சாப்பிட உடனே டீ, தம் கூடாதாம்! மருத்துவர்கள் எச்சரிக்கை…!
Page 1 of 1

உணவு உட்கொண்ட உடன் புகைப்பிடிக்கும், தேநீர் அருந்தும் பழக்கம் கொண்டவரா நீங்கள் அப்படியெனில் இது உங்களுக்குத்தான். உண்ட உணவு ஜீரணமாகும் முன்பே சிகரெட் பற்றவைத்தால் அது குடல் கேன்சர் ஏற்பட வழிவகுக்கும் என்று எச்சரித்துள்ளனர் மருத்துவர்கள்.
உணவு உண்டபின் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று மிகப்பெரிய பட்டியலே கொடுத்துள்ளனர் அவர்கள்.
இன்றைக்கு பலபேர் உணவு உண்டவுடன் அவசரமாக சிகரெட் பற்ற வைத்து உள்ளே இழுப்பார்கள். இது உடல் நலத்திற்கு தீங்கானது. சாப்பிட்டவுடன் பிடிக்கப்படும் ஒரு சிகரெட், பத்து எமனுக்குச் சமம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இதனால் குடல் புற்றுநோய் வரும் வாய்ப்பு பத்து மடங்கு அதிகரிக்க வாய்ப்பு உண்டாம். எனவே, சிகரெட்டுக்கு நோ சொல்லுங்க.
டீ கூடவே கூடாது.
சாப்பிட்டவுடன் டீ குடிக்கும் பழக்கம் பலருக்கு உண்டு. இது மிகவும் தவறான பழக்கமாம். அமிலத்தின் அளவு டீ இலையில் அதிகம் உள்ளது. அது நாம் உண்ணும் உணவில் உள்ள புரோட்டினை இன்னும் கடினமாக்கி, ஜீரணமாவதை மேலும் தாமதப்படுத்துமாம்.
வயிற்றில் களேபரம்
வயிறு முட்டச் சாப்பிட்டுவிட்டு, மூச்சுவிட முடியாமல் வயிற்றை இறுக்கிப் பிடிக்கும் பெல்ட்டையோ, அல்லது இடுப்புப் பகுதி ட்ரெஸ்ஸையோ லூசாக்கிவிட்டு ஃப்ரீயாக இருப்பார்கள் சிலர். அது கூடவே கூடாதாம். அப்படிச் செய்யும்போது வயிற்றில் மொத்தமாகத் தங்கியிருக்கும் உணவு, பெல்ட் லூஸானதும் தடக்கென்று குடலில் கீழிறங்கி, உள்ளே களேபர மாற்றங்கள் நிகழுமாம். அதனால் குடல் பாதிக்கப்பட்டு பல பிரச்னைகள் வரும். அதனால் முன்னாடியே பேன்ட், பெல்ட்டை தளர்த்தி விட்டு தட்டுக்கு முன்பு உட்காருவது ரொம்ப நல்லது.
வாழைப்பழம் கூடாது
நல்ல விருந்துச் சாப்பாடு என்றால், நம் பக்கம் வாழைப் பழம் சாப்பிட்டு முடிக்கிற வழக்கம் உண்டு. இது ஜீரணத்துக்கு நல்லது என்று கூறப்பட்டு வந்தது. ஆனால், இதுவும் தவறானது என்கின்றனர் ஆய்வாளர்கள். பழங்களுக்கும் நாம் தினமும் உண்ணும் உணவுக்கும் இருக்கும் குணங்கள் வேறுவேறு. இதனால் இரண்டும் சேர்த்து ஜீரணம் ஆவதற்கு இன்னும் தாமதமாகும். அதனால், சாப்பிட்டு முடித்து இரண்டு மூன்று மணி நேரம் கழித்து பழம் சாப்பிடுவதே நல்லது என்கின்றனர்.
சாப்பிட்ட உடனே குளியல்
சாப்பிட்ட வேகத்தில் பண்ணக் கூடாத இன்னொன்று குளியல். ஏனென்றால், குளிக்கும்போது தண்ணீரினால் கிடைக்கும் குளிர்ச்சியினாலும், கை, கால் என மசாஜ் போலத் தேய்ப்பதாலும் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் அதிகமாகும். இதனால் வயிற்றுப் பகுதிக்கு செல்லும் ரத்தத்தின் அளவு குறைந்து ஜீரணத்தைத் தாமதமாக்கும்.
தூங்காதீங்க ஜீரணமாகாது
வாக்கிங் செல்வது மிக நல்லது. ஆனால், சாப்பிட்டவுடன் வாக்கிங் கிளம்புவது நல்லதல்ல. உணவுக்குப் பிறகு குறைந்தது ஒரு மணி நேரம் கழித்தே நடக்க வேண்டும். சாப்பிட்ட வேகத்தில் கடினமான வேலைகளை அரக்கப்பறக்கச் செய்வதும் கூடாது. உணவுக்குப் பிறகு சற்றேனும் ஓய்வு முக்கியம். சாப்பிட்டவுடன் உறங்கச் செல்வதும் தவறு.
உடனடியாகத் தூங்குவதால், நாம் உண்ட உணவு ஜீரணமாகாமல் அப்படியே தங்கி குடல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு வழிவகுக்கும். எனவே இதுவரை செய்த தவறான பழக்கமெல்லாம் போதும் இனியாவது சரியா பின்பற்றுங்க என்கின்றனர் ஆய்வாளர்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சாப்பிட உடனே டீ, தம் கூடாதாம்! மருத்துவர்கள் எச்சரிக்கை
» அதிகமா டிவி பார்த்தா நீரிழிவு வரும்!: மருத்துவர்கள் எச்சரிக்கை
» உறவை பாதிக்கும் நீரிழிவு!: மருத்துவர்கள் எச்சரிக்கை
» கர்ப்பிணிகள் பற்களை பாதுகாக்கனும்! மருத்துவர்கள் எச்சரிக்கை !!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum