தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நதியாவின் இங்கிலிஷ்

Go down

நதியாவின் இங்கிலிஷ் Empty நதியாவின் இங்கிலிஷ்

Post  ishwarya Thu Mar 07, 2013 6:12 pm


தமிழில் அரை டஜன் படங்கள் டைட்டில் பிரச்சனையில் சிக்கியுள்ளன. இன்னும் அரை டஜன் படங்கள் பிரச்சனையில் சிக்குவதற்கென்றே வில்லங்கமான பெயரை தேர்வு செய்துள்ளன. மலையாளத்திலும் இந்த ட்ரெண்ட் அறிமுகமாகியிருக்கிறது.

சினிமாவில் வடை செய்கிறவர்களைவிட தயிர்வடை செய்கிறவர்கள்தான் அதிகம். வடை செய்ய மாவு அரைக்க வேண்டும் பற்பல விஷயங்கள் மேற்கொள்ள வேண்டும். தயிர்வடை செய்ய வடையில் தயிரை ஊற்றினால் போதும். இதுவும் மோகன்லால் ஒரு படத்தில் சொன்னதுதான். ஒரு பெயரை தேர்வு செய்து அதனை பிரபலப்படுத்துவதைவிட பிரபலமான பெயரை படத்துக்கு தேர்ந்தெடுத்தால்... இதுதான் தயிர்வடை டெக்னிக்.

ஸ்ரீதேவி நடித்திருக்கும் இங்கிலிஷ் விங்கிலிஷ் படத்தை பல கோடிகள் விளம்பரம் செய்து குக்கிராமம்வரை கொண்டு சேர்த்திருக்கிறார்கள். இப்போது மலையாளத்தில் நதியா நடிக்கும் படமொன்றுக்கு இங்கிலிஷ் என்று பெயர் வைத்துள்ளார்கள். இதை கேள்விப்பட்டதும் இங்கிலிஷ் விங்கிலிஷ் தயா‌ரிப்பாளர்கள் படத்தின் பெயரை மாற்ற கேட்டிருக்கிறார்கள். இங்கிலிஷ் என்ன உங்க பாட்டன் சொத்தா என்று சம்பந்தப்பட்டவர்கள் அதனை காதிலேயே வாங்கவில்லை.

வடைகளைவிட தயிர் வடைக்குதான் எப்போதும் மவுசு.
நதியா இங்கிலிஷ்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum