செய்யும் தொழிலே சிறந்தது!!!
Page 1 of 1
செய்யும் தொழிலே சிறந்தது!!!
Love Your Work
கல்லுடைக்கும் தொழிலாளி ஒருவன் தன் தொழிலை நன்கு சந்தோஷமாக செய்து கொண்டு வாழ்ந்து வந்தான். ஒரு நாள் அவன் மனதில் ஒருவித எண்ணம் எழுந்தது. அதாவது, நாம் ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செய்து வாழ வேண்டும். அதற்காக அவன் பலவாறு யோசித்தான். அப்போது அந்த ஊர் மக்கள் அந்த ஊருக்கு வந்திருக்கும் துறவியைப் பற்றி பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டு, அவரைக் காணச் சென்றான்.
அந்த ஜென் துறவி மிகவும் சக்தி வாய்ந்தவர். அவருக்கு கடவுளின் அருள் முழுவதும் கிடைத்ததால், அவர் எது சொன்னாலும் நடக்கும். அத்தகையவரிடம் அவன் சந்தித்து, வரம் ஒன்றை வாங்கிக் கொண்டு சென்றான். அது என்னவென்றால், அவன் எப்போதும் பலமிக்கவனாக, அவன் நினைப்பது எல்லாம் நடக்கக்கூடியதான ஒரு வரம் வேண்டி கேட்டுக் கொண்டான். துறவியும் அவனுக்கு அவன் ஆசைப்படியே வரத்தையும் கொடுத்தார்.
அப்போது அவன் ஒரு நாள் ஒரு பெரிய வியாபாரியின் வீட்டிற்கு சென்றான். அப்போது அந்த வியாபாரியின் செல்வாக்கை கண்டு, நானும் ஒரு பெரிய வியாபாரி ஆக வேண்டும் என்று நினைத்தான். உடனே அவனும் ஒரு பெரிய வியாபாரியாக மாறிவிட்டான்.
மற்றொரு நாள் ஒரு அரசாங்க அதிகாரியைக் கண்டான். அப்போது அந்த அதிகாரியைப் பார்த்ததும், பணக்கார வியாபாரிகள் முதல் அனைவரும் பயப்படுவதைக் கண்டான். ஆகவே அதிகாரியாக வேண்டும் என்று நினைத்தான். அதிகாரியும் ஆனான். பின் அவன் அதிகாரியாக வெளியே வெயிலில் செல்லும் போது சூரியனின் வெப்பத்தை அவனால் தாங்க முடியவில்லை. ஆகவே சூரியன் மிகவும் சக்தி வாய்ந்தது என்று எண்ணி சூரியனாக மாறினான்.
சூரியனாக மாறியப்பின் மேகம் சூரியனை மறைத்ததால், மேகமாக மாற ஆசைப்பட்டான். மேகமாக மாறியதும் காற்று வீசும் போது மேகம் கலைந்தது, எனவே மேகத்தை விட காற்று பலமிக்கது என்று காற்றாக மாறினான். காற்றாக இருக்கும் போது, மலையை காற்றால் அசைக்க முடியவில்லை, ஆகவே மலையே சிறந்தது என்று மலையாக மாறினான்.
மலையாக மாறியப்பின் மலையின் சிறு பகுதி உடைந்து விழுந்தது. எப்படியென்று பார்த்தால், அங்கு ஒரு கல்லுடைக்கும் தொழிலாளி தன் உளியால் மலையின் சிறு பகுதியை உடைத்தான். ஆகவே மலையை விட கல்லுடைக்கும் தொழிலாளியே சிறந்தது என்று நினைத்து, இறுதியில் பழைய தொழிலான கல்லுடைக்கும் தொழிலாளியாகவே மாறிவிட்டான்.
இந்த கதையிலிருந்து, 'செய்யும் தொழிலே தெய்வம்' என்னும் பழமொழிக்கேற்ப, நாம் செய்யும் தொழிலை சந்தோஷமாக சிறந்ததாக நினைத்து செய்து வந்தால், நாம் எப்போதுமே பலசாலி தான் என்பதை நன்கு தெளிவுறுத்துகிறது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விதி என்ன செய்யும் வினை என்ன செய்யும்… உறுதியுடன் நீ இருந்தால்? கண்ணதாசன் வாழ்வில் நடந்த ஒரு உண்மை சம்பவம்!
» தியானத்தை விட சிறந்தது எது
» தானத்தில் சிறந்தது…
» பொறுமையே சிறந்தது
» மவுனத்தை விட சிறந்தது எது?
» தியானத்தை விட சிறந்தது எது
» தானத்தில் சிறந்தது…
» பொறுமையே சிறந்தது
» மவுனத்தை விட சிறந்தது எது?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum