ஹராபரா கபாப்
Page 1 of 1
ஹராபரா கபாப்
என்னென்ன தேவை?
பாலக் கீரை - சிறிய கட்டு 1,
வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - 1 கப்,
இஞ்சி-பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் விழுது - 1 டீஸ்பூன்,
வெங்காயம் - 1,
பிரெட் தூள் - அரை கப்,
கரம் மசாலா - கால் டீஸ்பூன்,
கரகரப்பாகப் பொடித்த முந்திரி - 10,
மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்,
பனீர் - 50 கிராம்,
சோள மாவு - அரை கப்,
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - பொரிப்பதற்கு,
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்,
பிரெட் ஸ்லைஸ் - 1.
எப்படிச் செய்வது?
பாலக் கீரையை சுத்தம் செய்து, ஆவியில் வேக வைத்து, மசிக்கவும். அத்துடன் மசித்த உருளைக்கிழங்கு, இஞ்சி-பூண்டு விழுது, உப்பு, முந்திரி, மிளகாய் தூள், பச்சை மிளகாய் விழுது, கரம் மசாலா, எலுமிச்சை சாறு, துருவிய பனீர், பிரெட் ஸ்லைஸ், பொடியாக நறுக்கிய வெங்காயம் எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்துப் பிசைந்து, நீள வாக்கில் உருட்டிக் கொள்ளவும். சோள மாவை சிறிது தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும். உருட்டி வைத்துள்ள கபாப்களை, சோள மாவில் முக்கி, ரொட்டி தூளில் பிரட்டி, சூடான எண்ணெயில் பொரிக்கவும். தக்காளி சாஸுடன் சூடாகப் பரிமாறவும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum