குளிர்க்கேற்ற வெஜிடபிள் சமோசா
Page 1 of 1
குளிர்க்கேற்ற வெஜிடபிள் சமோசா
நான்கு பேருக்கு
மைதா மாவு : 300 கிராம்
பட்டாணி : சிறியதாக நறுக்கியது எல்லாம் கலந்து ஒரு பெரிய கப்
காலிஃப்ளவர், கேரட், பீன்ஸ், பெரிய வெங்காயம் : ஒன்று
தக்க்£ளி : 2
உ.கிழங்கு : 1
தனி மிளகாய்த்தூள் : 2 டீஸ்பூன்
உப்பு : தேவையான அளவு
எண்ணெய் : பொரிக்கத் தேவையான அளவு
காய்கறிகளை உப்பு கலந்த நீரில் அரை வேக்காடாக அவித்து நீரை வடித்து எடுத்துக் கொள்ளவும்.உருளைக் கிழங்கை அவித்து தோலுரித்து மசித்து வைக்கவும்.
வெங்காயம், தக்காளியை மெல்லிசாய் நறுக்கிக் கொள்ளவும்.
மைதாவை லேசாக உப்பு சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி வெங்காயம் தக்காளி போட்டு வதக்கி நன்கு வதங்கிய பின் காய்களையும் போட்டு மி.தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
நீர் சேர்க்க வேண்டாம். நன்கு வெந்ததும் கீழே இறக்கி வைக்கவும். சூடு ஆறியபின் மசித்து வைத்த உ.கிழங்கை சேர்த்து பிசையவும். கெட்டியாக, உருட்டும் பக்குவத்தில் இருக்கட்டும்.
பிசைந்த மைதா மாவை கோலிக் குண்டளவு உருண்டைகளாக எடுத்து மெல்லிய சப்பத்திகளாக இட்டுக்கொள்ளவும். அதில் நடுவில் வெஜிடபிள் கலவையை ஒரு ஸ்புன் நடுவில் வைத்து பாதியாக மடித்து ஓரத்தை மடித்து விடவும்.
இதுபோல எல்லாவற்றையும் செய்து எடுத்து வைக்கவும்.அடுப்பில் எண்ணெய் காய வைத்து செய்து வைத்துள்ள சமோசாவை ஐந்து அல்லது 6 வீதமாகப் போட்டுப் பொரித்தெடுக்கவும். சாஸுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் இது.
எந்த விருந்திலும் எளிதில் இடம் பெற்று விருந்தினரின் மனதிலும் இடம் பெற்றுவிடக்கூடிய சிறப்பு டிபன் வகைகளில் ஒன்று இந்த வெஜிடபிள் சமோசா என்ஜாய்!
டிப்ஸ்
டீ, தயாரிக்கும்போது ஏலத் தூள் அல்லது இஞ்சி அல்லது புதினா இலை, அல்லது கமலா ஆரஞ்சுத் தோல் ஏதாவது ஒன்றைப் போட்டுத் தயாரித்தால் வாசனையுடன் டீ சுவையாக இருக்கும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum