நெருங்கிய உறவில் திருமணம் - குழந்தைகளுக்கு ஆபத்து
Page 1 of 1

பரிணாமக் கோட்பாட்டின் தந்தை சார்லஸ் டார்வின் தன் 30 வயதில் நெருங்கிய உறவினரான 31 வயதுடைய எம்மா வெட்ஜ்வுட் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு பிறந்த குழந்தைகளில் மூன்று பேர் 10 வயதில் இறந்து போயினர். மேலும் மூன்று பேரின் நீண்டகால திருமண வாழ்வில் குழந்தைப் பேறே கிட்டவில்லை.
இப்பிரச்னைகளுக்கு அடிப்படையான காரணமாக, தனது திருமணம் இருக்கலாமோ என்று அவர் பயந்தார். சார்லஸ் இரண்டு வேறுவிதமான தாவரங்களை ஒட்டு முறையில் சேர்த்து புதிய தாவரங்களை உருவாக்கிப் பார்த்தார். வழக்கமான தாவரங்களை விட இவை மிகவும் ஆரோக்கியமாக இருந்ததையும், சந்ததி எண்ணிக்கையில் அதிகரித்ததையும் கண்டறிந்தார். அதன் முடிவுகளை மனித குலத்துக்கும் பொருத்திப் பார்த்துதான் அந்த முடிவுக்கு அவர் வந்தார்.
அவரது பயம் சரியானது தான் என்று சமீபத்தில் நடந்த ஓர் ஆய்வு கூறுகிறது. ஓகியோ மாநில பல்கலைக்கழகத்தின் பரிணாம துறையின் ஓய்வு பெற்ற பேராசிரியர் டிம் பெர்ரா மற்றும் அவரது உடன் பணியாற்றும் இரண்டு பேர் சார்லஸ் டார்வினின் குடும்ப பாரம்பரியம் குறித்த ஆய்வில் ஈடுபட்டனர். சார்லசின் தந்தை மற்றும் தாய்வழி மரபுகளின் வேர்களை, கி.பி., 16ம் நூற்றாண்டு வரை தேடி கண்டுபிடித்து சேகரித்தனர். அந்த உறவு முறைகளை பற்றிய இவர்களின் ஆராய்ச்சியில் சார்லசின் குழந்தைகள், தங்கள் முன்னோரிடமிருந்து மரபணுக்களை பெறுவதற்கு 6 சதவீதம் வாய்ப்பு இருந்துள்ளது தெரியவந்தது.
'சார்லஸ் தம்பதியரின் பெற்றோரிடம் நோய் விளைவிக்கக்கூடிய மரபணுக்கள் ஒரே குரோமோசோமில் பதிவாகியிருந்தால், அவை இரண்டும் ஒரே நேரத்தில் அவர்களின் சந்ததியரிடம் வந்து சேர வாய்ப்பு அதிகம் உள்ளது. அவை தான் நோய்களை உருவாக்கும்' என்கிறார் பெர்ரா.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்யாதீர்கள்
» பிளாஸ்திக்கிலுள்ள இரசாயனங்களால் குழந்தைகளுக்கு ஆபத்து
» கர்ப்பிணிகளே வலதுபுறம் படுக்காதீங்க! குழந்தைகளுக்கு ஆபத்து!!
» ஐரோப்பியருடன் நெருங்கிய தொடர்பு
» என் நெருங்கிய தோழி நயன்தாரா; இண்டர்நெட்டில் எனக்கு 2 லட்சம் ரசிகர்கள் – ஜெனிலியா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum