சென்னை பாக்ஸ் ஆஃபிஸ் - முதலிடத்தில் அட்டகத்தி
Page 1 of 1

5. பாண்டி ஒலிபெருக்கி நிலையம்
எந்த மாதிரி கதைக்களத்திலும் நின்னு அடிக்கும் ராசுமதுரவனுக்கு பாண்டி ஒலிபெருக்கி நிலையம் மறக்க முடியாத கொடுங்கனவு. படம் வெளியிடும் நாளில் தடையுத்தரவு. ஒருவழியாக சமாளித்து கரையேறினால் தியேட்டரில் ஆளேயில்லை. முதல் மூன்று தினங்களில் 1.16 லட்சங்களை மட்டுமே வசூலித்து ராசுமதுரவனுக்கு வாழ்நாள் அதிர்ச்சியை தந்திருக்கிறது.
4. மிரட்டல்
மாதேஷின் காசு போட்டு காசு எடுக்கும் விளையாட்டில் உருவானது மிரட்டல். இதுவரை உலக சினிமா வரலாற்றில் காணாத லொகேஷன் என்று விளம்பரம் செய்கிறார்கள். சினிமாவுக்கும் லொகேஷனுக்கும் என்னய்யா சம்பந்தம்? பில்டப்பால் 1.42 கோடியை இதுவரை சென்னையில் சம்பாதித்துள்ளது. சென்ற வார இறுதி வசூல் 9.25 லட்சங்கள். வார வசூல் ஏறக்குறைய ஐந்து லட்சங்கள்.
3. நான் ஈ
ஹிட், பேகான்ஸ் பவருர்களுக்கு மத்தியில் இந்த ஈ இன்னமும் பறந்து கொண்டிருக்கிறது. ஏழு வாரங்கள் முடிவில் 6 கோடிகளை வசூலித்த இப்படம் சென்றவார இறுதியில் 12.8 லட்சங்களையும், வார நாட்களில் 11.8 லட்சங்களையும் வசூலித்துள்ளது. ஈ-யின் ஆயுளை முடிக்க துப்பாக்கிதான் வர வேண்டும்.
2. நான்
தி டேலண்டெட் மிஸ்டர் ரிப்ளியிலிருந்து மைல்டாகச் சுட்டு எடுத்திருக்கிறார்கள். ஹாலிவுட் மாவை நம்ம சூழலுக்கு இதைவிட பதப்படுத்த முடியாது. வார இறுதி மூன்று தினங்களில் 37.5 லட்சங்களை வசூலித்த படம் ஞாயிறு வரை 60 லட்சங்களை வசூலித்து ஆறுதலளித்துள்ளது.
1. அட்டகத்தி
சன்னின் அடாவடி விளம்பரத்தை தத்தெடுத்திருக்கிறார் ஞானவேல்ராஜா. அட்டகத்திக்கு ரசிகர்கள் அநியாயமாக பலியாகியிருக்கிறார்கள். சுமார் படமான இதனை வெற்றிமாறன், வெங்கட்பிரபு, கார்த்தி போன்ற நெம்புகோல்களின் துணையுடன் விளம்பரப்படுத்தி வார இறுதி மூன்று தினங்களில் 88 லட்சங்களுக்கு மேல் வசூலித்துள்ளார் ஞா.ராஜா. இதுவரை இப்படம் 1.32 கோடியை வசூலித்துள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சென்னை பாக்ஸ் ஆஃபிஸ் - முதலிடத்தில் மாற்றான்
» சென்னை பாக்ஸ் ஆஃபிஸ் - முதலிடத்தில் தாண்டவம்
» சென்னை பாக்ஸ் ஆஃபிஸ் - முதலிடத்தில் முகமூடி
» சென்னை பாக்ஸ் ஆஃபிஸ் – முதலிடத்தில் முகமூடி
» சென்னை பாக்ஸ் ஆஃபிஸ் – முதலிடத்தில் அரவான்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum