நவராத்திரியும் உடல்நலமும்
Page 1 of 1
நவராத்திரியும் உடல்நலமும்
நவராத்திரி என்றாலே பெண்களுக்கான விழா என்பது பலரும் அறிந்ததே. 9 நாட்களும் விரதமிருந்து சக்தி வழிபாட்டை மேற்கொள்வதால் பல்வேறு பலன்களை அடையலாம்.
ஆனால், நவராத்திரி கொலு வைத்திருக்கும் பெண்கள் விரதமிருப்பதற்கு முன்பு, தங்களது உடல்நிலையைப் பற்றி கருத்தில் கொள்ள வேண்டும்.
வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் விரதமிருந்துதான் இறைவழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை.
விரதமிருப்பதால் உடலில் பலவீனம் ஏற்படலாம். பசியோடு எந்த வேலையைச் செய்தாலும் அதில் மனம் ஒட்டாது. எனவே, விரதம் என்ற பெயரில் உடல்நிலையைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம்.
அப்படியே விரதமிருக்க வேண்டும் என்றால், பழங்கள் அல்லது பழச்சாறு போன்றவற்றை அருந்தலாம். அடிக்கடி தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தால் அல்சர் வராமல் தடுக்கலாம்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum