கொண்டைக் கடலை சுண்டல்
Page 1 of 1
கொண்டைக் கடலை சுண்டல்
வெள்ளை கொண்டைக் கடலை : 200 கிராம்
தேங்காய் மூடி : சிறியது ஒன்று
எலுமிச்சம்பழம் : ஒரு மூடி
இஞ்சி : சிறு துண்டு
ப.மிளகாய் : இரண்டு
எண்ணெய் : இரண்டு டீஸ்பூன்
கடுகு, க.வேப்பிலை : சிறிது
பெ.தூள் : ஒரு சிட்டிகை
தயாரிப்பதற்கு ஆறுமணி நேரம் முன்பு கொண்டைக் கடலையை ஊற வைக்க வேண்டும்.தேங்காயைத் திருகி பூ எடுத்து வைக்க வேண்டும்.ப.மிளகாய், இஞ்சி தோல் சீவி, சிறுதுண்டுகளாய் நறுக்கிக் கொள்ள வேண்டும்.
ஊறிய கடலையை நன்கு களைந்து உப்பு சேர்த்து குக்கரிலோ தனிப்பாத்திரத்திலோ நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். நீரை வடிகட்டி எடுத்து வைக்கவும்.
கடாயில், எண்ணெய் காய வைத்து கடுகு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை போட்டு தாளித்து இஞ்சி, ப.மிளகாய் சேர்த்து வதக்கி தேங்காய்ப்பூ போட்டு நீர் வற்றி வேகும்வரை சுருளக் கிண்டவும். பின் அதில் & தண்ணீர் வடித்து எடுத்து வைத்த கொண்டைக் கடலையை போட்டு கிண்டவும்.
இறக்குவதற்கு முன் எலுமிச்சம்பழம் பிழிந்து இறக்கவும்.இஞ்சியின் மணமும் எலுமிச்சம்பழத்தின் புளிப்பும் சுண்டலின் ருசியை பன்மடங்கு கூட்டிவிடும்.
தேங்காயை நன்கு வதக்கி விடுவதால் மீந்து போய் இருந்தாலும் மறுநாள் ஊசிப்போகாது.
டிப்ஸ்
மோர் குழம்பு செய்யும்போது சிறிது ஓமம் சேர்த்து அரைத்தால் குழம்பு 'கமகம’வென்று வாசனையுடன் சுவையாக இருக்கும்.
வெண்டைக்காயின் காம்புகளை வீணாக்கி விடாதீர்கள். தோசைக்கு உளுத்தம்பருப்பை அரைக்கும்போது, உளுத்தம் பருப்பைக் குறைத்துக்¢கொண்டு வெண்டைக்காய் காம்புகளை அதனுடன் சேர்த்து அரையுங்கள். அந்த தோசையானது மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கொண்டைக் கடலை சுண்டல்
» கொண்டைக் கடலை சுண்டல்
» கொண்டைக் கடலை சுண்டல்
» கொண்டைக் கடலை குழம்பு
» கொண்டைக் கடலை குழம்பு
» கொண்டைக் கடலை சுண்டல்
» கொண்டைக் கடலை சுண்டல்
» கொண்டைக் கடலை குழம்பு
» கொண்டைக் கடலை குழம்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum