தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வாழ்க்கை சிறப்படைய கடைபிடிக்க வேண்டிய பத்து கட்டளைகள்

Go down

வாழ்க்கை சிறப்படைய கடைபிடிக்க வேண்டிய பத்து கட்டளைகள் Empty வாழ்க்கை சிறப்படைய கடைபிடிக்க வேண்டிய பத்து கட்டளைகள்

Post  meenu Thu Mar 07, 2013 5:43 pm

அன்பு இருக்கும் இடத்தில் வாழ்வு இருக்கும். பகை அழிவில் கொண்டு விடும். யார் மீது வேண்டுமானாலும் அன்பைக் கொண்டு ஆதிக்கம் செலுத்தலாம். இதைத்
தவிர உயர்ந்த ஆயுதம் எதுவும் என்னிடம் இல்லை.

காந்திஜி

புத்திமதி:

1. பிறரது குற்றங்களை ஒருக்காலும் பேசாதே. அவை எவ்வளவு கெட்டவையாயினும் சரி. அதனால் எந்த பயனும் விளையப் போவதில்லை.

2. பிறர் குற்றத்தைப் பேசுவதால், அவனுக்கு மட்டுமின்றி, உனக்கும் நீயே கேடிழைத்துக் கொள்கிறாய். -

விவேகானந்தர்

கடமைகள்:

1. பகைவனை நண்பனாக்கிக் கொள்ளுதல்

2. துஷ்டனை நல்லவனாக்குதல்

3. படிக்காதவனை கல்விமான் ஆக்குதல்

குறைகள்:

1. மந்திரத்தின் குறை பாராயணம் செய்யாமை

2. வீட்டின் குறை பழுது பாராமை

3. அழகின் குறை சிரத்தை இன்மை

4. காவலாளியின் குறை கவனக்குறைவு

போதுமே:

1. எவர் ஒருவர் நண்பரைத் தேடி அலைகின்றாரோ அவருக்கு அல்லாஹ் போதுமானவன்.

2 எவர் ஒருவர் வழிகாட்டியைத் தேடி அலைகின்றாரோ அவருக்கு அல்குர்ஆன் போதுமானது.

3. எவர் ஒரு உபதேசியைத் தேடி அலைகின்றாரோ, அவருக்கு மரணம் போதுமானதாகும்.

4 எவர் பணத்தைத்தேடி அலைகின்றாரோ, அவருக்கு போதுமென்ற மனமே போதுமானது.

5. எவர் இந்த நான்கிலும் படிப்பினை பெறவில்லையோ, அவருக்கு நரகம் போதுமானது. -

நபிகள் நாயகம்

மனமே ஆறு:

1. எதிர்காலத்தைப் பற்றிய பயம் வேண்டாம்.

2. பயப்படாதே, நான் உனக்கு துணை நிற்கிறேன், என்பது இயேசு நமக்கு அளிக்கும் ஆறுதல் வார்த்தை.

3. நீர் (ஆண்டவர்) எனக்கு துணையாக என் அருகில் இருக்கிறீர், என்கிறார் தாவீது ராஜா.

4. கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார். நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்ன செய்வான்.

5. தேவபயம் இன்றியமையாதது. மனுஷபயம் தவிர்க்கப்பட வேண்டியது.

6. கர்த்தருக்கு பயப்படுகிறவனுக்கு திடநம்பிக்கை உண்டு. அவன் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும். இந்த 6மொழிகளும், வாழ்க்கைப் பயத்தை நீக்கி ஆறுதல் தரும்.

நன்முத்து:

1. சோம்பலை உடனே ஒதுக்கித்தள்ளு.

2. குழந்தை உள்ளத்துடன் வாழ கற்றுக்கொள்

3. கோழைத்தனத்தை பள்ளத்தாக்கிற்குள் எறி.

4. சிந்தனை ஆற்றல் உள்ள மூளை மட்டும் போதும்.

5. பலவீனம் என்ற சொல்லை அகராதியில் எடுத்து விடு

6. ஆறறிவையும் பயன்படுத்தி ஆற்றலுடன் திகழ்.

7. வேலை செய்யும் கைகளை மட்டும் வைத்துக் கொள்.

உன் சொத்து:

1. வீண் பேச்சு பேசாதே

2. ஒழுக்கத்தைப் பேணு

3. நல்லவனாக வாழ்

4. கெட்டவனுடன் சேராதே

5. பேச்சில் இனிமை சேர்

6. ஆராய்ந்து செயலில் இறங்கு

7. பெரியவர்களுடன் சேர்ந்திரு

8. பொய்யை மெய்யாக்காதே!

கட்டுப்பாடுகள்:

1. உணவைக் குறை; நாக்கைக்கட்டுப்படுத்து.

2. சவாரியைக் குறை; அதிகமாக நட.

3. கவலையைக் குறை; சிரித்துப் பழகு.

4. சோம்பலைக் குறை; நன்றாக வேலை செய்.

5. பேச்சைக் குறை; அதிகமாய் சிந்தி.

6. செலவைக் குறை; அதிகமாய் தானம் செய்.

7. திட்டுவதைக் குறை; அதிகமாய் அன்பு காட்டு.

8. உபதேசத்தைக் குறை; செயலை அதிகரி.

9. கெட்ட பழக்கத்தை விடு; நல்லதை கடைபிடி

அறிவுரை:

1. எவர் மீதும் கோபம் கொள்ளாதே

2. எந்தக் கவலைக்கும் இடமளிக்காதே

3. சுக போகங்களில் மூழ்கி விடாதே

4. பிறரிடம் பொறாமை கொள்ளாதே

5. சோம்பலை நுழைய விடாதே

6. சுறுசுறுப்போடு உழைத்துக் கொண்டிரு

7. பிறர் பொருளைப் பறிக்க நினைக்காதே

8. எவரையும் ஏளனமாகப் பேசாதே

9. பேராசை, பெருவிருப்பம் கொள்ளாதே.

10. யாரையும் வெறுத்து ஒதுக்காதே.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum