கிங் ஆஃப் ரெமான்ஸ் யாஷ் சோப்ரா மறைந்தார்
Page 1 of 1

இந்தி திரையுலகின் ஜாம்பவான் யாஷ் சோப்ரா நேற்று காலமானார். சென்ற மாதம் அவர் தனது 80வது பிறந்தநாளை கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர், திரைக்கதையாசிரியர், தயாரிப்பாளர் என முப்பரிமாணம் கொண்ட யாஷ் சோப்ரா தனது முதல் படத்தை இயக்கியது 1959ல். 1961ல் வெளியான தர்மபுத்ரா அவரை ஒரு முக்கியமான இயக்குனராக அடையாளம் காட்டியது. 1965ல் வெளியான Waqt இன்றும் ஒரு முக்கியமான படமாக கருதப்படுகிறது. சுனில் தத், ராஜ்குமார், சஷி கபூர், ஷர்மிளா தாகூர் என அன்றைய பிரபல நட்சத்திரங்கள் பலரை ஒரே படத்தில் இயக்கி ஒரு புது ட்ரெண்டை இந்தப் படத்தில் யாஷ் சோப்ரா தொடங்கி வைத்தார்.
1973ல் யாஷ் சோப்ரா யாஷ் ராஜ் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு கம்பெனியை தொடங்கி சொந்தமாக படங்கள் தயாரிக்க ஆரம்பித்தார். இன்றும் இந்நிறுவனம் துடிப்புடன் செயல்பட்டு வருகிறது. எழுபதுகளில் இவர் இயக்கிய பல படங்கள் இந்திய கமர்ஷியல் சினிமாவின் சரித்திரங்களாக அமைந்தன. முக்கியமாக தீவார். 1975 ல் வெளியான இப்படமே அமிதாப்பச்சனை பாலிவுட்டின் கோபக்கார இளைஞனாக உருவாக்கியது.
2004 ல் வெளிவந்த வீர் - சாரா படத்துக்குப் பிறகு நீண்ட இடைவெளி எடுத்துக் கொண்டவர் இந்த வருடம் ஷாருக்கான் நடிப்பில் Jab Tak Hai Jaan படத்தை இயக்கினார். சென்ற மாதம் 27ஆம் தேதி தனது 80வது பிறந்தநாளை கொண்டாடியவர், திரைத்துறையிலிருந்து ஓய்வு எடுத்துக் கொள்வதாக அறிவித்தார். அவுரிமான Jab Tak Hai Jaan நவம்பர் 13 வெளியாகிறது.
கடந்த 13 ஆம் தேதி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட யாஷ் சோப்ரா மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று சிகிச்சை பலனளிக்காமல் அவர் மரணமடைந்தார்.
இமயத்தை ஒரு சின்ன கொசு வீழ்த்திவிட்டது. இனியாவது இந்திய அரசு டெங்கு ஜுரத்திலிருந்து விழித்தெழுமா?
யாஷ் சோப்ரா காலமானார், டெங்கு

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மறைந்தார் என்னத்தே கண்ணையா
» ஓய்வை அறிவித்தார் யாஷ் சோப்ரா.. ஷாரூக்கான் படம்தான் கடைசி
» பழம்பெரும் நடிகர் "என்னத்த' கண்ணையா மறைந்தார்
» சன் ஆஃப் சர்தார்.... சந்தானம்?
» தமிழ் சினிமா – ‘சொதப்பல்ஸ் ஆஃப் 2011′

Permissions in this forum:
You cannot reply to topics in this forum