தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மிர்ச்சி சிவாவின் யா யா

Go down

மிர்ச்சி சிவாவின் யா யா Empty மிர்ச்சி சிவாவின் யா யா

Post  ishwarya Thu Mar 07, 2013 1:44 pm

காமெடி ஹீரோக்களுக்குதான் இப்போது மவுசு. சீ‌ரியஸான முகமூடி, மாற்றான் என்று ஒவ்வொரு படமாக ஊத்தி மூட ஒரு கல் ஒரு கண்ணாடி, கலகலப்பு, மனம் கொத்தி பறவை என்று காமெடி பேஸ்டு ஹீரோக்கள் கல்லா கட்டுகிறார்கள். இவர்கள் காட்டில்தான் இப்போது பேய் மழை.

மிர்ச்சி சிவா ஏற்கனவே இரண்டு படங்களில் கமிட்டாகி நடித்துக் கொண்டிருக்கிறார். சொன்னா பு‌ரியாது அதில் ஒன்று. இறுதிகட்டத்தில் இருக்கிறது இந்த‌ப் படம். அடுத்து தில்லு முல்லு. இரண்டையும் முடித்து வந்தால் சுந்தர் சி. கலகலப்பு பார்ட் டூ-வுடன் தயாராக இருப்பார்.

இந்த சந்தடிக்கிடையில் இன்னொரு சலசலப்பாக யா யா என்றொரு புதிய படம். பெயரை கேட்ட உடனேயே படத்தின் இயக்குனர் ராஜேஷ் எம்.மின் அசிஸ்டண்டாக இருப்பார் என யூகித்தவர்களுக்கு ஒருகூடை திருட்டு டிவிடி ப‌ரிசளிக்கலாம். சிவா என்ன சோஷியல் மெசேஜா சொல்லப் போறார்? வயிறு வலிக்க சி‌ரிக்க வைப்பதுதான் இந்த டீமின் டார்கெட்டாம்.

வாங்க ராசா வந்து நல்லா சி‌ரிக்க வைங்க.
மிர்ச்சி சிவா, யா யா

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum