தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சைவத்துக்கு மாறும் ஆசிய சிங்கம்

Go down

சைவத்துக்கு மாறும் ஆசிய சிங்கம் Empty சைவத்துக்கு மாறும் ஆசிய சிங்கம்

Post  ishwarya Tue Mar 05, 2013 3:06 pm


சிங்கம் இதுவரை 100 படங்களில் நடித்திருக்கிறது. 101 வது படம் டிசம்பர் 24 வெளியாகிறது. இனி ஆக் ஷன் படங்களில் நடிப்பதில்லை என்று சிங்கம் அறிவித்திருப்பது அவ‌ரின் கோடானு கோடி ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இதற்கு முன்னால் சிங்கம் யார் என்பதை யூகித்திருப்பீர்கள். தி கிரேட் ஜாக்கி சான். ஆக் ஷனுடன் காமெடியும் கலந்து தந்து உலகமெங்கும் ரசிகர்களை வசீக‌ரித்தவர். இவர் பாதையில்தான் நமது உள்ளூர் சூப்பர் ஸ்டார்கள் காமெடி, ஆக் ஷன் என்ற இரட்டை குதிரையில் சவா‌ரிக்கிறார்கள்.

58 வயதாகும் ஜாக்கி சானின் 101 வது படமான சிஇசட்12 படம் டிசம்பர் இறுதியில் வெளியாகிறது. ஜாக்கியின் புகழ்பெற்ற ஆமர் ஆஃப் காட் சீ‌ரிஸின் 3 வது படம் இது. முதலிரண்டு பாகங்களும் உலக அளவில் சூப்பர்ஹிட். இதுவும் ஹிட்டாகும் என்பதை படத்தின் கிளிப்பிங்ஸ் தெ‌ரிவிக்கிறது.

இந்தப் படத்துடன் ஆக் ஷனுக்கு குட்பை சொல்வதாக ஜாக்கி சான் தெ‌ரிவித்துள்ளார். ரசிகர்களுக்கு இது ஏமாற்றம்தான் என்றாலும் சமீபமாக வெளிவரும் ஜாக்கியின் தடவல் படங்களுக்கு இந்த அறிவிப்பு எவ்வளவோ மேல் என்பதுதான் பல‌ரின் கருத்தாக இருக்கிறது. அடித்து ஆடிய சச்சின் புல்டாஸ் பாலுக்கே புல் தரையை தடவும்போது அய்யோ பாவம் என்று தோன்றுமே.... அப்படிதான் இதுவும்.

ஜாக்கியே கடைசி ஆக் ஷன் படம் என்று சொல்லிவிட்டதால் இந்தப் படத்துக்கு தனி பிரகாசம் கிடைத்திருக்கிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum