தானத்தில் சிறந்தது…
Page 1 of 1
தானத்தில் சிறந்தது…
தானங்களில் அன்னதானமும், வஸ்திர தானமும், தண்ணீர் தானமும் சிறந்தவை. அன்னதானம், ஒருவருடைய பசியைப் போக்கும்; வஸ்திர தானம், ஒருவருடைய மானம் காக்கும்; தண்ணீர் தானம், ஒருவருடைய தாகத்தைத் தீர்க்கும். அன்னதானம், ஒருவருடைய பசியைப் போக்குவதால், அந்த வயிறு, தானம் செய்தவனை வாழ்த்தும். அந்த அரிசியும், நாம் எடுத்த பிறவி, பிறருக்கு பயன்பட்டதே என்று சந்தோஷப்படும்.
ஒருவருக்கு பணமாகக் கொடுப்பதை விட, அன்னம் அளிப்பது சிறந்தது. பணமாகக் கொடுத்தால், அதை, அவன் துஷ்பிரயோகம் செய்ய முடியும். அன்னமாகக் கொடுத்தால் அதை சாப்பிடத் தான் பயன்படுத்துவான். அதனால், அன்னதானம் சிறந்தது.
அதே போல், வஸ்திர தானமும் சிறந்தது. ஒரு ஏழை, கிழிசல் துணியை அணிந்து மானம் காப்பாற்ற முடியாமல் இருக்கலாம். அப்படிப்பட்டவனுக்கு வஸ்திர தானம் செய்தால், அவனது மானம் காப்பாற்றப்படும்.
அதே போல், தாகமாக உள்ளவனுக்கு தண்ணீர் தானம் செய்தால், அதை, அவன் குடித்துவிட்டு, "அப்பாடா’ என்று சொல்லி சந்தோஷப்படுவான். அதற்காகத்தான் வெயில் காலத்தில் அங்கங்கே தண்ணீர் பந்தல் வைக்கின்றனர்.
சில கோவில்களில் விக்ரகத்துக்கு துணி கூட இல்லாமல் இருக்கும். அப்படிப்பட்ட கோவில்களுக்கு, வஸ்திரம் அளித்து உதவினால், உதவி செய்தவருக்கு துணிப் பஞ்சமே இராது. சில கோவில்களில் நல்லதாக பட்டுத்துணி வாங்கி பகவானுக்கு கொடுப்பர். ஆனால், மறுநாளே அதை ஏலம் விட்டு விடுவர் கோவில்காரர்கள்.
சில இடங்களில் நல்ல பட்டு வேஷ்டி, பட்டுப் புடவைகளை பகவானுக்கு சாத்துவர் பக்தர்கள். அதை, குறைந்த விலையில் விற்று விடுவர் கோவில்காரர்கள். இப்படியும் சில இடங்களில் நடப்பதுண்டு.
சில பெரிய கோவில்களில், இப்படி பகவானுக்கு சாத்தப்பட்ட துணிகளை, ஒரு வருஷம் வரை வைத்திருப்பர். ஒரு வருஷத்தில் எப்போது போய் கேட்டாலும் எடுத்துக் காட்டுவர். ஒரு வருஷம் ஆனபின் தான் ஏலம் விடுவர். இதில் பகவானுக்காக, துணி வாங்கிக் கொடுத்தவனுக்கு புண்ணியம் உண்டா என்றால், உண்டு. அதன் பின், அதை கோவில்காரர்கள் என்ன செய்கின்றனர் என்று கவலைப்பட வேண்டியதில்லை.
பசுவும், கன்றுமாக தானம் செய்கின்றனர். தெருக்கோடி போனதும், பசுவையும், கன்றையும் வேறு ஒருவனுக்கு விற்று விடுகிறான் தானம் வாங்கியவன். தானம் கொடுத்தவனுக்கு பலன் உண்டு. தானம் வாங்கியவன் அதை என்ன செய்கிறான் என்று கவலைப்பட வேண்டியதில்லை. அது போதுமே!

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» தியானத்தை விட சிறந்தது எது
» மவுனத்தை விட சிறந்தது எது?
» பொறுமையே சிறந்தது
» பொறுமையே மிகவும் சிறந்தது
» செய்யும் தொழிலே சிறந்தது!!!
» மவுனத்தை விட சிறந்தது எது?
» பொறுமையே சிறந்தது
» பொறுமையே மிகவும் சிறந்தது
» செய்யும் தொழிலே சிறந்தது!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum