்டும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» அஜீரண கோளாறுகளால் அவதிப்படுபவர்கள் சுக்கு, மல்லி, பனைவெல்லம் சேர்த்து சுக்கு காபி குடித்து வந்தால் அஜீரணம் போயே போச்சு.
» சுக்கு சுக்கு சுக்கு
» சுக்கு சுக்கு சுக்கு
» சுக்கு குழம்பு
» சுக்கு குழம்பு
» சுக்கு சுக்கு சுக்கு
» சுக்கு சுக்கு சுக்கு
» சுக்கு குழம்பு
» சுக்கு குழம்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum