தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பசங்க பார்ட் 2 - விஜய் மில்டன் இயக்குகிறார்

Go down

பசங்க பார்ட் 2 - விஜய் மில்டன் இயக்குகிறார்  Empty பசங்க பார்ட் 2 - விஜய் மில்டன் இயக்குகிறார்

Post  ishwarya Thu Mar 07, 2013 2:08 pm

பாண்டிராஜுக்கு முதல் படத்தில் தேசிய அங்கீகாரம் வாங்கித் தந்த பசங்க படத்தின் இரண்டாம் பாகம் இந்த மாத இறுதியில் தொடங்குகிறது. பசங்க படத்தில் நடித்த சிறுவர்கள் இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார்கள்.

பசங்க சென்சேஷனல் ஹிட். பள்ளிக் குழந்தைகளின் சேட்டையும், விமல், வேகாவின் காதலும், ஜேம்ஸ் வஸந்தனின் இசையும்... பசங்க மறக்க முடியாத படம். இதன் இரண்டாம் பாகத்தை எடுத்தால் என்ன என்று ஒளிப்பதிவாளர் விஜய் மில்டனுக்கு தோன்றியிருக்கிறது. ஏற்கனவே அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது படத்தை எடுத்து தோற்ற அனுபவம் இவருக்கு உண்டு.

விஷயத்தை பாண்டிரா‌ஜிடம் சொன்னதும் மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டதோடு இரண்டாம் பாகத்துக்கு வசனம் எழுதித் தரவும் ஒப்புக் கொண்டுள்ளார். தயா‌ரிப்பு... வேறு யாராக இருக்கும், விஜய் மில்டனேதான்.

பசங்க படத்தில் நடித்த சில்வண்டுகளை வைத்து டெஸ்ட் ஷூட் ஒன்றை நடத்தினார் விஜய் மில்டன். நிஜ படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்குகிறது.

விமல், வேகா ஜோடிக்குப் பதில் வேறு புது ஜோடி நடிக்கும் என தெ‌ரிகிறது.
பசங்க 2, விஜய் மில்டன், பாண்டிராஜ்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum