தமிழுக்கு வரும் மலையாள மெட்ரோ
Page 1 of 1
தமிழுக்கு வரும் மலையாள மெட்ரோ
கலைஞர் தொலைக்காட்சியில் மத்தியான வேளைகளில் மலையாள டப்பிங் படங்களை போட்டு தாளிக்கிறார்கள். மலையாளத்தில் காமெடியாக இருக்கும் வசனங்கள் தமிழில் சண்டைக்கு கூப்பிடுவது போலிருக்கும். கடி தாங்காது. இந்தப் படங்கள் திரையரங்குகளில் வருவதாகத் தெரியவில்லை.
மம்முட்டி, பிருத்விராஜ் நடித்த போக்கிரி ராஜாவை ராஜா போக்கிரி ராஜா என்ற பெயரில் தமிழில் டப் செய்தார்கள். மலையாளத்திலேயே மொக்கை வாங்கிய படம். தமிழில் வந்ததும் தெரியாது போனதும் தெரியாது. தப்பினான் தமிழன்.
மலையாள ரீமேக்கெல்லாம் இந்த மாதிரிதான் இருக்கிறது. ஆனாலும் சில துணிச்சல்காரர்கள் மலையாளப் படங்களை டப் செய்யும் சாகஸத்தை செய்கிறார்கள். காவல் தேசம் என்ற பெயரில் மலையாள மெட்ரோவை தமிழுக்கு கொண்டு வருகிறார்கள். மலையாள என்ற அடைமொழிக்கு காரணம் இந்தியிலும் இதே பெயரில் - மெட்ரோ - ஒரு படம் வெளிவந்திருக்கிறது.
மெட்ரோவில் சரத்குமார் ஹீரோ. பாவனா ஹீரோயின். கொச்சின் மாநகரில் நடக்கும் மூன்று சம்பவங்களின் கோர்வை கதை. சரத்குமாரை நம்பி டப்பிங் செய்கிறார்கள்.
ம்... சரத்குமார் சிலருக்கு நம்பிக்கை தருகிறார் என்பதெல்லாம் எவ்வளவு பெரிய அதிசயம்.
மெட்ரோ, காவல் தேசம், சரத்குமார்
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தமிழுக்கு வரும் மை பாஸ்?
» தமிழுக்கு வரும் இஷ்க்
» தமிழுக்கு வரும் பிரஸ்தானம்
» தமிழுக்கு வரும் பன்ஜா
» தமிழுக்கு வரும் பியூட்டிஃபுல்
» தமிழுக்கு வரும் இஷ்க்
» தமிழுக்கு வரும் பிரஸ்தானம்
» தமிழுக்கு வரும் பன்ஜா
» தமிழுக்கு வரும் பியூட்டிஃபுல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum