தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இளைத்தவனை கொளுத்தவனாக்கும் மூதிரா உருண்டை

Go down

 இளைத்தவனை கொளுத்தவனாக்கும் மூதிரா உருண்டை Empty இளைத்தவனை கொளுத்தவனாக்கும் மூதிரா உருண்டை

Post  meenu Sun Mar 03, 2013 12:55 pm

நம்மூரில் நெல்குதிர் இருப்பது போல கேரள மக்கள் வீட்டில் மூதிரா பானை இருக்கும். மூதிரா ரசம், மூதிரா உருண்டை, மூதிரா சுண்டல் என எல்லாமும் மூதிரா ஸ்பெஷலாக இருக்கும். நன்கு குழைந்த குண்டு சம்பா சாதத்தில் மூதிராவை பொடியோடு நல்லெண்ணெய் சேர்த்துப் பிசைந்து சாப்பிடும் வழக்கமும் அங்குண்டு.

எந்த தானியத்துக்கும் இல்லாத பல சிறப்புகள் மூதிராவுக்கு உண்டு. உண்ட உடனே உடலுக்குச் சக்தி தருவதில் இதற்கு இணையில்லை. இவ்வளவு மகத்துவம் பொருந்திய மூதிரா தமிழகத்தில் கிடைக்குமா என்றுதானே கேட்கிறீர்கள். தாராளமாக கிடைக்கிறது... நம்மூர் கொள்ளைத்தான் கேரள மக்கள் ‘மூதிரா’ என்கிறார்கள்!

கொள்ளு, உலகம் முழுவதும் பயன்பாட்டில் இருக்கும் தானியம். அரேபிய நாட்டில் இருந்து இது உலகெங்கும் பரவியது என்பார்கள். ஆதி தமிழகத்தில் இருந்தே வணிகம் வழியாக வெளிநாடுகளுக்குச் சென்றது என்பாரும் உண்டு. எப்படியாயினும் கொள்ளை ‘அருமருந்து’ என்கிறது சித்த மருத்துவம். ஆயுர்வேதமும் கொள்ளை கொண்டாடுகிறது.

அரேபிய குதிரைகள் உலக அளவில் சிறப்பிடம் பெற்றதற்கு கொள்ளுதான் பிரதான காரணம். அது மனிதர்களின் உணவானது பற்றி சுவாரஸ்யமான கதை உண்டு. அரேபிய இளவரசன் ஒருவன் மிகவும் நோஞ்சானாக இருந்தான். நாட்டை ஆளப்போகும் இளவரசன், இப்படி உடல்தளர்ந்து எப்போதும் படுக்கையிலேயே கிடந்தால் எப்படி? அரசனான தந்தைக்கு பெரும் கவலை. திறன்கொண்ட மருத்துவர்கள் எல்லாம் பார்த்தும் பலனில்லை. கைவிரித்து விட்டார்கள். எதற்கும்

உதவாத இளவரசனை குதிரை லாயத்தில் போட்டுவிட ஆணையிட்டார் மன்னர். குதிரை லாயத்தில் அடைக்கப்பட்ட இளவரசனை கொஞ்ச நாள் பராமரித்து விட்டு பின்னர் எல்லோரும் மறந்து விட்டார்கள். பசியால் துடித்த இளவரசன், வேறுவழியின்றி குதிரையின் உணவாக வைக்கப்பட்ட கொள்ளையே தின்று பசியாறினான். மருந்தாகவும் வேலை செய்தது கொள்ளு. சில மாதங்களில் உடல்தேறி, கம்பீரமானான் இளவரசன். அவன் தேஜஸில் மயங்கி அண்டை மன்னர்கள் எல்லாம் பெண் கொடுக்க வந்தார்கள்.

ஆட்சிப் பொறுப்பேற்ற இளவரசன் பல்வேறு நாடுகளை வென்று பெரும் வீரனாகத் திகழ்ந்தான் என்று நீள்கிறது அந்த அரேபியக் கதை! இளைத்தவனை கொளுத்தவனாக்கும், கொளுத்தவனை இளைத்தவனாக செய்யும். இதுதான் கொள் மகத்துவம். உடலில் இருக்கும் கெட்ட நீரை ஏதோ ஒரு வழியில் வடியச் செய்துவிடும். கிராமப்புறங்களில், ஜலதோஷம் பிடித்து, காய்ச்சல் கண்டவர்களுக்கு கொள்ளு ரசம் தருவார்கள். அவியல், துவையல், ரசம், பொறியல் என பல வகைகளில் கொள்ளை உட்கொள்ளலாம்.

கேரளாவின் மலைப்பகுதிகளில் தானிய சாகுபடி பெருமளவு நடக்கிறது. வேட்டைத் தொழில், மேய்ச்சல் தொழில் நசிவால் வேளாண்மைக்கு தள்ளப்பட்ட பழங்குடி மக்களுக்கு தானிய சாகுபடியே வாழ்வாதாரம். மூணார் ஒட்டிய மலைப்பகுதிகளில் ஊராளி பழங்குடிகள் விதைப்புக் காலத்தில் தானியங்களை அவித்து, மலைஉச்சியிலிருந்து, பறவையினங்களுக்கு உணவாக வாரி வீசுவார்கள்.

அதைத் தின்று செரித்து, தங்கள் வயற்காடுகளுக்கு வந்து எச்சமிட்டு உரமூட்டி சாகுபடியை உயர்த்தித்தர வேண்டும் என்பதே நோக்கம். இப்படியான ஒரு வழிபாட்டுக்குரிய பதார்த்தம்தான் மூதிரா உருண்டை. நவராத்திரி கொண்டாட்டத்தில் 9ம் நாளன்று இந்த மூதிரா உருண்டையை செய்து வைத்து சரஸ்வதியை வழிபட்டால் ஞானம் பெருகு வதோடு, உடல்வலிமையும் அதிகரிக்கும் என்பது அம்மக்களின் நம்பிக்கை!
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum