தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மக்கள் கலைஞர் ஜெய்சங்க‌ரின் மகனின் இலவச மருத்துவ முகாம்

Go down

மக்கள் கலைஞர் ஜெய்சங்க‌ரின் மகனின் இலவச மருத்துவ முகாம் Empty மக்கள் கலைஞர் ஜெய்சங்க‌ரின் மகனின் இலவச மருத்துவ முகாம்

Post  ishwarya Thu Mar 07, 2013 2:40 pm

தாயைப் போல பிள்ளை நூற்றில் ஒன்று இருக்கலாம். தந்தையைப் போல தனயன் இருப்பது அபூர்வம். அதுவும் கலைத்துறையில் சாத்தியங்கள் மிகக்குறைவு.

மக்கள் கலைஞர் ஜெய்சங்கருடன் பழகியவர்கள் அனைவரும், உற்சாகம் தரும் நெகிழ்ச்சியான மனிதராகவே அவரை நினைவுகூர்கிறார்கள். சத்தமில்லாமல் அவர் செய்த உதவிகளை பட்டியலிடுகிறார்கள். பழகுவதில் அப்படியொரு இனிமையாம் ஜெய்சங்கர்.

அவருடன் பழகாதவர்கள் அந்தக்குறையப் போக்க அவரது மகன் டாக்டர் விஜய சங்கருடன் பேசினால் போதும். கண் மருத்துவராக இருக்கும் இவர் தனது தந்தையின் துறையை இப்போதும் மறக்கவில்லை. வரும் 14ஆம் தேதி ஞாயிறு அன்று சென்னை பெப்சி வளாகத்தில் இலவச கண் சிகிச்சை முகாமை திரைப்பட தொழிலாளர்களுக்காக நடத்துகிறார். க‌‌ண்ணோளி சிகிச்சை பெற விரும்பும் அனைத்து திரைப்பட சங்கங்களைச் சேர்ந்தவர்களும் இதில் கலந்து கொள்ளலாம். சிகிச்சை மட்டுமின்றி கண்ணாடியும் முற்றிலும் இலவசம்.

இதேபோன்ற இலவச சிகிச்சை முகாம்களை விஜய சங்கர் அடிக்கடி நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஞாயிற்றுக்கிழமை இலவச முகாமை இயக்குனர்கள் சங்கம் ஒழுங்கு செய்துள்ளது.
ஜெய்சங்கர் மகன் விஜய சங்கர்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum