உடல் வெப்பநிலையை மருத்துவர்கள் பார்ப்பதேன்?
Page 1 of 1

மனிதனின் உடல் வெப்பம், உடம்பின் நிலையை அறிதற்குரிய குறிகாட்டும். நெறிபிறழ்ந்து அதிகமாகவோ குறைவாகவோ வெப்பம் இருக்குமானால் பொதுவாக உடலில் ஒரு தவறுண்டு என்பதற்கு அது அடையாளமாகும்.
உடலில் பொதுவாக இருக்கவேண்டிய வெப்பம் 36.9 செ. (98.4F) ஆனால் உடம்பின் வெப்பம் நாள் முழுவதும் மாறிக் கொண்டே இருப்பதால் கிட்டத்தட்ட 36.7 செ. (98.1F) முதல் 37.2 செ.மீ. (99.0F) வரை உள்ளதைச் சாதாரணமாக இருக்கவேண்டிய வெப்பம் எனக்கொள்ளலாம்.
சான்று நிகழ்ச்சியாக, பேருணவுக்குப் பின், கடும் வெயில், வலிந்து வன்மையாகச் செய்த பயிற்சிக்குப் பின்-வெப்பம் உயர்ந்து காணப்படுவதைக் காட்டலாம். உறங்கும்போது உடல் வெப்பம் இரவில், குறைவாக இருக்கும்.
வெப்ப உற்பத்திக்கும் வெப்ப இழப்புக்கும் இடையில் சமநிலையிருப்பதை உறுதிப்படுத்தும் மூளையின் மையப்பகுதியால் உடலின் வெப்பக் கட்டுப்பாடு செயல்படுத்தப்படுகிறது. அதிக வெப்பம், நச்சு, நுண்கிருமிகள் அல்லது தொற்று நச்சுத் தன்மைத் தாக்கத்திற்கு அடையாள மாகும். அது, கடும் வெப்பத்தினால் ஏற்படும் தாக்கம் (heart stroke), சில வகையான மூளைச் சேதம், சில நோய்கள், அதிர்ச்சி போன்றவற்றால் விளையக்கூடும்.
மிக அதிக வெப்பம் அல்லது காய்ச்சல், நடுக்கமும் குளிரும் கலந்து தொடங்கலாம். அதைக் குளிர் நடுக்கம் (rigor) என்பர். உடல் முழுவதும் கட்டுப்படுத்த முடியாத நடுக்கமும் பற்களை நெறுநெறு எனக் கடித்தலும் அப்போது நிகழும். இந்நிலையில் தோல் குளிர்ந்தும் ஈரமாயும் காணப்படினும் உடலின் உள்வெப்பம் மிகுந்து இருக்கும். விரைவில் தோல் சூடாகி வறண்ட தன்மை கொள்ளும். சுவாசித்தல் வேகமும், நாடித்துடிப்பும் விசைப்படுத்தப்படும். முழுச்சோர்வு, தசைவலி, தலைவலி, நீர்வேட்கை, ஒரு சமயம் சன்னி, கால உணர்வு இழத்தல் ஆகியவை ஏற்பட வாய்ப்புண்டு.
இந்த நிலை வியர்வையை அள்ளி வழங்குவதால் வெல்லப்பட்டு அல்லது நீக்கப்பட்டு இந்த மேற்கூறிய அடையாளங்கள் மெல்ல மறைந்து மாமூல் நிலை இறுதியில் கிடைக்கும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சாப்பிட உடனே டீ, தம் கூடாதாம்! மருத்துவர்கள் எச்சரிக்கை…!
» கர்ப்பிணிகள் பற்களை பாதுகாக்கனும்! மருத்துவர்கள் எச்சரிக்கை !!

» சாப்பிட உடனே டீ, தம் கூடாதாம்! மருத்துவர்கள் எச்சரிக்கை
» அதிகமா சாப்பிடாதீங்க மூளை முடங்கிவிடும்!–மருத்துவர்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum