தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விஜயலட்சுமியின் காட்சிகள் கட்

Go down

விஜயலட்சுமியின் காட்சிகள் கட்                          Empty விஜயலட்சுமியின் காட்சிகள் கட்

Post  ishwarya Mon Mar 04, 2013 1:26 pm

ஒருவழியாக தடைகளை கடந்து வனயுத்தம் வெளியாகிறது. இந்த சந்தோஷமான தருணத்தில் சங்கடத்தில் இருக்கிறார் விஜயலட்சுமி.

சந்தனக்கடத்தல் வீரப்பனை மையமாக வைத்து ஏ.எம்.ஆர்.ரமேஷ் தயா‌ரித்து இயக்கிய படம் வனயுத்தம். இதில் வீரப்பனாக கிஷோரும், அதிரடிப்படை தலைவர் விஜயகுமாராக அர்ஜுனும், வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியாக விஜயலட்சுமியும் நடித்திருந்தனர். வழக்கு வாய்தா என்று வழக்கு ஒருபக்கம் போய்க் கொண்டிருக்க, ஒன்றரை கோடி ரூபாய் தந்தால் படத்துக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக பேரம் பேசினார் முத்துலட்சுமி. ஏற்கனவே தயா‌ரிப்பாளர் பொறுப்பேற்று ஓட்டாண்டியாக நின்ற ரமேஷ் இதற்கு ஒத்துக் கொள்ளவில்லை.

இந்நிலையில் முத்துலட்சுமி தொடர்பான காட்சிகளை நீக்கிவிட்டு படத்தை வெளியிடலாம் என நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இதன் காரணமாக விஜயலட்சுமியும், கிஷோரும் இணைந்திருக்கும் காட்சிகளை நீக்கிவிட்டு படத்தை வெளியிடும் வேலையில் மும்முரமாக இருக்கின்றனர்.

தான் சம்பந்தப்பட்ட காட்சிகளில் 90 சதவீதத்துக்கு மேல் வெட்டப்படுவதால் சோகத்தில் இருக்கிறார் விஜயலட்சுமி.

இருக்கத்தானே செய்யும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum