தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அடுத்தும் அறிமுகம்தான் - அசத்தும் அட்டகத்தி தயா‌ரிப்பாளர்

Go down

அடுத்தும் அறிமுகம்தான் - அசத்தும் அட்டகத்தி தயா‌ரிப்பாளர்  Empty அடுத்தும் அறிமுகம்தான் - அசத்தும் அட்டகத்தி தயா‌ரிப்பாளர்

Post  ishwarya Thu Mar 07, 2013 1:33 pm

முதல் படம் அட்டகத்தி. அதன் கூர்மை குறைவதற்குள் அடுத்தப் படம் பீட்சா. இரண்டுமே பாக்ஸ் ஆஃபிஸில் நல்ல ம‌ரியாதையோடு வீற்றிருக்க என்னுடைய அடுத்தப் படத்தை இயக்கப் போவதும் ஒரு அறிமுக இயக்குனர்தான் என்று அறிவித்திருக்கிறார் இவ்விரு படங்களின் தயா‌ரிப்பாளரான சிவி குமார்.

கதை ஞானம் உள்ள தயா‌ரிப்பாளர்கள் இன்டஸ்ட்‌ரியில் குறைவு. அதற்கு மாற்றாக வந்திருக்கிறார் சிவி குமார். இவர் கதை கேட்டு ஓகே செய்து எடுத்த இரு படங்களும் ஒருவகையில் சோதனை முயற்சிதான். இயக்கியவரும் ச‌ரி படத்தில் நடித்த பாதிக்கு மேற்பட்ட நடிகர்களும் ச‌ரி, பங்கேற்ற தொழில்நுட்பக் கலைஞர்களும் ச‌ரி... அறிமுகங்கள்தான். அதேபோல் படத்தின் கான்செப்ட். இரண்டுமே வழக்கமான தமிழ் சினிமாவிலிருந்து மாறுபட்டவை.

பீட்சா நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் தனது அடுத்தப் படம் குறித்து அறிவித்துள்ளார். இன்னும் பெய‌ரிடப்படாத இந்தப் படத்தை இயக்குகிறவர் நளன். இவரைத் தவிர ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிற இன்னொருவர் முதலிரு படங்களுக்கும் இசையமைத்த சந்தோஷ் நாராயணன்.

தொடர்ந்து புதுமுகங்களை அறிமுகப்படுத்தும் சிவி குமார் சிரஞ்சீவி குமாராக வாழட்டும்.
அட்டகத்தி தயாரிப்பாளர் சிவி குமார்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum