தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மே 1 - அ‌‌ஜீத் ரசிகர்களுக்கு ஏமாற்றம்

Go down

 மே 1 - அ‌‌ஜீத் ரசிகர்களுக்கு ஏமாற்றம் Empty மே 1 - அ‌‌ஜீத் ரசிகர்களுக்கு ஏமாற்றம்

Post  ishwarya Sat Mar 02, 2013 5:57 pm

மே 1 அ‌‌ஜீத்தின் பிறந்த நாள். எஸ்.எஸ்.சக்ரவர்த்தியின் நிக் ஆர்ட்ஸுக்கு அ‌‌ஜீத் தொடர்ச்சியாக படங்கள் நடித்த போது மே 1 அவ‌ரின் பிறந்த நாளில் அவர் நடித்தப் படங்கள் வெளியாகும். அ‌‌ஜீத்தின் ரசிகர்களுக்கு அது இரட்டை தீபாவளியாக இருந்தது.

கடந்த சில வருடங்களாக ஒரே தீபாவளிதான். மே 1 அ‌‌ஜீத்தின் படங்கள் ‌ரிலீஸாவதில்லை. பில்லா 2 மே 1 வெளியாகும் என காத்திருந்து கடைசி நேரத்தில் ஏமாந்தனர். தற்போது அண்டர் புரொடக்சனில் இருக்கும் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அ‌‌ஜீத் நடிக்கும் படம் - வலை என்று வொர்க்கிங் டைட்டில் வைத்துள்ளனர். விரைவில் இது மாற்றப்படும் - மே 1 அ‌‌ஜீத்தின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என ரசிகர்கள் நம்பியிருந்தனர்.

ஆனால் மே 1 படம் வெளியாகப் போவதில்லை என்பது அ‌‌ஜீத் ரசிகர்களுக்கு துன்ப அதிர்ச்சியை தந்திருக்கிறது.

தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு துபாயில் நடந்து வருகிறது. முக்கியமான சண்டைக் காட்சியை படமாக்கி வருகின்றனர். துபாய் ஷெட்யூல் முடிந்த பிறகு சென்னையில் படப்பிடிப்பு நடக்கவுள்ளது. மே மாதத்திற்கு இன்னும் நிறைய நாட்கள் இருந்தாலும் படப்பிடிப்பு, போஸ்ட் புரொடக்சன் முடிந்து படம் வெளியாக ஜூன் அல்லது ஜூலை ஆகிவிடும் என தயா‌ரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தெ‌ரிவித்துள்ளார்.

இந்த செய்தி அ‌‌ஜீத் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை தந்துள்ளது.
அஜீத் படம், மே 1, விஷ்ணுவர்தன்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum