சென்னை பாக்ஸ் ஆஃபிஸ் - மாற்றானை முந்திய பீட்சா
Page 1 of 1
சென்னை பாக்ஸ் ஆஃபிஸ் - மாற்றானை முந்திய பீட்சா
5. யாருக்கு தெரியும்
ஹாலிவுட் படத்தை அட்டை காப்பியான இந்தப் படம் சென்ற வாரம் வெளியானது. பி கிரேட் ஹாலிவுட் படம் என்பதால் இதன் மூலம் யாருக்கும் தெரியாமல் படத்தைப் பாராட்டியிருக்கிறார்கள். ஆனால் வசூல்? முதல் மூன்று தினங்களில் 78 ஆயிரங்கள் மட்டுமே.
4. சுந்தரபாண்டியன்
வெளியாகி எட்டு வாரங்களாகிறது. இன்னும் டாப் 5ல் இதற்கு இடம் இருக்கிறது. இதுவரை சென்னையில் ஆறரை கோடிகள் வசூலித்துள்ள இப்படம் சென்ற வார இறுதியில் 85 ஆயிரங்களையும், வார நாட்களில் 1.7 லட்சங்களையும் வசூலித்துள்ளது.
3. இங்கிலீஷ் விங்கிலீஷ்
ஐந்து வாரங்களில் 77.2 லட்சங்களை வசூலித்த இப்படம் சென்ற வார இறுதியில் வசூலித்திருப்பது 1.6 லட்சங்கள். வார நாட்கள் வசூல் 1.7 லட்சங்கள்.
2. மாற்றான்
நான்காவது வாரத்திலேயே இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறது. தள்ளியது பீட்சா. அதிகம் அறிமுகமில்லாத நடிகர்கள் நடித்தது. நான்கு வாரங்களில் மாற்றான் 7.2 கோடிகளை வசூலித்துள்ளது. சென்ற வார இறுதியில் 28.4 லட்சங்கள். வார நாட்களில் 36.8 லட்சங்கள்.
1. பீட்சா
இதுதாண்டா படம். தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இருந்த படம் மூன்றாவது வாரத்தில் மாற்றானையே திருப்பி அடித்திருக்கிறது. இதுவரை மூன்றரை கோடிகள் வசூலித்திருக்கும் இப்படம் சென்ற வார இறுதியில் 60 லட்சங்களை தனதாக்கியுள்ளது. வார நாட்களில் வசூல் 68.3 லட்சங்கள்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சென்னை பாக்ஸ் ஆஃபிஸ் - மிரட்டலை முந்திய நான் ஈ
» சென்னை பாக்ஸ் ஆபிஸ் – அரவானை முந்திய கழுகு
» சென்னை பாக்ஸ் ஆஃபிஸ்
» சென்னை பாக்ஸ் ஆஃபிஸ்
» சென்னை பாக்ஸ் ஆஃபிஸ்
» சென்னை பாக்ஸ் ஆபிஸ் – அரவானை முந்திய கழுகு
» சென்னை பாக்ஸ் ஆஃபிஸ்
» சென்னை பாக்ஸ் ஆஃபிஸ்
» சென்னை பாக்ஸ் ஆஃபிஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum