தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வைகுண்ட ஏகாதசி -தமிழ் திருவிழா - நிறைவு பகுதி

Go down

 வைகுண்ட ஏகாதசி -தமிழ் திருவிழா - நிறைவு பகுதி  Empty வைகுண்ட ஏகாதசி -தமிழ் திருவிழா - நிறைவு பகுதி

Post  amma Tue Jan 15, 2013 5:22 pm

தினம் தினம் திரு நாள் தான் அரங்கனுக்கு, ஆனாலும் வைகுண்ட ஏகாதசி திருநாள் தான் பெரிய திருநாள் காரணம் பெரிய திருமாலுக்கு
செய்யப்படும் விழாக்களில் இந்த திருநாள் தான் 21 நாட்கள் நடைபெறும் பெரிய திருநாள். மேலும் பித்தன் சொன்னது போல் இது தமிழ் திருவிழா
அதனால் தான் இது பெரிய திருநாள் என வழங்கப்படுகிறது.
இந்த திருநாள் மொத்தம் 21 நாட்கள், அவையாவன,
இராப்பத்து
பகல் பத்து
இயற்பா
என 21 நாட்கள்.
ஒரு முறை திருமங்கை ஆழ்வார், அந்த அரங்கனிடம் வினவும் போது நம் தலைவர் நம்மாழ்வார் பிரபந்தங்களை அரங்கன் கேட்க வேண்டும் என
அன்பு கட்டளை இட்ட போது அந்த பெரிய பிரட்டி மனம் கள்வன், ஆழ்வார்கள் மனம் நீங்கா கஸ்தூரி அழகிய பெருமாள் தலை அசைத்து ஒப்புக்கொண்டாராம்.
அதன் பின் இற்றைக்கு சில நூற்றாண்டுகளாய் அனைத்து ஆழ்வார்களின் தமிழ் பிரபந்தங்களை முழுவதும் கேட்கும் வண்ணம்,
இந்த 21 நாட்களும் அனைத்து 4000 பிரபந்தகளும் அவன் முன் பாடப்படும். அரங்கனே தமிழை அன்றோ விரும்பி கேட்டு இருக்கிறான்.
இதை விட தமிழுக்கு புகழ் வேறு என்ன வேண்டும்.
ஸ்ரீ ரங்கத்தில் இந்த பாடல்களை அவன் முன் பாடுதலுக்கு என அரையர் சாமிகள் என்போர் உண்டு .
அரைதல் எனில் செப்புதல், ஓதுதல் என தமிழில் பொருள் படும்.
ஆம் அவர்கள், பிரபந்தங்களை ராகத்துடன் பாடும் போது இசைத்தமிழாகவும்,
அவன் அழகிய குணங்களை பாடும் போது அபிநயம் பிடித்து நடித்து நடித்து கூறும் போது நாடகத்தமிழும்,
பாசுரங்களை கூறும் போது இயல் தமிழும், என அந்த வைகுண்ட வாசனுக்கு விரும்பிய தமிழில்
திரு நாள் நடத்தப்படுகிறது. மற்ற எத்தனையோ உற்சவங்கள் பல உண்டு எனும் போதும், அரங்கனே விரும்பி கேட்டு
மகிழும் இந்த திருநாள் தான் பெரிய திருநாள், இதை தமிழ் திருவிழா என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது. இதை விட தமிழ் புகழ் உயர்த்த அரங்கனை விட பெரியோர் யாரும் உண்டோ இந்த உலகில்?

மகாபிரபு கேள்வியின் பதில்:
முதலில் இதனை சொர்க்க வாசல் என சொல்லுதல் பொருத்தமற்றது என வைஷ்ணவ பெரியோர்களிடம் விசாரித்த போது சொன்ன்னார்கள்.
காரணம் வேதங்களின் படி சொர்க்கம் என்பது 3 வது லோகத்தில் இருப்பதாகவும் ,
வைகுண்டம் என்பது சத்ய லோகத்திற்கு மேல் விரஜா நதிக்கு மேல் உள்ளது எனவும் சொல்லப்படுகிறது. அங்குதான் அல்லல் அறுக்கும் அரங்கன் இருக்கிறான். ஆகவே அதனை வைகுண்ட வாசல் என்றேதான் கூறவேண்டுமாம்.அங்கேதான் உள்ளே சென்று விடமாட்டோமா என அனைவரும் ஏங்குகிறோம்.
ஸ்ரீரங்கத்தில்,
7 பிராகரங்களும் ஏழு லோகங்களை குறியீடாக சொல்வது போல் உள்ளது.
பரம சுகம் அளிக்கும் வைகுண்ட வாசல் அருகேதான் சந்திர புஷ்கரணி உள்ளது அது விரஜா நதியாக உள்ளது.
பின்னர் அந்த பாற்கடல் வாசன் காண வைகுண்ட வாசல் நோக்கி காண்கிறோம்.
அந்த வைகுண்ட வாசனை, அடியார்தம் நேசனை காணத்தான் அங்கே இருக்கிறோம்.
ஆதலால் தான் வைகுண்ட வாசல்.

பித்தன் சுவைத்த சில செய்திகள்:
வைகுண்டம் என்றாலே உயர்வு தாழ்வு இல்லை, அங்கே எந்த பேதமும் இல்லை.
மேலும் சாதி பேதமோ,ஆண் பெண் பேதமோ ஒன்றும் இல்லை.
மேலும் ஸ்ரீ ரங்கத்து அரங்கனுக்கு, யாரும் உயர்வோ தாழ்வோ இல்லை. ஆம்
ஒரு சுவையான செய்தி,
1323 முதல் 1371 வரை பல்வேறு படையெடுப்பு காரணமாக ஸ்ரீ ரங்கத்து நம்பெருமாள் திரு உருவச்சிலையை பாதுகாக்க
யாருக்கும் தெரியாமல் ஒரு குகையில் வைத்திருந்து 48 ஆண்டுகள் மறைத்து வைத்து இருந்தனர். பின் 1371 அதே சிலையை ஸ்ரீ ரங்கம் கொண்டு வந்த போது
இந்த சிலை உண்மையில் நமது அரங்கன் சிலையே என கூற யாருமில்லை. பின்னர் அதே ஆலயத்தில் சலவைத்தொழில் செய்யும் 95 வயது சலவை தொழிலாளி, பல ஆண்டுகள் அரங்கன் திரு மஞ்சனம் முடிந்து தரும் அரங்கனின் ஆடை சலவை செய்யும் அவரை கேட்ட போது, தனக்கு 10 வருடமாக பார்வை இல்லை என்று சொல்லி உள்ளார். மேலும் தனக்கு ஈர ஆடை தீர்த்தம் கொடுத்தால் தன்னால் கண்டறிய முடியும் எனவும் , காரணம் 50 வருடம் நிதமும் சுவைத்ததால் தன் நாவில் அரங்கன் மேல் பட்ட திருமஞ்சன தீர்த்த சுவை நாவில் உள்ளதால் தன்னால் கூற இயலும் என்று சொல்ல, திருமஞ்சனம் செய்து வழங்கியவுடன் இது "நம் பெருமாள்" என சொல்ல அந்த சலவை தொழிலாளி இட்ட பெயரே அரங்கனுக்கு பெயரானது.
மேலும் சிறந்த செருப்பு கூட இறைவனுக்கு தரப்படுகிறது.
ஆம் அரங்கனுக்கு ராமானுஜனும், சலவை தொழிலாளி , செருப்பு தைப்பவர், வேதம் கூறுவோர், ஆழ்வார்கள் அனைவரும் அவன் முன் சமமே......

"கரை புரண்டோடிடும் காவிரி ஆறே
ஆற்றிடை கிடப்போதோ ஐந்தலை அரவே
அரவம் சுமப்பதோ அஞ்சன மலையே
அஞ்சன மலை தொரும் அரவிந்த மலரே
அரவிந்த மலர்தோறும் அதிசயம் உளதே !"

- அஷ்ட பிரபந்தம் -பிள்ளை பெருமாள் சாமிகள்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum