தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழுக்கு வரும் இன்னொரு சோனா

Go down

தமிழுக்கு வரும் இன்னொரு சோனா Empty தமிழுக்கு வரும் இன்னொரு சோனா

Post  ishwarya Thu Mar 07, 2013 12:28 pm


பயோகிராஃபி எழுதறேன், அதனை படமாக எடுக்கிறேன், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம், இசையமைப்பு அனைத்தும் நானே... நானே... என்று ஏற்கனவே ஒரு சோனா தமிழ் சினிமாவின் அடிவயிற்றை கலக்கிக் கொண்டிருக்கிறார். ஆண்களுடன் வாழ முடியாது அவர்கள் இல்லாமலும் வாழ முடியாது என்று எக்குதப்பாக அவ்வப்போது தத்துவங்கள் உதிர்த்து தமிழகத்தையே டீலில் விடுவது இவ‌ரின் பொழுதுபோக்கு.

இருக்கிற சோனாவுக்கே என்ன வழி என்று யோசிக்கிற நிலைமையில் மும்பையிலிருந்து இன்னொரு சோனா இறக்குமதியாகியிருக்கிறார். இவ‌ரின் முழுப் பெயர் சோனா சாப்ரா.

பாடல்களுக்காக ஓடிய படங்களை பட்டியலிட்டால் முதல் ஐந்து இடத்துக்குள் பார்வை ஒன்றே போதுமே படமும் இடம் பிடிக்கும். இந்தப் படத்தை இயக்கிய முரளி கிருஷ்ணா ரொம்ப நாளாக துட்டு என்ற படத்தை எடுத்து வருகிறார். கந்து வட்டி கொடுமையைப் பற்றிய படம் என்று சொல்லப்பட்டாலும் கவாச்சிக்கு வட்டியில்லாத விதிவிலக்கு. இந்த ஏ‌ரியாவை குத்தகைக்கு எடுத்திருப்பவர்தான் இந்த மும்பை சோனா.

தமிழ் தெ‌ரியாது ஆனாலும் சொல்லிக் கொடுப்பதை கப் பென்று பிடித்து சோனா ஆக்ட் கொடுக்கிறதைப் பார்த்தால் ஆனந்தத்தில் கண்ணுல தண்ணி வந்திடும் என்று கண்டபடி உணர்ச்சிவசப்படுகிறார் முரளி கிருஷ்ணா. அவர் பேசுவதைப் பார்த்தால் சோனாவுக்கு ஆதித்யா ஹோட்டலில் நிரந்தர சூட் புக் பண்ண வேண்டியிருக்கும் போலிருக்கிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum