தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கடவுளை பகவான் என்று ஏன் சொல்கிறோம்?

Go down

கடவுளை பகவான் என்று ஏன் சொல்கிறோம்? Empty கடவுளை பகவான் என்று ஏன் சொல்கிறோம்?

Post  amma Tue Jan 15, 2013 5:11 pm

‘பகம்’ என்றால் ஆறு குணங்கள். அதி உன்னதமான ஆறு குணங்களை உடையவன், பகவான். அந்த ஆறு குணங்கள்: எல்லையற்ற ஞானம், எல்லையற்ற பலம், எல்லையற்ற ஐஸ்வரியம், எல்லையற்ற வீரியம், எல்லையற்ற ஆதாரசக்தி, எல்லையற்ற தேஜஸ்.

ஈஸ்வரன் இமாசலத்தின்மீது அமர்ந்திருப்பதாகக் கூறப்படுகின்றது. இன்று மனிதனால் அதே இமாசலத்தின் மீது பறக்க முடிகிறது. ஆனால் அவனால் அங்கு ஈஸ்வரனைப் பார்க்க முடியவில்லையே?

ஒருவன் தன் காதலியிடம், ‘‘எப்போதும் என் இதயத்தில் குடியிருக்கிறாய்” என்கிறான். அவள் உடனே அவனது இதயத்தைப் பிளந்து பார்த்தால் என்ன ஆகும்?

ஈஸ்வரன் இமாசலத்தின் மீது அமர்ந்திருப்பதாகக் கூறுவது ஓர் உருவகமே. தூய்மையான எண்ணங்கள், தூய்மையான செயல்கள் இவற்றிற்கு வெண்ணிறத்தை அடையாளமாகக் குறிப்பிடுவதுண்டு. அதேபோல் மலைமீது உருவாகும் பனி எந்தவித அசுத்தமும் படியாதது. அத்தகைய வெண்ணிறப் பனிமலை இறைவனின் உறைவிடம் என்பது ஓர் உருவகம் மட்டுமே.
‘இமா’ என்பது தூய்மையான வெண்ணிறத்தைக் குறிக்கிறது. ‘அசலம்’ என்பது அசையாத பொருள். சபலங்களால் மனம் அசைவது மானுடம். அந்த அசைவு ஏதும் இன்றி இருப்பது தெய்வீகம். அதை ‘நிச்சல’ என்றும் கூறுவர். ஆக இமாசலம் என்ற சொல் தூய்மைக்கும் அமைதிக்கும் அசைவற்ற உறுதிக்கும் அடையாளமான சொல். அந்தப் பண்புகள் அமையும்போது இறைவன் அங்கு குடியிருக்கிறான். நம்முடைய இதயத்தில் இந்தப் பண்புகள் அமைந்துவிட்டால் ஈஸ்வரன் அங்கு வந்து தங்குவான். நாமும் அவன் இருப்பதை உணர முடியும்.

பிரம்மச்சரியத்திற்கும் கடவுள் தேடலுக்கும் என்ன சம்பந்தம்? புராணங்களில் வரும் கடவுள் கல்யாணங்கள் எதை வலியுறுத்துகின்றன?

பிரம்மச்சரியம் என்பது ஒருவித சக்தி. விளையாட்டு வீரர்களுக்குக்கூட இது அவசியம் என்று சொல்லப்படுகின்றது. பரீட்சைக்குப் போகும் மாணவனுக்கு இது நல்லது என்பது உண்மை. இறை வழிபாட்டிலும் இதற்கு நல்ல பங்கு உண்டு.

கடவுளர் திருமணங்கள் இல்வாழ்க்கையின் லட்சணங்களைச் சொல்பவை. நெறிப்பட்ட காமம் மிக முக்கியம். பிரம்மச்சரியத்தின் மேன்மையை உணர்ந்து பிறகு திருமணம் செய்து, நெறிப்பட்ட காமம் அனுபவிக்கும்படி புராணங்கள் சொல்கின்றன.

கோயிலில் சுவாமியை பிரதட்சிணம் வருவதால் என்ன நன்மை? அப்பிரதட்சிணமாக வரக்கூடாதா?

கோயிலில் சுவாமியை பிரதட்சிணம் வருவதால் மனம் தூய்மையடையும். அகங்காரம் குறைந்து பக்தி வளரும். பொதுவாக, போற்றுவதற்குரிய எந்தப் பொருளாக இருந்தாலும் அதை பிரதட்சிணம் செய்வது மரியாதைக்கு அடையாளம்.உயிர் நீத்தவர்களை வழிபடும் போதுதான் அப்பிரதட்சிணம் செய்வது சம்பிரதாயம். கோயில்களில் நிச்சயமாக அப்பிரதட்சிணமாக வரக்கூடாது.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» குலதெய்வம் எது என்று தெரியாதவர்கள் எந்தக் கடவுளை வணங்கலாம்?
» ஆன்மீகம் என்றால் ஆனந்தம் என்று சொல்லுவதும் சரிதான். ஆனந்தம் என்று சொல்வதை விட அமைதி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக அல்லது அமைதியினால் உருவாகும் ஆனந்தம் என்று சொல்வது மிகப் பொருத்தமாக இருக்கும். துன்பம் இருக்கும் வரை அமைதியினால் உருவாகும் ஆனந்தம் எப்பட
» உரக்கச் சொல்கிறோம்!
» கேளுங்கள் சொல்கிறோம்!
» என் சகோதரியின் கணவர், மணமாகி இருபது வருடம் கழித்து வேறொரு பெண்ணோடு பழகுகிறார். என் சகோதரி தன்னை விட்டுவிட்டு கணவர் சென்று விடுவாரோ என்று அஞ்சுகிறாள். என்ன செய்வது என்று கூறுங்கள்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum