தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கட்டம் கட்டப்பட்ட கலை இயக்குனர்

Go down

கட்டம் கட்டப்பட்ட கலை இயக்குனர்  Empty கட்டம் கட்டப்பட்ட கலை இயக்குனர்

Post  ishwarya Thu Mar 07, 2013 2:07 pm

தயா‌ரிப்பாளர்கள், பெப்சி மோதல் முடிவுக்கு வந்ததா? இல்லை தொடர்கிறதா? இந்த‌க் கேள்விக்கு இன்னும் ச‌ரியான பதில் யாருக்கும் தெ‌ரியவில்லை. ஆனால் படப்பிடிப்புகள் சகஜமாக நடந்து வருகின்றன. ஆனால் மோதல் முற்றிய நேரத்தில் உண்டான நெருப்புப் பொறி இன்னும் கனன்று கொண்டிருக்கிறது. முக்கியமாக கலை இயக்குனர்களுக்கான சங்கத்தில்.

இதன் தலைவராக இருக்கும் சண்முகம் கலை இயக்குனர் வீரசமரை சங்கத்தைவிட்டு தற்காலிகமாக நீக்கியிருக்கிறார். பெப்சி, தயா‌ரிப்பாளர்கள் மோதல் நேரத்தில் பெப்சியின் தீர்மானத்தை எதிர்த்து தயா‌ரிப்பாளர்களுக்கு ஆதரவாக படப்பிடிப்பில் வீரசமர் கலந்து கொண்டார் என்பது குற்றச்சாற்று. லெட்டர்பேடில் இந்த‌க் குற்றாச்சாற்று இருந்தாலும் சண்முகத்துக்கும் வீரசமருக்கும் ஏற்கனவே மனக்கசப்பு இருந்து வந்திருக்கிறது, அதன் வெளிப்பாடே இந்த தற்காலிக் நீக்கம் என்கிறார்கள்.

தற்காலிக நீக்கம் என்பதுடன் முடிந்திருந்தால் பரவாயில்லை. நாட்டாமையில் விஜயகுமார் சொன்ன தீர்ப்பு மாதி‌ரி வீரசமருடன் ஆரும் பேசக்கூடாது, ஆரும் பழகக் கூடாது, ஆரும் தொழில் வச்சுக்கக் கூடாது என்ற ‌ரீதியில் ஒரு வாக்கியத்தையும் சேர்த்து கலை இயக்குனர்கள் சங்கமா இல்லை கட்ட பஞ்சாயத்து கூடமா என்றொரு சந்தேகத்தை கிளப்பியிருக்கிறார்கள்.

சங்கம் எது வேண்டுமானாலும் செய்யட்டும், என்னுடைய கலை இயக்கம் தொடரும் என வீரசமர் தொடை தட்டியிருப்பதால் பிரச்சனை மேலும் பெ‌ரிதாக அதிக வாய்ப்புள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum