சென்னை பாக்ஸ் ஆபிஸ்
Page 1 of 1
சென்னை பாக்ஸ் ஆபிஸ்
4. போடா போடி
நல்ல விமர்சனங்களைப் பெற்றும் போடா போடியின் வசூல் கிராஃப் ஏறவேயில்லை. சென்ற வார இறுதியில் 1.2 லட்சங்களையும், வார நாட்களில் 1.5 லட்சங்களையும் மட்டுமே வசூலித்துள்ளது. இதன் சென்னை வசூல் இதுவரை 2.24 கோடி.
3. நீர்ப்பறவை
பார்க்கத் தகுந்த படம் என்ற போதிலும் சீனு ராமசாமி போடும் சீன்களால் கடுப்புற்ற பதிவர்கள் உலகம் பறவையை சூப் வைத்து குடிக்கும் வெறியில் இருக்கிறது. வார இறுதியில் 30.7 லட்சங்களையும், வார நாட்களில் 31.7 லட்சங்களையும் இப்படம் வசூலித்துள்ளது. இதுவரையான சென்னை வசூல் 1.05 கோடி. வெள்ளிக்கிழமை கும்கியும், நீதானே என் பொன்வசந்தமும் வெளியாவதால் பறவை தொடர்ந்து பறக்குமா என்பது சந்தேகம்தான்.
2. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்
நாலு நெடுந்தொடர் எபிசோட் எடுக்கிற பணத்தில் எடுக்கப்பட்ட ஒரு நல்ல படம் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம். பட்ஜெட்தான் லோ. பல் சுளுக்குற அளவுக்கு படம் நெடுக காமெடி. தியேட்டரில் ரசித்து கைத்தட்டி விசில் அடிக்கிறார்கள். விளைவு... முதல் வாரத்தைவிட இரண்டாவது வார கலெக் ஷன் டாப். வார நாட்களில் 33.16 லட்சங்களையும், வார இறுதியில் 44.5 லட்சங்களையும் வசூலித்து தனது சென்னை வசூலை 91.3 லட்சங்களாக உயர்த்தியிருக்கிறது. வரும்நாட்களில் வசூல் குறையாமிலிருக்கும் என்று நம்பலாம்.
1. துப்பாக்கி
அதே முதல் இடத்தில் துப்பாக்கி. ஆனால் கலெக்ஷன் கிடுகிடுவென்று இணுங்கியிருப்பது தெரிகிறது. அதனால் என்ன. எடுக்க வேண்டியதை கொஞ்சம் அதிகமாகவே இப்படம் வசூலித்திருக்கிறது. சென்ற வார இறுதி வசூல் 90 லட்சங்கள். வார நாட்களில் 71 லட்சங்கள். இதுவரை சென்னையில் வசூல் 12.9 கோடிகள். விஜய் படங்களில் இதுதான் டாப் வசூல். ஆனால் இதைத்தாண்டி சென்னையில் வசூலித்த இரு படங்கள் உண்டு. ஒன்று எந்திரன். சின்ன குழந்தைகூட சொல்லிவிடும். இன்னொன்று அறிமுக இயக்குனரின் அடிதடி இல்லாத படம். யார் என்று யூகியுங்கள் பார்க்கலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சென்னை பாக்ஸ் ஆபிஸ்
» சென்னை பாக்ஸ் ஆபிஸ்
» சென்னை பாக்ஸ் ஆபிஸ்
» சென்னை பாக்ஸ் ஆபிஸ்
» சென்னை பாக்ஸ் ஆபிஸ்
» சென்னை பாக்ஸ் ஆபிஸ்
» சென்னை பாக்ஸ் ஆபிஸ்
» சென்னை பாக்ஸ் ஆபிஸ்
» சென்னை பாக்ஸ் ஆபிஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum