தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

காஸ்ட்லி இயக்குனர்களுக்கு கடிவாளம்

Go down

காஸ்ட்லி இயக்குனர்களுக்கு கடிவாளம் Empty காஸ்ட்லி இயக்குனர்களுக்கு கடிவாளம்

Post  ishwarya Tue Mar 05, 2013 1:10 pm


பத்து கோடியில முடிச்சிடலாம் பாஸ் என்று படத்தை தொடங்கும் இயக்குனர்கள் பத்தே நாளில் மொத்தத்தையும் காலி செய்து தயாரிப்பாளர்களின் பாக்கெட்டை கொள்ளை அடிப்பதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆறு கோடி பட்ஜெட்டில் தொடங்கும் படங்கள் இருபது கோடியை சர்வசாதாரணமாக விழுங்கிவிடுகின்றன. இந்த காஸ்ட்லி இயக்குனர்களுக்கு ஆந்திரா திரையுலகம் கடிவாளம் போட்டிருக்கிறது.

ராகவா லாரன்ஸ் ரிபெல் படத்தை 22.5 கோடியில் முடிப்பதாக கூறியிருந்தார். அதுதான் ஒப்பந்தம். ஆனால் பட்ஜெட் நாற்பது கோடியை தொட்டதாக சொல்கிறார்கள். லாரன்ஸின் முந்தையப் படங்கள் ஹிட் என்பதால் அவர் கேட்ட போதெல்லாம் பணம் தந்த தயாரிப்பாளர்கள், படம் ப்ளாப் என்றதும் புலம்ப ஆரம்பித்தனர். விஷயம் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்குப் போனது. கூட்டிக் கழித்ததில் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் 5.5 கோடிகள் (பரவாயில்லை, மீதியை படம் வசூலித்திருக்கிறது).

இந்த தொகையில் சரிபாதியை அதாவது 2.25 கோடியை லாரன்ஸ் தயாரிப்பாளர்களுக்கு 30 தினங்களில் தர வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார்கள். தவறினால் முழுத் தொகையான 5.5 கோடியையும் அவர் தர வேண்டும்.

இந்நிலையில் படத்தின் இந்தி ரைட்ஸை என்னிடம் கேட்காமல் எனக்குரிய ஷேரை தராமல் விற்கப் பார்க்கிறார்கள் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார் லாரன்ஸ்.

லாரன்சுக்கு விதிக்கப்பட்டிருக்கும் இந்த அபராதம் காஸ்ட்லி இயக்குனர்களுக்கு ஓர் எச்சரிக்கை.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum