படத்தை தடை செய்ய கிறிஸ்தவ அமைப்புகள் போராட்டம்
Page 1 of 1
படத்தை தடை செய்ய கிறிஸ்தவ அமைப்புகள் போராட்டம்
கேரளாவில் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவ பாகுபாடுகள் இல்லாமல் சகட்டுமேனிக்கு அனைவரையும் வறுத்தெடுப்பதுண்டு. கம்யூனிஸ்ட், காங்கிரஸ் என்று விளித்து அவர்களின் கொடிகளை காண்பித்தே படம் எடுப்பார்கள். கம்யூனிஸ்ட், காங்கிரஸ் மந்திரிகளை, எம்.எல்.ஏ.க்களை நாயகன் தூக்கிப் போட்டு மிதிக்கும் காட்சிகளும் அங்கு தாராளம்.
கிறிஸ்தவ மதத்தை பல படங்களில் புரட்டி எடுத்திருக்கிறார்கள். சாராயத்துக்கு அலையும் பாதிரியாரை மோகன்லாலின் நாட்டு ராஜாவு படத்தில் காட்டியிருப்பார்கள். அதுபோல் புகைக்கும், ரவுடியிசம் செய்யும் என விதவிதமான பாதிரியார்களை மலையாள சினிமா உருவாக்கியிருக்கிறது.
அப்போதெல்லாம் சின்ன முணுமுணுப்புகூட கேட்டதில்லை. ஆனால் இன்று ரோமன்ஸ் என்ற படத்தை தடை செய்ய வேண்டும் என ஒருசில கிறிஸ்தவ அமைப்புகள் கொட்டாவி விட ஆரம்பித்துள்ளன.
இரண்டு கிரிமினல்கள் போலீஸிடமிருந்து தப்பி வந்து ஒரு கிராமத்தில் பாதிரியார்கள் என்று சொல்லி செட்டிலாகிறார்கள். சந்தர்ப்ப சூழ்நிலை அவர்களுக்கு சாதகமாக அமைய, அவசரத்துக்குப் போட்ட பாதிரியார் அங்கியை கழற்றாமல் அப்படியே மெயின்டெயின் செய்வதுதான் படத்தின் கதை. போபன் சாமுவேல் இயக்க குஞ்சாகா போபனும், பிஜு மேனனும் நடித்துள்ளனர்.
படம் வெளியாகி ஒருவாரம் தாண்டிய நிலையில்தான் இந்த முணுமுணுப்புகள். இந்த சலசலப்புக்கெல்லாம் பனங்காட்டு நரியான மலையாள சினிமா அஞ்சப் போவதில்லை என்பதுதான் உண்மை.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ரேணிகுண்டா படத்தை ரிலீஸ் செய்ய இடைக்கால தடை
» பிற மொழிகளில் மெரினா படத்தை டப்பிங் செய்ய தடை: ஐகோர்ட்டு உத்தரவு
» கிறிஸ்தவர்களின் மனதை பாதிக்கும் கடல் படத்தை தடை செய்ய வேண்டும்
» கிறிஸ்தவ கோவிலில் படமான நயன்தாரா-ஆர்யா திருமண காட்சி
» கிறிஸ்தவ மதம்
» பிற மொழிகளில் மெரினா படத்தை டப்பிங் செய்ய தடை: ஐகோர்ட்டு உத்தரவு
» கிறிஸ்தவர்களின் மனதை பாதிக்கும் கடல் படத்தை தடை செய்ய வேண்டும்
» கிறிஸ்தவ கோவிலில் படமான நயன்தாரா-ஆர்யா திருமண காட்சி
» கிறிஸ்தவ மதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum