வித்தியாசமான ஆஞ்சநேயர் ஆலயங்கள்
Page 1 of 1
வித்தியாசமான ஆஞ்சநேயர் ஆலயங்கள்
திருவாரூர்-திருத்துறை பூண்டியில் அபீஷ்ட வரதராஜ பெருமாள் கோயிலில் 16 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் நின்ற கோலத்தில் அருள்புரிகிறார். இங்கே அமாவாசை, மூலநட்சத்திரம், அனுமன் ஜெயந்தி போன்ற நாட்களில் மட்டைத் தேங்காய் வழிபாடு நடைபெறுகிறது. விஸ்வரூப வைராக்ய ஆஞ்சநேயர் சந்நதியில், ஒரு சிவப்புத் துணியில், உரிக்காத மட்டைத் தேங்காய், வெற்றிலை பாக்கு, எலுமிச்சம்பழம் மற்றும் நம் கோரிக்கை எழுதப் பட்ட துண்டு சீட்டு இவற்றை இறுக முடிந்து, ஆலய அர்ச்சகரிடம் கொடுத்தால் அவர் அதனை பூஜை செய்த பின்பு, ஆலய உத்திரத்தில் கட்டி விடு வார். அடுத்த ஆண்டிற்குள் அந்த கோரிக்கைகள் கண்டிப்பாக நிறைவேறிவிடுகிறது. இது நேர்ச்சை பூஜை என அழைக்கப்படுகிறது.
நவமாருதி தரிசனம்
திண்டுக்கல் ராம் நகரில், அனுமனின் பக்தர்கள் நவமாருதி ஆலயத்தினை அமைத்துள்ளார்கள். நவகிரகங்கள் போலவே பால மாருதி, யோக மாரு தி, தீர மாருதி, பஜன மாருதி, வீர மாருதி, தியான மாருதி, பக்த மாருதி, பவ்யமாருதி, சஞ்சீவி மாருதி ஆகிய இந்த நவமாருதிகளும் எல்லா திசைகளையும் நோக்கியபடி அமைந்துள்ளனர். இவர்களுக்கு தனித்தனியே ஸ்லோகங் களும் உண்டு. நவமாருதிகளை எந்த திசை நோக்கி எவ்வாறு வழிபட வேண்டும் என்றும் அதனால் கிடைக்கும் பலன்களையும் ஆலயத்தில் விளக்கி எழுதி வைத்திருக்கிறார்கள்.
குரங்குகள் செய்யும் சிவ பூஜை
நாகப்பட்டினத்தில் உள்ள திரு குரங்குக்கா தலத்தில் குரங்குகள் செய்யும் பூஜை சித்திரை அல்லது வைகாசியில் ஏதேனும் ஒருநாள் நடக்கிறது. இவ் வாலயத்தில் குந்தள நாயகி சமேத குந்தளேஸ்வரர் அருள்புரிகிறார். இவ்வாலயம் ஆஞ்சநேயரால் அமைக்கப்பட்டது. அசோக மரம்தான் தலமரம். பல வில்வ மரங்களும் உள்ளன. இங்கு இரு குரங்குகள் சேர்ந்து வரும். ஒன்று மரத்தின்மேல் ஏறி வில்வ இலைகளை பறித்துப் போடும்; இன்னொன்று அந்த வில்வ இலைகளை எடுத்துச் சென்று கருவறை இறைவன் மேல் தூவும். இந்த லிங்கமும் அனுமனால் பிரதிஷ்டை செய்யப்பட்டதுதான்.
தேனாபிஷேக அனுமன்
தருமபுரி பேருந்து நிலையத்திலிருந்து 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, தருமபுரி ஆஞ்சநேயர் கோயில். 300 ஆண்டுகள் பழமையானது; இப் போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. தெருவில் நின்றவாறே கருவறை ஆஞ்சநேயரை தரிசிக்கலாம். இவருக்குத் தேனாபிஷேகம் செய்வதாக வேண்டிக் கொண்டால் கோரிக்கைகள் எளிதில் நிறைவேறுகின்றன. மூலவர் ஒன்றரை அடி உயரமே உள்ளவர். கைகூப்பியபடி கிழக்கு பார்த்து சேவை சாதிக்கி றார். இச்சிலையின் தலையில் ஒரு சிறு பள்ளம் அமைந்துள்ளது. தேனாபிஷேக காலத்தில் அனந்த பத்மநாத சுவாமி ஆவிர்பவித்துள்ள சாளக்கிராம த்தை இப்பள்ளத்தில் வைத்து அபிஷேகம் செய்வது இத்தல தனிச்சிறப்பு. அப்போது 41 பாடல்கள் கொண்ட ஹரிவாயுதுதி பாடுவார்கள். இந்த அபி ஷேகம் தினமும் காலை நேரத்தில் மட்டுமே நடக்கிறது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» 28 அடி உயர ஆஞ்சநேயர் சிலை: உலகிலேயே பெரிய ஆஞ்சநேயர் கோவில் கட்டும் அர்ஜூன்!
» வித்தியாசமான தோற்றங்களில் முருகன்
» வித்தியாசமான மாம்பழ கேசரி
» வித்தியாசமான தோற்றங்களில் முருகன்
» ரஜினியின் வித்தியாசமான சில ஸ்டைல்கள்!!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum